இடுகைகள்

இந்திய ஞானமார்க்கத்தில் வள்ளலாரின் சன்மார்க்கநெறி

படம்
மனிதகுல வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. மனிதர்களின் தோற்றம் பற்றிய அறிவியல் பார்வைகள் உருவாகியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளாகவே மொழிகள், கலைகள், கருத்துகள் போன்றனவும் என்ற கருத்தும் உருவாகியிருக்கின்றன. ஆனாலும் மனிதத் தோற்றம் பற்றிய சமயங்களின் கருத்துகள் வேறாக இருக்கின்றன. மனித உருவாக்கம் கடவுளால் நிகழ்ந்தது என்ற கருத்தே பெரும்பாலான சமயங்கள் சொல்லும் முன்வைப்பு. இந்த முன்வைப்பின் தொடர்ச்சியாகவே, மொழியின் தோற்றம், கலைகளின் தோற்றம், கருத்துகளின் தோற்றம் பற்றியனவும் கடவுளோடு தொடர்பு கொண்டனவாக நம்பப்படுகின்றன.

மொழி அரசியல்: மதவாத அரசியல் இணையும் புள்ளிகளும் விலகும் தடங்களும்

படம்
காசி தமிழ்ச்சங்கமம்-2022 சங்கமம்: சங்கமம் என்ற சொல்லுக்கு முன்னால் ‘தமிழ்’ இணைக்கப்பட்டுத்                ‘தமிழ்ச்சங்கமம்’ என்றொரு நிகழ்வு இம்மாதம் – நவம்பர் 16 ஆம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. நடக்கும் இடம் காசி. சங்கமம் என்பது கூடுகை; சங்கமம் என்பது கலத்தல்; சங்கமம் என்பது ஆறு.

ரஜினிகாந்தின் பாபா: ஆன்மீக அரசியல்

படம்
பாபா படத்தை இரண்டு தடவை பார்த்தேன்.  முதல்நாள் தீவிரமான ரசிகர்களுடன் – அவா்களின் ஆரவாரத்துடன், ஆராதனைகளுடன், ஆவேசத்துடன் படம்பார்த்தபின் திரும்பவும் பத்தாவது பார்த்தேன்;     பின்னிரவுக் காட்சி, டிக்கெட் வாங்குவது அவ்வளவு சிரமமாக இல்லை. பத்து ரூபாய் கூடுதலாக விற்றார்கள். இருபது ரூபாய்க்குப் பதில் 30 ரூபாய். மணி 10.25க்கு அரங்கிற்குள் நுழைந்தபோது, பாதி அரங்கம் காலியாக இருந்தது.

பாபா முதல் சந்திரமுகி வரை

படம்
மூன்று முகங்கள் பாபா படத்தின் மூலமாகச் சறுக்கலைச் சந்தித்தபோது அவர் அப்படியே சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு திரைப்படத்துறையினரிடமிருந்து வந்தது என்பதைவிட அதற்கு வெளியே இருந்தவர்களிடமிருந்தே வந்தது. அவரால் மட்டுமல்ல; தனது வாழ்க்கையின் சரிபாதிக்காலத்தை ஒரு துறைக்கு ஒப்புக்கொடுத்த யாராலும் அந்தத் துறையைவிட்டு ஒதுங்கிவிட முடியாது. மூன்றுமுகம் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த வெற்றிப்படம். இன்றைய ரஜினி தனது சொந்த வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக் கொண்ட மூன்று முகங்கள் அதிலிருந்து வேறுபட்டவை. ஆன்மீகம், அரசியல், நடிகன் ஆகியவைதான் அந்த முகங்கள்.ஆன்மீக முகம் அந்தரங்கமானது. தனிமனிதர்களின் வாழ்க்கையில் அடியோட்டமாக இருக்கும் அந்த அடையாளம் எப்படிப்பட்டது என்பதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாதது. ஆனால், அரசியல் முகம் அப்படிப்பட்டதில்லை. பெருந்திரளை ஒன்று திரட்டுவதையும், வழிநடத்துவதையும் பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டியது. அந்தரங்கத்தையும் வெளிப்படைத் தன்மையையும் ஒருசேரக் கொண்டிருப்பது நடிகன் என்ற அடையாளம். ரஜினியைப் பொறுத்தவரையில் நடிக

மண்ணின் மைந்தர்களும் .........

இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

முனைவர் தே.ஞானசேகரன்- கல்விப்புல எல்லைகளைத் தாண்டியவர்.

படம்
இன்று முற்பகலில் (நவம்.24) பேரா.தே.ஞானசேகரனின் மறைவுச் செய்தி அலைபேசி வழியாகவும் முகநூல் குறிப்புகள் வழியாகவும் வந்து சேர்ந்தன. ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் மரணம் என்பதை ஏற்கமுடியவில்லை.

வரலாற்றுவாதத்தின் சிக்கல்கள்

மக்கள் உரிமைகளையும் விடுதலையையும் முன்னெடுக்க நினைக்கும் சமுதாய இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் வரலாறு படைப்பது பற்றிய அக்கறைகளை விட வரலாற்றைப் பயன்படுத்துவது பற்றியே அதிகம் சிந்திக்கின்றன. கடந்த காலம் தரும் படிப்பினைகள் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும் எதிர் காலத்தை வடிவமைக்கவும் உதவும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. தனிநபர் சார்ந்து பல நேரங்களில் இந்த நம்பிக்கை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் திரள் மக்கள் இயக்கங்கள் முன் வைக்கும் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் அது அப்படியே பொருந்தக் கூடியதுதானா? என்பது தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.