திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போகாமல் தப்பிக்கும் ஆசை தான்..
செம்மொழித் தமிழ் மாநாட்டில் உங்கள் பங்கு என்ன? இந்தக் கேள்வியைக் கடந்த ஆறு மாத காலத்தில் யாராவது ஒருவர் அவ்வப்போது கேட்டுக் கொண்டே தான் இருந்தார்கள். இன்று வரை குறைந்தது 50 விதமான பதில்களை நானும் சொல்லியிருப்பேன். எந்தப் பதில் யாருக்குத் திருப்தி அளித்தது என்று தெரியவில்லை. ஒரு பல்கலைக் கழகத்தின் தமிழியல் துறையில் தலைவராக இருக்கக் கூடிய ஒருவரிடம்- தொடர்ந்து தமிழின் நவீன இலக்கியங்கள், விமரிசனங்கள் குறித்து அக்கறை கொள்ளும் இலக்கிய மற்றும் தீவிரமான இதழ்களில் எழுதக் கூடிய என்னிடம் இந்தக் கேள்வி கேட்கப் படும் காரணம் ஒன்றும் புரியாத ஒன்றல்ல. ஆனால் அந்தக் கேள்விக்கு தீர்மானமான ஒரு பதிலை என்னால் சொல்ல முடியவில்லை என்பதுதான் அதில் இருந்த சோகம்.