இதனை எதிர்பார்த்துத் தமிழகம் இருந்திருக்கவில்லை.குற்ற நிரூபணம், அதற்கான தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அத்துடன் அபராதத் தொகையாக ரூ 100 கோடி என்பதை நினைவுக்குள்கொண்டுவரவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் மனநிலையை அ இ அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் நிச்சயம் தவறான நினைப்பு என்றே சொல்வேன். தமிழ்ப்பொதுமனமே அப்படித்தான் நினைக்கிறது. இப்படிச் சொன்னால் அந்தப் பொதுமனம் எங்கே இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும். 18 ஆண்டுகளாக நடந்த ஒரு வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வரும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் எதிர்பார்க்கவில்லை, அதைவிடக் குற்றஞ் சாட்டியவர்களே எதிர்பார்த்திருப்பார்களா? தமிழ்நாட்டின் அரசாங்கமும், அதனை நடத்தும் ஆளும் கட்சியினரும் மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் கூட எதிர்பார்க்கவில்லை என்பதையே இரண்டு நாட்களாகச் செய்தி அலைவரிசைகளில் வாசிக்கப் பெற்ற செய்திகளும், முன் வைக்கப்பெற்ற விவாதங்களும் காட்டப்படும் காட்சிகளும் சொல்கின்றன; விளக்குகின்றன. பெங்களூரை நோக்கிய ஒட்டுமொத்தப்பயணங்கள், கொண்டாட்ட மனநிலைக் காத்திருப்புகள், எதிர்கொள்ள முடியாத சோக