இடுகைகள்

கி.ராஜநாராயணன் - புதுச்சேரி - நான் -1

படம்
1 . அமெரிக்கன் கல்லூரி, இரண்டாமாண்டு பட்டப்படிப்பில் சிறுகதை வகுப்பு. பேரா.சுதானந்தா வட்டார இலக்கியம் என்ற வகைமைப்பாட்டை விளக்கிச் சொல்லிவிட்டு “கதவு” கதையை வகுப்பிலேயே வாசிக்கச் சொன்னார். வகுப்பு முடியும்போது நமது துறை நூலகத்தில் அவரது நூல்கள் உள்ளன. இன்று மாலை நூலகம் திறந்திருக்கும். விரும்புபவர்கள் எடுத்துச் சென்று வாசிக்கலாம் என்றார்.  நூலகத்திலிருந்து  கோபல்ல கிராமத்தை - வாசகர் வட்டம் வெளியீடு – எடுத்துக் கொண்டேன்.

சேவாலயத்தோடு சில நினைவுகள்

படம்
சீடு அமைப்பின் மார்கழிக்கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாகப் பிரபாகர் இயக்கிய ‘மனைவியர் பள்ளி’ நாடகம் (மோலியரின் மூலத்தைத் தழுவிய நாடகம்)  ஷெனாய் நகரில் இருக்கும் சேவாலய வளாகத்தில் நடக்கிறது என்பதைக் கூகுள் வரைபடத்தோடு அனுப்பி வைத்தனர் பிரபாகரும் கார்த்திக்கும்.  பழைய அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் நகரப்பேருந்தில் ஏறினால் ஷெனாய் நகரில் இறங்கிக் கொள்ளலாம். 

பண்பாட்டு அரசியலை முன்வைத்த மறுபேச்சுகள் -ந.முருகேசபாண்டியன்.

படம்
1981 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு இடைவேளையின்போது துறை அலுவலகத்திற்குப் போய்க், கடிதம் எதுவும் எனக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்பொழுது தற்செயலாகப் பார்த்த அஞ்சலட்டையில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மாதந்திரக் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. அதுவும் அந்தக் கடிதம் முதலாமாண்டு படிக்கிற அ. ராமசாமி என்ற மாணவர் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இடதுசாரிப் பின்புலத்தில் இளம் மாணவரா? என்று யோசித்தவாறு அஞ்சலட்டையை எடுத்துக்கொண்டு முதலாமாண்டு வகுப்பிற்குப் போனேன். ”யாருங்க ராமசாமி?” என்ற எனது கேள்விக்கு நான்தான் என்று எழுந்து வந்த மாணவர் பின்னர் எனக்கு நெருக்கமானார்.

விஜய்காந்த் : நினைவுகளும் அரசியலும்

படம்
மறைவின் போது ஓர் அரசியல்வாதி அடையாளத்துடன் தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டுள்ள விஜய்காந்த் குறித்துப் பல்வேறு நினைவுகள் எனக்குண்டு. அரசியல்வாதி என்பதைத் தாண்டி, நடிகராகவும் மதுரைக்காரராகவும்.

திரைப்படைப்புகளின் கூர் முனைகளும் மழுங்கு முனைகளும் -மதியழகன்

படம்
மனிதர்கள் தங்கள் எஞ்சிய பொழுதைக் கழிக்க தேரும் ஒரேயொரு விஷயமாக திரைப்படங்கள் அல்லது அதன் துண்டுக் காட்சிகள் விளங்கி வருகின்றன. திரைப்படங்களைத் தாண்டி வேறு பொழுதுபோக்கில்லை. சுகிசுக்கவும், விவாதிக்கவும், முரண்படவும் இறுதியாகக் கொண்டாடவும் முதன்மையாக இருப்பன திரைப்படங்கள் மட்டும்தான். திரைப்படக்கலையின் பல்லாயிரம் முனைகளின் ஏதாவது ஏதாவதொரு முனை குறித்து மணி கணக்கில் பேசிட அடித்தட்டு மக்கள் வரைக்கும் தகவல்களும் வியப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படி எல்லாத் தட்டு மக்களும் அறிந்திருக்கும் சினிமாக்கலையின் கூர்முனைகளையும் மழுங்கு முனைகளையும் ஆய்ந்து பதிவுசெய்ய வேண்டிய அவசியம் அறிஞர்களுக்கு இருக்கிறது. இந்நூலில் ஆழமாகவும் தெளிவாகவும் அக்கரையுடனும் பன்முனைப் பார்வைகளும் சீரியப் பார்வைகளும் என சிறப்பாய் ஆய்ந்துதுள்ளார் அ. ராமசாமி அவர்கள்.

பல்துறை வாசிப்பினூடாக இந்தப் பயணம்.. -கவி.கருணாகரன்

படம்
இலக்கிய வாசிப்பும் விமர்சனமும் என்ற அடிப்படையில் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சமகால ஆளுமையாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் அ. ராமசாமி. அ.ரா, தொழில் மற்றும் கற்கை ரீதியாக நாடகம், மொழி,இலக்கியம் ஆகிய துறைகளைக் கொண்டவராக இருந்தாலும் அவருடைய ஈடுபாட்டுப் பரப்பானது சினிமா, அரசியல், சமூகவியல், பண்பாடு, இலக்கியம், வரலாறு, நாடகம், மொழி எனச் சமூகத்திலும் வரலாற்றிலும் கலந்து ஊடாடிச் செல்லும் துறைகளோடும் விரிந்தது. இன்னும் நுணுகிப் பார்த்தால் இந்த எல்லை மேலும் விரிந்து பெண்ணியம், தலித்தியம், திராவிடவியல், பெரியாரியல் எனவாகச் செல்வதையும் காணலாம். அடிப்படையில் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. ஒரு வட்டத்திலிருக்கும் பல்வேறு பகுதிகள். ஒன்றின் மீது ஈடுபாடும் ரசனையும் பரிச்சயமும் வந்து விட்டால், பிறகு அனைத்தின் மீதும் அது பரவிக் கொள்ளும்.

மழையும் மழைசார்ந்தனவும் -10

படம்
மழை 100 என முடிக்க நினைத்த இந்தத் தேடல் 102 உடன் முடிந்துள்ளது. வசனகவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை என அறியப்பட்டுள்ள வடிவத்திற்குள் இப்படியான 100, 100 ஆக வெவ்வேறு தலைப்புகளில் வகைப்பிரித்துக் காட்டுவதின் மூலம் தமிழ்க்கவிதைகளை வாசிக்கமுடியும். கடைசிப்பத்தில் சுகுமாறன், ஈழவாணி,செல்மா பிரியதர்ஸன், அய்யப்ப மாதவன், பெருமாள் முருகன், எஸ்.செந்தில்குமார், ஸர்மிளா செய்யித், வா.மணிகண்டன், இளங்கோ கிருஷ்ணன், பொன்.வாசுதேவன், நிலா ரசிகன், சுகிர்தராணி ஆகியோரின் 12 கவிதைகள்.