உணர்வுகளை எழுதும் தர்க்கம்:சேரனின் கவிதைகள்
மூன்று தெருக்கள் என்று தலைப்பிட்ட இந்தக் கவிதை சேரனின் சமீபத்திய தொகுப்பில் உள்ள ஒரு கவிதை [பக்.45-46].இதை முதல் தடவையாக வாசித்த உடனேயே ‘ஒரு கவிதை எளிமையானதாக இருக்கிறது’ என்பதற்கு உதாரணமாகச் சொல்லத் தக்க கவிதை இது என எனக்குத் தோன்றியது. தொடர்ந்து கவிதைகளை வாசித்துப் பழக்கப்படுத்தி வரும் கவிதை வாசகன், முதல் வாசிப்பில் ஒரு கவிதையின் நோக்கம் என்ன? கவிதைக்குள் கவிஞன் உண்டாக்கிக் கடத்த விரும்பிய உணர்வின் தளம் எத்தகையது இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் அந்தக் கவிதையை எளிய கவிதை என அடையாளப் படுத்திக் கொள்கிறான். அப்படியான அடையாளத்திற்குள் அடைபடாமல் தப்பிக்கும் கவிதை, திரும்பவும் வாசிக்கும்படி தூண்டும். திரும்பத் திரும்ப வாசிக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தாமல் போய்விடும் நிலையில் வாசகனிடம் தோன்றுவது அலுப்பு. தொடர்ந்த முயற்சிக்குப் பின்னும் வாசகனின் மனப்பரப்புக்குப் பிடிபடாமல் அலுப்பை உண்டாக்கி, ஒதுக்கிய கவிதையை வாசகனும் ஒதுக்கி வைத்து விட்டு ஒதுங்கிப் போய்விடுகிறான். கவிதை வாசிப்பில் நடக்கும் இந்த இயக்கம் பொதுவானது.சேரனின் மூன்று தெருக்கள் என்ற தலைப்பிட்ட அந்தக் கவ