இடுகைகள்

வார்சாவில் இருக்கிறேன்; வார்சாவில் இருந்தேன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாம்பழக்கன்னங்கள்; மது ஊறும் கிண்ணங்கள்.

படம்
அக்கினி நட்சத்திரத்திற்கும் மாம்பழ சீசனுக்கும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை. ஆனால் அக்கினி  வெயில் தான் மாங்காயைப் பொன்னிற மாக்கிப் பழுக்க வைக்கிறது என நினைத்துக் கொள்வேன். அக்கினி முடிந்தவுடன் வாங்க ஆரம்பித்தால் சீசன் முடியும் வரை மாம்பழ வாசம் வீட்டில் கமகமத்துக் கொண்டுதான் இருக்கும். வார்சாவில் இருக்கப் போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் மாம்பழ மணம் இல்லாமல் கழியப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நடத்துநர்கள் இல்லை; சோதனைகள் உண்டு

படம்
ஏப்ரல் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை. முட்டாள் தனமாக ஏமாந்து விடக் கூடாது என்று நினைத்து எங்கும் கிளம்ப வில்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை ஊர் சுற்றிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எங்கே போவது என்ற திட்டம் எதுவும் இல்லை. வீட்டிற்கு அருகில் இருக்கும் அல் –அலோயோனிக்கோவ் நிறுத்தத்தில் டிராம் ஏறி விலோஷ்னோவாவில் இறங்கி மெட்ரோ ரயிலில் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் ஏறி விட்டார். சோதனை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் விலோனோவ்ஸ்காவில் இறங்கவில்லை.

இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படும் நேரம் 23 மணி நேரம் தான்

படம்
காலையில் வழக்கம் போல எழுந்து காலைக் கடன்களை முடித்து கணிணியின் திரையைத் திறந்தபோது 06.15,2012 மார்ச் 25 எனக்காட்டியது. எல்லா நாளும் இரவு 11.00 மணியை ஒட்டித் தூங்குவது வழக்கம். எத்தனை மணிக்குப் படுத்தாலும் ஆறு மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதிகாலை 05.00 யை ஒட்டி எழுந்து விடுவேன். நேற்று இரவு 11. 00 மணியளவில் தான் தூங்கப் போனேன். ஆனால் எழுந்து பார்த்தபோது கணிணியின் திரை 06.15 எனக் காட்டியது. அலைபேசியின் திரையிலும் 06.15 என்று தான் இருந்தது. அலமாரியில் பத்து நாட்களாகவே வெளியே நல்ல வெளிச்சம். கடந்த இருந்த கடிகாரத்தில் நேரம் 05.15 மணி என்றிருந்தது.

பனியும் பனியின் நிமித்தமும்

படம்
”கதவைத் திற; காற்று வரட்டும்” நான் தொகுக்க நினைக்கும் நவீனத் தமிழ்க் கவிதைத் தொகுப்பில் பசுவய்யாவின் இந்த கவிதை நிச்சயம் இடம் பெறும். மூடுண்ட இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த கதவாக அவர் சொல்லும் கதவை விரிக்காமல் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் குறுகிய மனக் கதவைக் குறிக்கவே இக்கவி தையை எழுதினார் என வியாக்கி யானங்கள் சொல்லப்பட்டாலும், நான் அந்தக் கவிதையை இந்தியப் பரப்பிற்கான கவிதையாகவே நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களின் மூடுண்ட கதவுகளைத் திறந்து உள்ளிருளைப் போக்கும் அறிவொளியெனும் வெளிச்சத்தையும் உடலில் பரவிச் சுகமளிக்கும் காற்றையும் அனுமதிப்பதற்குச் சாளரங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாகவே நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பொங்கலோ பொங்கல் :குமரி முதல் வார்சா வரை

படம்
பொங்கல் கொண்டாட்டம் எப்போதும் விரும்பப்படும் ஒன்று. மதுரையை விட்டு பாண்டிச்சேரிக்கு வந்த பிறகுதான் பொங்கல் கொண் டாட்டம் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது. அதற்கு முன்பு மூன்று நாள் கொண்டாட்டத்தில்  ஒருநாளா வது பக்கத்து ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளுக்குப் போய் வருவேன்.  அமெரிக்கன் கல்லூரி யில் படித்த காலத்தில் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டிலும்  சிங்கம் புணரிக்குப் பக்கத்தில் நடக்கும் மஞ்சு விரட்டிலும் கலந்துகொண்டிருக்கிறேன். இரண்டுக்கும் அழைத்துப்போனவர்கள் வகுப்புத்தோழர்களே..

அறிவுசார் மண்டலம் என்னும் கனவு.

படம்
நெருக்கடிகள் எப்போதும் நினைப்புகளையும் கனவுகளையும் தான் குறி வைக் கின்றன. சென்னை கொட்டிவாக்கம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஒருமுறை பார்த்து விட்டு வார்சா வர வேண்டும் எ ன்பது நினைப்புகளில் ஒன்று. அந்த நினைப்பு புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல; அதன் வயது மூன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்படியொரு நினைப்புத் தோன்றக்காரணம் எனது புத்தக ஆசையோ! படிக்கும் விருப்பமோ அல்ல. அரசின் செயல்பாடு தான் காரணம். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுச் செயல்பாடு வேறொன்றும் அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.  

தோருண்: நடந்தே பார்க்க வேண்டிய நகரம்.

படம்
கிறிஸ்துமஸ் இரவில் வார்சாவைச் சுற்றிவந்தபோது இந்தத்திட்டம் உருவானது. இந்தக் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வார்சா அல்லது ஒரு கிராமம் அல்லது தூரத்திலிருக்கும் நகரம் ஒன்றில் ஓரிரவாவது தங்கலாம் என்று திட்டமிட்டோம். போலந்து நகரங்களைப் பற்றிய குறிப்புகளுக்காக இணையத்துக்குள் செல்ல மனம் விரும்பவில்லை. முதல் அனுபவங்கள் தேவை என்பதால் அதை நான் செய்வதில்லை. படங்கள், விவரங்கள், வரலாறு என எல்லாவற்றையும் தரும் விக்கிபீடியாக்கள் ஒருவிதத்தில் முதன்முதலாய்ப் பார்க்கும் ஆர்வத்தைக் குறைத்து விடுகின்றன.

தொலைந்து போகுமோ வெள்ளைக் கிறிஸ்துமஸ்.

படம்
டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டொரு நாள் பூஜ்யத்திற்கும் கீழே வெப்பநிலை போன போது துறைத்தலைவர் டேனுதா ஸ்டாய்ஸ்டிக் சொன்ன எச்சரிக்கைக் குறிப்புகள் நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் அறைக்குள் வந்து தான் அவரது கையுறையைக் கழற்றுவார். . வெளியில் நடக்கும்போது கையுறைகளைக் கழற்ற வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே மேலும் சில குறிப்புகளைச் சொன்னார். உறையைக் கழற்றி மாட்டிக் கொள்வதற்குள் கைகள் விறைத்து விடும் வாய்ப்புண்டு என்று சொன்னவருக்கு இந்தியாவின் தட்பவெப்பம் பற்றியும் தெரியும். டெல்லிக்கும் திருநெல்வேலிக்கும் இடைவெளி தூரத்தில் மட்டுமல்ல தட்பவெப்பத்திலும் உண்டு என ஒருமுறை சொன்னார். டிசம்பர் மாதம் டெல்லியிலும் மேமாதம் குமரியிலும் இருந்திருக்கிறார். இந்தியாவின் வேறுபாட்டை அறிந்து கொள்ள அது ஒன்றே போதும் எனச் சொன்னதின் அர்த்தங்கள் புரிந்து பலமாகச் சிரித்தோம். 

சிங்கத்திடமிருந்து தலைவரை யாராவது காப்பாற்றுங்கள்

படம்
தமிழ்நாட்டில் பேராசிரியராக இருந்து தமிழைக் கற்றுத் தந்தேன். ஆனால் வார்சாவில் வருகைதரு பேராசிரியராக வந்து தமிழைச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆம்,”கற்றுத் தருதல்” ”சொல்லித் தருதல்” என்ற இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கவனமாகவே சொல்கிறேன். வார்சாவில் எனது வேலை போலந்து மாணவ, மாணவிகளுக்குத் தமிழ் பேசக் கற்றுக் கொடுப்பதுதான். மாணவ, மாணவிகள் என்று சொல்வதற்குப் பதிலாக மாணவிகள் என்றே குறிப்பிடலாம். ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே மாணவர்; எட்டுப்பேர் மாணவிகள்.  

கடந்த காலத்திற்குள் பதுங்கி இருக்கிறது இந்தியவியல்

படம்
பல்கலைக்கழக நுழைவு வாயில் போலந்து வந்த மூன்றாவது நாளில் நான் பணியாற்றும் இந்தியவியல் துறையின் தலைவர் பேரா . டேனுடா ஸ்டாசிக் கொடுத்த அழைப்பிதழ் தமிழ்நாட்டு நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச் சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பொறுப்பேற்று நண்பர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்த அரங்கியலாளர் சந்திப்பு தொடங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தலித் எழுத்தாளர் சொற்பொழிவு வரிசை, செவ்வியல் கவிதைகளோடு நவீன கவிகளை உறவாட வைத்த பத்துநாள் பயிலரங்கு வரை ஒவ்வொன்றும் வந்து போய்க் கொண்டே இருந்தன.

பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”

படம்
அது போன்ற விருந்தோன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவில் கிடைத்ததில்லை. ‘தாராளமாகக் குடிக்கலாம்’ என அனுமதிக்கும் பாண்டிச்சேரியில் ஏழரை ஆண்டுகள் இருந்தும் இந்த அனுபவத்திற்காக வார்சா வர வேண்டியதாகி விட்டது. இதுபோலப் பல அனுபவங்களை வார்சா தர இருக்கிறது என்பதை ஒரு மாத காலத்திற்குள் புரிந்து கொண்டு விட்டேன்.

பெரிய முள்ளை பதினோரு தடவை சுற்றிக் கொள்ளுங்கள்

படம்
‘ டாடா மோட்டார்ஸ் ’ சந்திரசேகர் காரில் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் இறகுப் பந்து ( ஷட்டில் ) விளையாடப் போயிருக்க மாட்டேன் .   வார்சாவுக்குப் போனதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன் . வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்கு நடந்து போக முடியாது . பஸ்ஸில் போவதென்றாலும் ஒரே பஸ்ஸில் போய்த் திரும்ப முடியாது .

குளியலறையில் குளிக்கக் கூடாது.

படம்
வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டும் எனப் போட்ட பட்டியலில் பாபநாசம் கீழணைக் குளியலும் ஒன்று. திருநெல்வேலிக்குப் போன பிறகு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் தான். ஆனால் குற்றாலம் எனக்கு அலுத்துப் போய்விட்டது. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை. கீழணைக்குளியலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் பாத்ரூமில் குளிக்கக் கூடாது என்ற தடையைச் சந்தித்ததைச் சொல்ல வேண்டும். வார்சாவிற்குப் போனவுடன் நாங்கள் சந்தித்த குளியல் அறைச் சம்பவம் சுவாரசியமானது. திருநெல்வேலியில் ஆத்திலும் அருவியிலும் குளிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் தினசரிக் குளியல் என்னவோ வாளித்தண்ணீரை அள்ளி ஊற்றிக் குளிப்பதுதான். அதற்கு வார்சாவில் விடுதலை கிடைத்தது. கழிப்பறையோடு கூடிய குளியலறையில் ’பாத் டப்’ இருந்தது. வெந்நீரையும் தண்ணீரையும் நிரப்பிக் கொஞ்ச நேரம் மூச்சடக்கி

இந்தியவியல் துறைகளின் தேவை.

படம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் புலத்தில் தமிழ்ப் வந்திருக்கிறேன். இந்தியவியல் புலத்தில் போலந்து மாணவ மாணவி களுக்கு காலப்பழமையும் பாரம்பரிய வளமும் கொண்ட இந்தியாவின் செவ்வியல் மொழிகளான  சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றோடு இந்தி, பஞ்சாபி, வங்காளம் ஆகிய சார்பு மொழிகளையும் கற்பிக்கப் போலந்து பேராசிரியர்களும், இந்தியாவிலிருந்து வருகை தந்து குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இம்மொழிகளின் நிகழ்கால இருப்பைக் கற்றுத்தரும் வருகை தரு பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.

வலதுசாரியாக மாறியாக வேண்டும்

படம்
பல்கலைக்கழகம் வரை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்த மாணவிகள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிப்  பல்கலைக் கழகத்திற்கு வந்து சேரும் பாதையைப் புரிந்து கொண்டு விட்டேன் என்ற உறுதி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. பாதை பிடிபட்டு விட்டது என்று நான் சொல்லவும் இல்லை; ஆனால் அந்த முடிவை அவர்களே எடுத்து விட்டார்கள். ஏதாவது பிரச்னை என்றால் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இரண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து விட்டு வாபஸான போது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது.

வார்சாவிற்கு வந்து விட்டேன்.

படம்
என்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக அறிமுகப் படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை என்றாலும் அதுதான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக ஆக்கியிருக்கிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைப்பள்ளி தொடங்கப் பட்டபோது(1989) அதன் முதல் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்ட நான், 1997 இல்  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட போது அத்துறைக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் ஆசிரியர்.  வழக்கமான பல்கலைக்கழக ஆசிரியப் பணியோடு தமிழில் வரும் தீவிர இதழ்களில் சமகால இலக்கியம், கலை, பண்பாட்டு நிகழ்வுகள் மற்றுமல்லாது அரசியல் நிகழ்வுகளையும் விமரிசனம் செய்பவனாக- வெகுமக்கள் மனநிலை சார்ந்து கருத்துக்களை முன் வைத்து விவாதிப்பவனாக அறியப்பட்டுள்ளேன். மாணவப் பருவம் தொடங்கி இலக்கியப் பத்திரிகைகளோடு தொடர்பு கொண்டு எழுதி வருகிறேன். பட்டப்படிப்புக் காலத்தில் அசோகமித்திரன் பொறுப்பில் வந்த கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதே காலகட்டத்தில் ஆனந்த விகடன் பொன்விழாவை ஒட்டி மாணவர் பக்கம் வெளியிட்ட போது அதிலும் கவிதைகள் எழுதினேன். கவிதை