இடுகைகள்

சரஸ்வதி சம்மான் விருது பெற்ற பேரா.அ.அ. மணவாளன் அவர்களை முன் வைத்து சில கேள்விகள்

படம்
விமரிசனமும் விருதும் கவனிக்கப்படுதலின் அடையாளங்கள். கவனிக்கப்படுதலை எதிர்பார்த்து உயிரினங்கள் ஏங்கி நிற்கின்றன. முள் கொடுக்கு களில் உரசி விலகிச் சென்ற வண்டுகளுக்காகவே பூக்கின்றன ரோஜாச்செடிகள் என்பது ஒரு கவிதை வரி.பச்சை இலைகளோடு இருக்கும் தாவரங்கள் பூப்பதன் மூலம் கவனம் பெறுகின்றன. காய்ப்பதும் பழுப்பதும் தன்னைப் பிறவற்றிற்குத் தருதலின் வெளிப்பாடுகள். இயற்கையின் எல்லா இருப்புகளும் இச்சுழற்சியிலிருந்து விலகி விடுவதில்லை. மனித உயிரிகள் உள்பட . 

தமிழச்சியின் கவி உலகம்

படம்
அவரவர்க்கான மழைத்துளிகளும் அவரவர்க்கான கவிதைகளும்.

ஜெயமோகனின் கொற்றவை திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து

படம்
ஜெயமோகன் தனது 25 ஆவது வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்த பிரதி கொற்றவை. 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டு 2005 இன் வெளியீடாக வந்தது.கொற்றவைக்கு முன்பு ஜெயமோகனின் எழுத்துகள் பல வடிவங்களில்,சில வகைப்பாடுகளுடன் அடையாளப்படுத்தத் தக்கனவாய் அச்சிடப்பட்டிருந்தாலும், அவர் அதிகம் அறியப்பட்டது புனைகதை ஆசிரியராகத் தான். சிறுகதை ஆசிரியராக முதலில் வெளிப்பட்ட போதிலும் விரிவான காலம் மற்றும் வெளி சார்ந்த எல்லைகளுக்குள் கதாபாத்திரங்களை அலையவிடும் நாவல் வடிவமே அவருக்கு லாவகமான வடிவமாக இருக்கிறது.

தினமணியில் நேர்காணல்

படம்
போலந்தின் தலைநகர் வார்சாவிற்கு வந்து ஆறுமாதங்கள் முடிந்து விட்டன இந்த மாத அனுபவங்களுடன் வழங்கிய நேர்காணல் இது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இங்கு இருக்கப்போகிறேன். முடியும்போது கூடுதல் அனுபவங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. தினமணியில் இரண்டு பக்கங்களில் அந்த நேர்காணல் அச்சிடப்பட்டுள்ளது

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே : எழுத்ததிகாரம் தொலைக்கும் எழுத்து

படம்
எல்லாச் சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பது அதிகாரத்தின் மீதான பற்றும், அதை அடைவதற்கான முயற்சிகளும்   என்பது அரசியல் சொல்லாடல் என்பதாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் செலுத்துதல் என்பது மற்றவர்களைத் தன்பால் ஈர்த்தலில் தொடங்குகிறது. அடுத்தகட்டம் அவர்களின் நிலையைக் குலைத்துத் தன் நிலையை நிறுவி அதன்படி செயல் படத் தூண்டுதலில் முடிகிறது.