சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.

மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை.. அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத் தோற்றம் உண்டாக்கப்பட வேண்டும். இந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை . அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது .அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம் (1.).கடல்பயணத்தின் விருப்பமுள்ள அவள் வயதான கிழவன் (2) ஒரு இளைஞனும் இருக்கிறான் (3.) இவர்களோடு சக பயணிகளாக நான்கு பேர் (4-7) (8) சாவும் (9) ச்மாதான சக வாழ்வும் கூடப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். நாடகம் தொடங்கும்போது கப்பல் புயலில் சிக்கியதான நிலை. மணல் தூவி, அதனை உரசுதல், தண்ணீரை அலம்புதல், தரையைப் பெருக்குதல், சொம்பினைத் தட்டி ஒலி எழுப்புதல் போன்றவற்றால் கடலின் நிலையை உருவாக்கலாம். இரண்டு நபர்கள் பனையோலைகளின் உதவியால் கடலில் புயல் வீசும் நிலையை உருவாக்கலாம். பனையோலைகளை வீசுதல், தரையில் அடித்தல், உரசுதல் ஆகியன அவர்களின் செயல்கள். அந்த சப்தங்கள் குறையும்போது ஆல்பட்ரோஸ் கடலின் பரப்பில் வருகி...