இணைந்து கொள்வேம்

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை
வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, 'அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு' எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். 'வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது' என்று நிரூபித்தவர்கள்.
 
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
 
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. 

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.
தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
 
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.
 
2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.
 
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா 
எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா 
ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் 
தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா 
நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா 
நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா 
பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா 
இன்குலாப் கவிஞர், இந்தியா 
சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா 
புவியரசு கவிஞர், இந்தியா 
பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா 
கலாப்ரியா கவிஞர், இந்தியா 
பழமலய் கவிஞர், 
இந்தியா சேரன் கவிஞர், கனடா 
மாலதி மைத்ரிகவிஞர், 
இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா 
கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா 
தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா 
புனித பாண்டியன் இதழாளர், இந்தியா 
காமராசன்பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா
 கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா 
அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் 
காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா 
க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ்
சுகிர்தராணி கவிஞர், இந்தியா 
அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா 
க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா 
நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா 
அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா 
கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா
 வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா 
அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா 
புகழேந்தி ஓவியர், இந்தியா 
பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா
கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன்கவிஞர், இந்தியா 
கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா 
பொதியவெற்பன் பதிப்பாளர், 
இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா 
ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா 
அமரந்தாமொழிபெயர்ப்பாளர், இந்தியா 
க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் 
மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா
செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா 
தளவாய் சுந்தரம்ஊடகவியலாளர், இந்தியா 
பாலா கார்டூனிஸ்ட், இந்தியா 
பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா
 ஜனநாதன் திரைப்பட இயக்குநர்,இந்தியா 
அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், 
இந்தியாஎஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா
 ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா 
யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா 
ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா
பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா 
லெனின் ஊடகவியலாளர், இந்தியா 
மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா 
முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் 
சுபாஷ்திரைப்பட இயக்குநர், நோர்வே 
ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா 
டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா 
ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன்மொழிபெயர்ப்பாளர், இந்தியா 
பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா 
எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து 
சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து 
டி. எஸ். எஸ். மணிபத்திரிக்கையாளர், இந்தியா 
இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், 
இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா 
லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா 
அருள் எழிலன்பத்திரிக்கையாளர், இந்தியா 
ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா 
வளர்மதி நாடகாசிரியர், இந்தியா 
அறிவன் விமர்சகர்,இந்தியா 
நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா 
ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா 
ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், 
இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா 
மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா
பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா 
ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா 
ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே 
வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா 
ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், 
இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா 
பாமரன் விமர்சகர், இந்தியா 
அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா 
ரஃபேல்கோட்பாட்டாளர், கனடா 
சிவதாசன் இதழாளர், கனடா 
இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து 
எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் 
பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா 
டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் 
அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் 
நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி 
முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து 
அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா 
கவிமதி கவிஞர், துபாய் 
பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் 
பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா 
ஜென்ராம் ஊடகவியலாளர்,இந்தியா 
அன்பாதவன் கவிஞர், இந்திய 
அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா 
சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து 
கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா 
ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா 
குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், 
கஜேந்திரன்ஊடகவியலாளர், இந்தியா 
கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா 
ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா 
அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா 
தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா 
சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா 
தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா 
ஓவியா விமர்சகர், இந்தியா 
தமிழ்நதி கவிஞர், கனடா 
ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா
இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா 
மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா 
என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா 
பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா 
வீ. அரசு ஆய்வாளர், இந்தியா 
அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா
 சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா 
தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் 
அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா 
தேடகம் தோழர்கள், தேடகம், கனடா 
கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா 
நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து 
மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து 
யமுனா ராஜேந்திரன்கோட்பாட்டாளர், இங்கிலாந்து 
இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் மு. புஷ்பராஜன், இங்கிலாந்து காலம் செல்வம், கனடா கி. பி. அரவிந்தன், பிரான்ஸ் யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து கண. குறிஞ்சி, இந்தியா அருள் எழிலன், இந்தியா கீற்று நந்தன், இந்தியா.
 
இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
ONRINAIWOM INIYUM MANDIYIDA MAATOM MADINTHA EEZHANIN UTHIRAM KONDU SINAM KONDA SINKALATHAI INAM THERIYAAMAL ALIPOM

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்