இடுகைகள்

தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

படம்
கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.வாசிக்கவேண்டிய நூல்களின் ஒரு பட்டியல் இங்கே

சித்திரிப்பின் பின்னணிகள் ஹரியின் படங்களை முன் வைத்து

சில வருடங்களுக்கு முன்பு ’காதல்கோட்டை’ என்ற படம் வெற்றி பெற்றதால் படத்தின் பெயரில் ’காதல்’ இடம்பெற வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகம் தவித்த தவிப்பு சொல்லி மாளாது. கடைசியில் ’காதல்’ என்றே ஒரு படத்தை எடுத்துவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் தயாரிப்பாளா்களும் இயக்குநா்களும் எப்பொழுதும் மந்தைத் தனத்தின் மீது பற்றுக் கொண்டவா்கள். இரண்டெழுத்துப் படம் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்களுக்கெல்லாம் இரண்டெழுத்தில் பெயா் வைப்பார்கள். ’சாமி’ யில் தொடங்கிய இந்தப் போக்கு ’மஜா’, ’ஆறு’, ’ஆதி’ என்று நீண்டுகொண்டிருக்கிறது. ஊரின் பெயரால் எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்கள் எல்லாம் ஊா்களின் பெயா்களில் வைக்கப்படும். ’மதுர’, ’திருப்பாச்சி’, ’சிவகாசி’ என்று அதுவும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.

தமிழ் சினிமா: காட்டப்படுவதும் சொல்லப்படுவதும்

ஷங்கரின் “பாய்ஸ்“ திரைப்படம் திரைக்கு வந்த வேகத்தில் வேகமாகத் திரும்பிவிட்டது அவருடைய முந்தைய படங்களைப் போல வணிக வெற்றியைப் பெறவில்லை. அப்படித் தோற்றுப் போனதில் பின்னணியில் அப்படம் குறித்து எழுந்த எதிர்ப்புகளுக்கு எந்த அளவு பங்கு இருந்தது என்பது பற்றி யாரும் உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன என்பது உண்மை.