இடுகைகள்

எதிர்மறை விமரிசனத்தின் பின்விளைவு

அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமரிசனக்குறிப்பு ப.தெய்வீகனின்”உச்சம்” கதையை உடனடியாக வாசிக்க வைத்துவிட்டது.நீண்ட காலப் போரின் -புலம்பெயர் வாழ்வின் - உளவியல் நிலைப்பாடுகளை எழுதிப்பார்க்கும் தெய்வீகனின் இன்னொரு கதை என்ற அளவில் வாசிக்கத்தக்க கதை. புலம்பெயர் தேசங்களின் வாழ்முறை தரும் சுதந்திரத்தை - வாய்ப்புகளை - மரபான தமிழ்க்குடும்ப அமைப்புகளிலிருந்து விலகியவர்கள் சோதித்துப் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்துவிட வாய்ப்புகளுண்டு. இக்கதையின் எண்ணவோட்டங்களும் நிகழ்வுகளும் இந்தியச் சூழலில் - இலங்கையின் சூழலிலும்கூட அரியன. வெளியில் சொல்லப்படக்கூடாதன. 

கலைஞர் மு. கருணாநிதி:காலத்துக்கும் நினைக்கப்பட வேண்டியவர்

படம்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்பது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை.சிலர் இதனை மறுத்து நேற்று இருந்தேன்; இன்று இருக்கிறேன்; நாளையும் இருப்பேன் என்று உறுதிகாட்டுகிறாகிறார்கள். அவர்களைச் சாவு நெருங்கிவதில்லை. 

ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் : திலகவதியின் போன்சாய்ப் பெண்கள்

படம்
உரிமைகோரிப் போராடும் அமைப்புகளாக வடிவம் கொண்ட பெண் அமைப்புகளின் தோற்றம் ஐரோப்பா 18 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் துளிர்விட்டது. அடுத்த நூற்றாண்டில் அவை வேலை வாய்ப்பு, பொதுவெளி உரிமைகள், வாக்குரிமைகள் என நகர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இலக்கிய உருவாக்கத்திலும் விமரிசனத்திலும் தடம் பதித்தன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஓரளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் பெண்ணிய இயக்கங்கள் தங்களை வலுவான தரப்பாக நிலைநிறுத்திக்கொண்டன. 1960-களில் முழுமை பெற்ற பெண்களின் செயல்பாடுகள் சார்ந்த இயக்கங்களின் நேரடி விளைவாகவே பெண்ணியத் திறனாய்வும் வலுப்பெற்றது. 

அடையாளப்பிரதிகளும் அடையாளம் தேடும் முகங்களும்……

படம்
· பல்வேறு மாநிலங்களின் பாராம்பரியக் கலைகளிலிருந்து  உருவாக்கி, இந்திய நாடகம் (Indian Theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா….?  இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறுதலித்து, ‘ இந்தியா ஒரு நாடு’ எனப் பேசுகிறவர்களும் நம்புகிறவர்களும், ‘இந்திய நாடகத்தை’ உருவாக்கி விடலாம் என நம்புகின்றனர்.ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவற்றின் பண்பாட்டுத் தனித் தன்மைகள் ஆகியவற்றில் நம்பிக்கையுடையவர்கள் மொழிவாரி நாடகத்தை (Language or Vernacular theatre) முன்னிறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் கொண்ட அரங்கைத் தேடுகின்றனர். தமிழ் அடையாளங்கள் கொண்ட ஒரு அரங்கை - தமிழ் நாடகத்தை (Tamil theatre) கட்டமைக்க முயல்கின்றனர். இவ்விரு முயற்சியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே சாத்தியமா என்றால் பதில் சாத்தியமில்லை என்பது தான்.

சேரனும் தங்கரும்: ஆண் மைய சினிமாக்காரா்கள்

படம்
சொல்லமறந்த கதை – நாவலாசிரியா் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்களின் திரைப்பட வடிவம். திரைப்பட வடிவமாக்கி நெறியாள்கை செய்ததுடன் ஒளி ஓவியம் செய்தவர் தங்கா்பச்சான். தங்கா்பச்சான், ஒளிப்பதிவுத் தொழில் நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொண்டு திரைப்படத் துறையில் நுழைந்து, தனது சிறுகதையான கல்வெட்டை, “அழகி” என்னும் படமாக இயக்கி நெறியாள்கை செய்து அதன் மூலம் தனது திரைப்படங்கள் எவ்வாறு இருக்கும் என அடையாளம் காட்டியவா். தனது சினிமா, வியாபார வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக இருக்காது; வாழ்க்கையினூடான பயணமாக இருக்கும் எனப் பேட்டிகளிலும் சொல்லிக்கொண்டவா். அவா் எடுத்த சொல்லமறந்த கதையும் அதிலிருந்து விலகிவிடவில்லை. இப்பொழுது அவா் நெறியாள்கை செய்த மூன்றாவது படமான “தென்றல்“ வந்து ஓடிக்கொண்டிருக்கிறது; கவனிக்கத்தக்க படமாக.

மணவிலக்கம் என்னும் கருத்தியல் கருவி: ஜோதிர்லதா கிரிஜாவின் தலைமுறை இடைவெளிகள்

படம்
மனிதச் சிந்தனை என்பது எப்போதும் மனித மைய நோக்கம் கொண்தாக இருக்கிறது. நிலம், நீர், வளி, ஒளி, வானம் என ஐந்து பரப்புகளும் இணைந்திருப்பதும், அவ்விணைவுக்குள் தாவரங்கள்-அவற்றின் உட்பிரிவுகளான செடிகள், கொடிகள், மரங்கள் என்பனவும், விலங்குகள் – அதற்குள் நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்பனவும் முக்கியமானவை என்றாலும் மனிதர்கள் இவையெல்லாம் தங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றே நினைக்கின்றனர். அவர்கள் உருவாக்கும் சொற்கள் எப்போதும் மனிதர்களை மையமிட்டே பொருளை – அர்த்தத்தை உற்பத்தி செய்கின்றன. உலகம் என்ற சொல்லை மனிதர்களின் வெளியாகவே புரிந்து வைத்திருக்கிறது மனித மனம்.