இடுகைகள்

சல்காவின் கதையைச் சொல்லும் ரைனா

படம்
  பெயரையே தலைப்பாக வைத்து எழுதப்படும் இலக்கியப்பனுவல்கள், அந்தப் பெயருக்குரியவரின் பெருமைகளை அல்லது துயரங்களை விவரித்து நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டனவாக விரியும். தமிழின் இராமவதாரம் என்னும் இராமாயணம் நல்ல உதாரணம். உலகப்புகழ்பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் லியர் அரசன், மேக்பத்,ஹாம்லட் போன்றனவும் பெயர்களைத் தலைப்பாக்கிய நாடகங்களே . அவையும் அந்தப் பெயர்களுக்குரியவரைக் குறித்த சொல்லாடல்களையே முதன்மைப்படுத்துவன . இதற்கு மாறானவைப் பெயரைத் தலைப்பாக்காது பெயருக்குரியவர்களின் குணத்தையோ இருப்பையோ தலைப்பாக்குபவை. இப்சனின் பொம்மைவீடு, மக்கள் பகைவன் போன்ற நாடகத்தலைப்புகள் இதற்கு உதாரணங்கள். தமிழின் ஆகக்கூடிய சிறப்புகளைக் கொண்ட சிலப்பதிகாரமும் அதற்கான உதாரணம்தான். இவை தனிமனிதர்களின் பாடுகளைப் பொதுநிலையில் விவாதிக்க விரும்புவன.

திரும்பத்திரும்ப சந்திரமுகி

படம்
    ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி – ஒரு சித்திரை முதல் நாளில் அரங்கிற்கு வந்தது.அதற்கிணையான விளம்பரங் களோடும் நடிக முக்கியத்துவத்தோடும்   கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸும் விஜய் நடித்த சச்சினும் அதே நாளில் திரையரங்குகளுக்கு வந்தன. நடிகர்களை மையமிட்டுத் தெரிவுசெய்யும் எனது மனம் கமல், ரஜினி, விஜய் என்றே வரிசைப்படுத்தி முதலில் மும்பை எக்ஸ்பிரஸையும் இரண்டாவதாகச் சந்திரமுகியையும் கடைசியாகச் சச்சினையும் பார்த்தேன்.   மொழி , இனம் , சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம் , பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அந்நாட்களின் சிறப்பு  நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும்   பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். அ ந்த ஆண்டு சித்திரை முதல் நாள் இந்த மூன்று படங்கள் வெளிவந்தன.   மூன்று படங்களில் திரும்பத்திரும்பப் பார்க

சாதி அடையாளம் நோக்கி

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘ ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்ற அடையாள அரசியலை முன்வைத்துப் புதிய நகர்வைச் செய்யவேண்டும் என்று அதன் பொதுச்செயலாளர் திரு. ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) பேசியதை மேற்கோளாகக் காட்டிச் சில நாட்களுக்கு முன்பு இந்து தமிழ் திசை ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அதனை விரித்து ஆங்கில இந்துவும் செய்திக்கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. ‘ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்பது காலத்தின் தேவையாக இருக்கலாம். உள்சாதி அடையாளங்களை முன்னெடுக்காமல் பெருஞ்சாதிகளாகக் காட்டுவதின் மூலம் தேர்தல் அரசியலில் கூடுதல் பங்கைப் பெறமுடியும் என்பது நடைமுறையில் ஏற்கத்தக்கதும்கூட.

ஒற்றை ரீல் இயக்கம்: மாற்று ரசனைக்கான முயற்சி

படம்
  மாற்றுகளை முன்வைத்தல் வெகுமக்கள் பண்பாடு வெறும் நுகர்வுப் பண்பாடாக மாறிவருகிறது; அதற்கு வெகுமக்களைத் தேடிச் செல்லும் ஊடகங்களும் நாடகங்களும் துணையாக இருப்பதோடு முக்கிய காரணிகளாகவும் இருக்கின்றன. அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.வெகுமக்கள் இதழியலுக்கு மாற்றாகச் சிறுபத்திரிகைகள் என்ற கருத்தோட்டத்தின் தொடர்ச்சியாக, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களுக்கு மாற்றாக தீவிர இலக்கியம் என்ற கருத்துக்களும் செயல்பாடுகள் முன் வைக்கப்பட்டன.

அடையாள அரசியலும் பெரும்பான்மை வாதமும்

படம்
தேர்தல் அரசியல் என்பது எண்களின் அரசியல். ஆனால் அதற்குள் செயல்படுவது கருத்தியல். கருத்தியல்கள் சார்புநிலைகொண்டவை. உலகம் முழுவதும் அதுதான். எந்தவொரு நாடும் விலக்கானவை அல்ல. இந்தியா உள்பட. பால், பாலினம், அதுசார்ந்து உருவாகும் உரிமை, சமத்துவம், விடுதலை என்ற சொல்லாடல்களும் பாலியல் அரசியலின் கருத்தியல்கள். அதைப்போலவே சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமயஞானம் என்பது தனிமனிதத்தன்னிலைகளை உருவாக்கும் அடையாளங்கள். சமயவியல் அரசியலின் கருத்தியல்கள். அடையாள அரசியல் உலக அளவில் - பின் நவத்துவம் சிந்தனையாகவும் வாழ்முறையாகவும் மாறியபின் கிளர்ந்தெழுந்த அரசியல் சொல்லாடல்கள். இவ்விரண்டையும் இந்தியச் சூழலில் பெரும்பான்மை அரசியல் முற்றாக நிராகரிக்கப் பார்க்கிறது. குறிப்பான இரண்டு எடுத்துக்காட்டுகளின் வழி விவாதிக்கலாம்.

மிதுனாவின் நுரைப்பூக்கள்: கரோனாக் காலத்துப் பொன்னகரம்

கனலியில் பதிவேற்றம் கண்டுள்ள ‘நுரைப்பூக்க ள் ’ கதையை எழுதியிருக்கும்  ‘ மிதுனா ’ உண்மையான பெயரா? புனைபெயரா? என்பது தெரியவில்லை. பெண்ணின் பெயர்போலத் தோன்றினாலும் ஆணாக இருக்கவும் வாய்ப்புண்டு என்ற சந்தேகமும் தோன்றுகிறது. அதே நேரத்தில் அவர் புதுமைப்பித்தனின் பொன்னகர ம் கதையை வாசித்தவர் என் பது உறுதியாகத் தெரிகிறது.  மிதுனாவின் நுரைப்பூக்களும் புதுமைப்பித்தனும் பொன்னகரமும் எல்லா விதத்திலும் ஒன்றுபோல -நகலாக - இருக்கின்றன என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் கதை அமைப்பும் பின்னணியும் எழுப்பும் கேள்வியும் அதன் வழியாக எழுப்பப்படும் விசாரணையும் ஒன்று என்ற வகையில் பொன்னகரத்தை வாசித்த மனத்தின் ஒரு வெளிப்பாடே நுரைப்பூக்கள் என்று உறுதியாகச் சொல்லமுடிகிறது.