மோகனரங்கனின் கவிதையாக்கமும் கருத்துலகமும்
பனுவலாக்கமும் வாசிப்பும்
தமிழில் எழுதப்படும் பலவிதமான கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவரால் திட்டமிட்டு எழுதப்படும் கவிதைகளையும் திட்டமிடாமல் உருவாக்கப்படும் கவிதைகளையும் அடையாளப்படுத்திச் சொல்ல முடியும். வாசிக்கும் ஒருவரின் ‘தன்’னிலையையும் சூழலையும் பனுவலுக்குள் உருவாக்கி அவரோடு உரையாடவும் உறவாடவும் செய்யும் பனுவல்கள் வாசிப்பவருக்கு நெருக்கமான ஒன்றாக மாறிவிடும் என்பது நீண்டகாலப் புரிதல். இவரின் கவிதை அல்லது கதை எனக்கு நெருக்கமாக இருக்கிறது என்று ஒரு வாசகர் சொல்கிறார் என்றால் அந்த எழுத்துக்குள் அவர் இருப்பதாக உணர்கிறார் என்பது பொருள். இதன் தொடர்ச்சியில் தான் மட்டும் தான் இருக்கிறேனா? தன்னையொத்த பிற மனிதர்களும் இதற்குள் இருக்கிறார்களா? என்ற தேடல் நடக்கும். தானும் தன்னைச் சுற்றியிருக்கும் பிறமனிதர்களின் சாயல் கொண்ட மனிதர்களும் அந்தப் பனுவல்களுக்குள் தட்டுப்படும்போது, எழுதியவரைத் தனக்கு நெருக்கமான எழுத்துகளைத் தந்தவராகக் கொண்டாடுகிறது வாசிப்பு மனம்.
இதற்கு மாறானது விமரிசன மனம். ஒருவரின் தொகுப்புக் கவிதைகளை வாசிக்கும்போது, கவிதையாக்கத்தில் என்ன நடக்கிறது? என்ற வினாவோடு வாசிக்கிறது. கவிதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களின் தன்னிலைகளைக் கவனித்து அவற்றின் நிலைபாட்டைச் சுட்டுக்காட்டுகின்றது. பொதுவாகக் கவிதைக்குள் உருவாக்கப்படும் முதல் பாத்திரம் கவிதை சொல்லியாகத் தோன்றும் கூற்றுநிலைப்பாத்திரம் (Narrating character) இரண்டாவதாக உருவாக்கப்படுவது சொல்வதைக் கேட்கும் பாத்திரம் ( Receiver ) மூன்றாவதாகச் சொல்லப்படும் பாத்திரங்கள்( depicted characters) உருவாக்கப்படுகின்றன.
2. சித்திரத்தின் முடிவில் -சிந்திக்க ஒரு கருத்தைச் சுட்டுதல்-காட்சிப்படுத்தி அடுக்கிக் காட்டுவதை நிறுத்திச் சிந்திக்கவொரு கருத்தியலைக் கேள்வியாக்குவது
3. சித்திரம் ,சிந்தனை, வாழ்வியல் இயல்பு நிலை பேசுதல்
இம்மூன்று தன்மைகளையும் அவரது கவிதைகளை எடுத்துக்காட்டி விளக்கும்போது அவரது கவிதையாக்க முறைமையைப் புரிந்துகொண்டதாகத் தோன்றும்.
இக்கவிதைக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு சாட்சி மறைந்ததொரு காட்சி. சூரிய உதயத்தையும் மறைவையும் காட்சிப்படுத்தும் கவிதைக்குள் உணர்வெழுச்சி எதுவும் இல்லை. ஆனால் திறந்தது கண் என்ற கடைசி வரியில் உணர்வெழுச்சிக்குப் பதிலாக உணர்தலை நிகழ்த்தியுள்ளது. உணர்ச்சிகளைத் திரட்டித் தரும் மரபுக்கவிதை புதுக்கவிதையாகவும் நவீன கவிதையாகவும் மாறும்போது உணர்வு நிகழ்த்துதலாக மாறுதல் நடக்கின்றது. மோகன ரங்கன் பல கவிதைகளில் இந்த நிகழ்த்துதலைச் செய்வதற்காகச் சித்திரமாக்கலைச் செய்துள்ளார். இடம்பெயர்ந்த கடல் தொகுப்பில் ஆரம்பத்தில் உள்ள ஜன்னல், வழுவமைதி, வடிவ கணிதம், மழைசார்ந்த ஞாபகம், இடம்பெயர்ந்த கடல், வாசனை போன்ற கவிதைகளின் சிறப்பே அவை உருவாக்கும் காட்சிகளே.இன்னொரு கவிதையை எடுத்துக்காட்டிப் பேசலாம். அக்கவிதைக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு வீடு திரும்பும் முன்:
தொடக்கத்தில் உள்ள கவிதைகளோடு நினைவுப்பாதை, முடிவுக்கு வந்த முந்திய வரிகள், நித்திய மலர், யாமம், ஹம்பி, வீடுபேறு போன்ற கவிதைகளின் காட்சிச்சித்திரங்களில் நிகழ்த்தப்படும் அறிதல்கள் மனிதர்களிடம் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிகழ்வுகளாகும்.
சிந்திக்க ஒரு கருத்தைச் சுட்டுதல்.
காட்சிப்படுத்துதலைக் குறைவாகவும் சிந்திக்கத்தூண்டுவதைக் கூடுதலாகவும் செய்யும் கவிதையாக்கங்களாக உள்ள கவிதைகள் சிந்திக்க வைத்து மாற்றங்களை நிகழ்த்தும் நோக்கம் கொண்டவை அல்ல. வாசிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் அவ்வளவுதான் கவிஞரின் நோக்கம். அதுவே போதுமானது என்பது அவரது கவிதைப்பார்வையாகவே இருக்கின்றது. திரை எனத் தலைப்பிட்டுள்ள இந்தக் கவிதையை வாசித்துப் பேசலாம்:
நேரடிக்காட்சியாக இல்லாமல் ஒலி வழியாகவே உருவகப்படும் காட்சியொன்றின் தொடர்ச்சியில் ஈடுபாடு காட்டும் மனம், அத்துடன் தன்னை நிறுத்திக் கொண்டு அந்நிகழ்வில் நல்லது நடந்துவிடும் என்ற நம்பிக்கை கொள்வதில் நிறைவு கொள்கின்றது. சிந்திப்பதே போதும் என்று நினைக்காது செயல்பட நினைக்கும் மனிதர்களைக் கவிதைக்குள் கொண்டு வர நினைத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்காத நிலையை எழுதிக் காட்டியிருக்கும். இத்தகைய மனநிலையைக் கொண்ட மனிதர்களைப் பயம், கணப்பிறழ்வு, கிரௌஞ்ச வதம், தவளையின் சங்கீதம், மந்திரம், புதிர்வழிப்பயணம், அரிநிழல் போன்ற கவிதைகளில் வாசிக்கலாம். இந்தத் தன்மையைக் குறியீடு ஒன்றின் வழி எழுதிக் காட்டும் நீண்ட கவிதை – நல்லதொரு கவிதை ஒன்று இத்தொகுப்பில் உள்ளது. பூனைகளின் நகரம் என்று தலைப்பிட்ட கவிதையை முதலில் வாசித்துக்கொள்ளலாம்.
சைவப்பூனைகளே எனினும்
சமயங்களில்
மருந்துபோல
மது பாவிக்கும் பழகியிருந்தன
வளைவிட்டுக் கிளம்பும்
எலிகளைத் துரத்திக் கொன்றபின்
பூனைகள் மனிதர்களின் குறியீடுகளாக நின்று வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக மனிதர்கள் வாழ நேரும் அமைப்புகள், அவற்றின் இயங்கு வெளிகள், இயங்குவதற்கான நடத்தை முறைகள், ஒழுங்குகள், விதிகள், அவற்றை ஏற்று நடக்க நினைத்தல், மீற விரும்புதல், மீற முடியாமல் அடங்கிப் போதல் என விரியும் இந்தக் கவிதைபோல வெவ்வேறு தளத்தில் எழுதப்பெற்ற கவிதைகள் தொகுப்பில் உள்ளன. தொகுப்பின் கடைசிக் கவிதையாக உறங்காப்பத்து என்ற தலைப்பில் உள்ள 10 கவிதைகளும் அத்தகையனவே. தொடரும் கதை, ஐந்து நட்சத்திரங்கள், மகன் வரைந்த கோடு போன்ற கவிதைகள் விரிவான காட்சிகளுக்குப் பதிலாகக் கேள்விகள், யோசனைகள், ஐயங்கள், உறுதியின்மை போன்றனவற்றை எழுப்பித் தந்து வாசிப்பவர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. அண்மையில் அகழ் இதழில் வந்துள்ள மூன்று கவிதைகளில் நினைவு ஊர்வலம் கவிதைக்குள்ளும் அத்தகைய அடுக்குகளும் இயலாமையும் வெளிப்படுவதை வாசிக்க முடிகின்றது
வாழ்வியலை முன்வைத்தல்
மோகனரங்கனின் கவிதையாக்கத்தில் மூன்றாவது தன்மையாக மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகளின் ஆக்கத்தன்மையைச் சுட்டத்தோன்றுகின்றது. வாழ்வியல் சமூகமாக வாழ்தலின் சிக்கல்களையோ முரண்பாடுகளையோ எழுத நினைக்கவில்லை. தனி மனிதர்களாக ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் வாழ்வியல் கணங்களை எழுதிக் காட்டியிருக்கின்றார். காதலாகவும் காமமாகவும் உணரப்படும் ஆண் – பெண் உறவு நிலைகளைப் பேசும் கவிதைகள் பலவற்றை அவர் வாசிக்கத்தருகின்றார். காதலையோ, காமத்தையோ தவிர்த்துவிட விரும்பும் தன்னிலைகளாக இல்லாமல் நெருங்கி ஏற்கும் தன்னிலைகளையும், அச்சத்தின் பாற்பட்டு விலகித்தவிக்கும் தன்னிலைகளையும் எழுதிக்காட்டும் கவிதைகள் குறிப்பான கணங்களின் வெளிப்பாடாக எழுதப்பெற்றுள்ளன. முதலில் ஒரு காதல் கவிதை; தலைப்பு: வடிவ கணிதம்
சதுரமும் வட்டமும் சந்தித்தலுக்கான கோட்டில் உருவாகி மலரும் காதல் உணர்வைக் காட்சிப்படுத்தும் இந்தக் கவிதையை ஒத்ததாக தொகுப்பின் தலைப்புக்கவிதையான இடம் பெயர்ந்த கடலின் விவரிப்பும் உள்ளது. ஆனால் அக்கவிதை காதலிலிருந்து காமத்தை உணரும் தருணத்திற்குள் காட்சிப்படுத்துதல் வழியாகவே நகர்த்தியுள்ளது.
இந்த நகர்வுகளை வாசிக்கத்தரும் கவிதைகளாக பரிசல் பாடல், நினைவு முகம், தரிசனம், பாடல் பெறும் ஸ்தனங்கள், பெருந்திணை, அறிதுயில் காமம், இடைத்தூரம், நித்திய மலர், முன்னை இட்ட தீ, பதங்கமாதல்,எனப் பல கவிதைகளில் காதலையும் காமத்தையும் நெருக்கமாக உணரும் தருணங்களைத் தந்துள்ளார். இவற்றை எழுதும்போது விலகலான மனநிலையைக் கொண்டுவராமல் எல்லாவற்றையும் அதனதன் போக்கில் ஏற்று நகரும் மனநிலையை உருவாக்கும் விதத்திலேயே அந்தக் கவிதைகள் நவீனத்துவ மனநிலையை உருவாக்கும் கவிதைகளாக மாறி நிற்கின்றன.காதல், காமம் தாண்டி அவரது கவிதைக்குள் விவாதப்படும் வாழ்வியலாகக் கடவுளை நோக்கிய ஈடுபாடு அல்லது விலகல் பற்றிய பார்வைகளும் இருக்கின்றன. சித்தர்களின் மனப்பாங்கையும் வள்ளலாரின் மனப்பாங்கையும் விருப்பமானதாகச் சுட்டும் கவிதைகளைத் தொகுப்பில் வாசிக்க முடிகின்றது. வானப்பிரஸ்தம், பிரார்த்தனை போன்ற கவிதைகளில் இத்தகைய போக்கோடு அறிவியல் மறுப்பற்ற மனப்பாங்கைத் தரும் வாசித்துப் பொருள் கொள்ள முடிகின்றது,
மோகனரங்கனின் கவிதைகளுக்குக் குறிப்பான காலப்பின்னணியையோ, இடப்பின்னணியையோ சுட்டிக்காட்ட முடியவில்லை. இக்கவிதைகளை இன்னொரு மொழியில் பெயர்க்கும்போது அம்மொழிக்குரிய கவிதைகளாகவே தோன்றும். குறிப்பான இடப்பின்னணிகள் கொண்ட கவிதைகள் அப்படித்தோன்றாது. அதே நேரம் கவிதைக்குள் இருக்கும் மனிதத்தன்னிலைகளும் அவர்களின் சாயல்களும் தமிழ்/இந்திய மனநிலைகள் கொண்ட தன்னிலைகளாகவே இருக்கின்றனர். இதனைச் சொல்வதற்காக ஒரு கவிதையை வாசித்துக்காட்ட விரும்புகிறேன். நகர வாழ்க்கையின் மீது விருப்பமில்லாத இந்திய மனநிலையைக் காட்டும் அந்தக் கவிதைக்குக் கிளைத்த காடு எனத்தலைப்பிட்டுள்ளார்.
என்பது அந்தக் கவிதை. மோகன ரங்கனின் கவிதைத்தலைப்புகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அவை ஏற்கெனவே அறியப்பட்ட தலைப்புகளாக இருக்கின்றன. ஆனால் அத்தலைப்புகளுக்கான அறிந்த பொருளை மறுதலித்து நிற்கின்றன. கவி உருவாக்கும் மாற்றுப்பொருண்மையைக் கவிதைக்குள் விவாதப் பொருளாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாகச் செலாவணி என்று தலைப்பிட்டுக் கள்ள நாணயத்தைக் குறியீடாக்கி இருப்புக்கும் இன்மைக்குமான விவாதத்திற்குள் நகர்ந்துள்ளது. நற்செய்தி என்ற பைபிளின் சொல்லாட்சியைத் தலைப்பாக்கியுள்ள கவிதையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவர் உருவாக்கிக் கொண்ட தனித்த கூண்டுக்குள் வாழ்கின்றார்கள்; ஆனால் வெளியே உலகம் முழுவதையும் ஒவ்வொரு வீட்டையும் செயற்கைக்கொள்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது எனப் பேசுகின்றதைப் பொருண்மையாக்கியுள்ளது. மனிதர்கள் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதையும் விரிவையும் கவனிக்காமல் அவரவர் எல்லையே உலகம் என நினைத்து வாழப் பழக்கப்பட்டு விட்டார்கள் எனச்சுட்டுவதோடு அவை நற்செய்தி தானா? என்ற கேள்வியை எழுப்புவதுபோலக் கவிதை நீண்டுள்ளது. அந்தக் கவிதை நமது காலத்தின் மீது கவனப்படுத்தும் முக்கியமானதொரு கவிதையாக வந்துள்ளது:
இத்தன்மையை விவாதிக்க இன்னும் பல தலைப்புகள் தொகுப்பில் உள்ளன. அந்தி, பெருந்திணை, விகாசம், தரிசனம், வழுவமைதி, கடை திறப்பு, அறிதுயில் காமம், ஏமப்புணை, எதிரேடகம், தோற்றப்பிழை போன்றன என இங்கு சுட்டுகின்றேன்.
முடிவாக இப்படிச் சொல்லலாம்: மோகனரங்கனின் கவிதையாக்கம் என்பது சித்திரப்படுத்துதலைத் தொடர்ச்சியாகச் செய்கின்றது. அதன் வழிச் சூழலையும் தன்னிலையையும் காட்சிப்படுத்தி வாசகர்களைக் கவிதைக்குள் இழுத்தல் என்பதாகச் செயல்படுகின்றது. உள்ளிழுக்கப்பட்ட வாசகர்களுக்கு அவரது நம்பிக்கை சார்ந்தும் புரிதல் சார்ந்தும் பல்வேறு கருத்துநிலைச் சுட்டிக்காட்டிச் சிந்திக்கத் தூண்டுகின்றார். சிந்திக்கத் தூண்டும் காட்சிகள் வழியாக வாழ்வியலின் இயல்பைச் சுட்டுவது, முரணை விளக்குவது, அபத்தத்தைப் பேசுவது, அறிதலற்ற நிலையைக் காட்டிவிட்டு ஒதுங்குவது, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நோக்கி நகர்த்துவது எனக் கவிதையாக்கத்தைக் கருத்துநிலையோடு இணைத்துக் காட்டுவது எனக் கையாள்கின்றார். அவையெல்லாம் கடந்து காலத்தனவாக இல்லாமல் நிகழ்காலத்து மனிதர்களின் இருப்போடும் சாயலோடும் இருக்கின்றன.
=========================================
இலக்கியப்பனுவலாக்கம் இப்படித்தான் நடக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியாது. அதே நேரம் கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிடுவதும் நடப்பதில்லை. எழுத்தாளர்களின் முன் திட்டமிடல்கள் இவ்விருவகை இலக்கியப் பனுவலாக்கத்திலும் ஒருவித முறைமையை உருவாக்கவே செய்கின்றன. ஆனால் பா அல்லது கவிதைக்கு முன் திட்டமிடல்கள் தேவைப்படுவதில்லை. திட்டமிடாமல் எழுதப்பட்ட கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல்களும் முறைமைகளும் உருவாவது நடக்கலாம்.
தமிழில் எழுதப்படும் பலவிதமான கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவரால் திட்டமிட்டு எழுதப்படும் கவிதைகளையும் திட்டமிடாமல் உருவாக்கப்படும் கவிதைகளையும் அடையாளப்படுத்திச் சொல்ல முடியும். வாசிக்கும் ஒருவரின் ‘தன்’னிலையையும் சூழலையும் பனுவலுக்குள் உருவாக்கி அவரோடு உரையாடவும் உறவாடவும் செய்யும் பனுவல்கள் வாசிப்பவருக்கு நெருக்கமான ஒன்றாக மாறிவிடும் என்பது நீண்டகாலப் புரிதல். இவரின் கவிதை அல்லது கதை எனக்கு நெருக்கமாக இருக்கிறது என்று ஒரு வாசகர் சொல்கிறார் என்றால் அந்த எழுத்துக்குள் அவர் இருப்பதாக உணர்கிறார் என்பது பொருள். இதன் தொடர்ச்சியில் தான் மட்டும் தான் இருக்கிறேனா? தன்னையொத்த பிற மனிதர்களும் இதற்குள் இருக்கிறார்களா? என்ற தேடல் நடக்கும். தானும் தன்னைச் சுற்றியிருக்கும் பிறமனிதர்களின் சாயல் கொண்ட மனிதர்களும் அந்தப் பனுவல்களுக்குள் தட்டுப்படும்போது, எழுதியவரைத் தனக்கு நெருக்கமான எழுத்துகளைத் தந்தவராகக் கொண்டாடுகிறது வாசிப்பு மனம்.
இதற்கு மாறானது விமரிசன மனம். ஒருவரின் தொகுப்புக் கவிதைகளை வாசிக்கும்போது, கவிதையாக்கத்தில் என்ன நடக்கிறது? என்ற வினாவோடு வாசிக்கிறது. கவிதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களின் தன்னிலைகளைக் கவனித்து அவற்றின் நிலைபாட்டைச் சுட்டுக்காட்டுகின்றது. பொதுவாகக் கவிதைக்குள் உருவாக்கப்படும் முதல் பாத்திரம் கவிதை சொல்லியாகத் தோன்றும் கூற்றுநிலைப்பாத்திரம் (Narrating character) இரண்டாவதாக உருவாக்கப்படுவது சொல்வதைக் கேட்கும் பாத்திரம் ( Receiver ) மூன்றாவதாகச் சொல்லப்படும் பாத்திரங்கள்( depicted characters) உருவாக்கப்படுகின்றன.
மூன்றின் இயல்புகளையும் அவற்றின் மனவெளிப்பாடாக/ உளவியலாக அடையாளப்படுவதும், சமூகப்பின்புலத்தில் அடையாளப்படுத்துவதும் சாத்தியம். இம்மூன்றில் சொல்லும் பாத்திரமும் கேட்கும் பாத்திரமும் மட்டுமே அமையக்கூடியனவாக இருக்கக் கூடிய கவிதைகள் அகவயக்கவிதைகளாக அல்லது தன்னுணர்ச்சிக் கவிதைகளாக வகைப்படுத்தத் தக்கன. இவ்விரண்டோடு சொல்லப்படும் அல்லது முன்வைக்கப்படும் பாத்திரங்களை உருவாக்கும்போது அகவயத்தைத் தாண்டிப் புறவயநிலையை அடைகின்றன கவிதைகள். அகநிலையை எழுதும் கவிகளிடம் அதிகமும் வெளிப்படுவனவாக இருப்பவை இயலாமையும் கையறுநிலையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போவதுமான மனநிலைகள். சில வேளைகளில் தன்னிலையைப் பெருமிதமாக உணர்ந்து தன்னையே மெச்சிக்கொள்ளும் வெளிப்பாடுகளும் அமையக்கூடும். இத்தகைய அடையாளப்படுத்தலோடு தொடர்புபடுத்தி எழுதிய கவிதைகளின் மீதான விமரிசனக் குறிப்புகளை எழுதிக் காட்டுகிறது விமரிசன மனம்.
கவிதைக்குள் பாத்திரங்களே உருவாக்கப்படாமல் நிகழ்வுகளும் கருத்துகளும் சூழல்களும் மட்டுமே விவரிக்கப்பட்டு, மெய்ப்பாடுகளும் நிலைப்பாடுகளும் மட்டுமே வெளிப்படும்போது அவற்றை அகவயக் கவிதைகளாகக் கொள்ளாமல் புறவயக் கவிதைகளாக வகைப்படுத்திக் கொண்டு விவாதிக்கலாம்., ஆவேசமும் கோபமும், மௌனமும் புலம்பலும் அங்கதமும் எள்ளலும், குதர்க்கமும் பிதற்றலுமான மெய்ப்பாடுகளாக வெளிப்படும் கவிதைப்பனுவல்களாக இருந்தால், அக்கவிதைகளைப் புறநிலைக் கவிதைகள் அல்லது சமூக விமரிசனக் கவிதைகள் என அடையாளப்படுத்திக்கொண்டு கவியின் சமூகப்பார்வையும் இயங்கும் தளங்களையும் சுட்டிக்காட்டி விமரிசனத்தை முன்வைக்கலாம். இந்தக் கட்டுரையில் மோகனரங்கனின் இடம்பெயர்ந்த கடல் தொகுப்பிலுள்ள கவிதைகளோடு, அண்மையில் இணைய இதழ்களில் ( அகழ், கனலி) வாசிக்கக் கிடைத்த அவரது சில கவிதைகளையும் கொண்டு மோகனரங்கனின் கவிதையாக்கத் தன்மையையும் கவிதைக்குள்ளிருக்கும் கருத்தியல் வெளிப்பாடுகளையும் முன்வைக்கின்றது.
உரிப்பொருளும் வெளிப்பாட்டு வடிவங்களும்
கலைகளின் நோக்கங்கள் பலவிதமானவை. கலைகளுக்கு நோக்கமில்லை எனச் சொல்லப்படுவது ஏற்கத்தக்க ஒன்றல்ல. மனிதர்கள் நோக்கமில்லாமல் வாழ்கின்றார்கள் என்று சொல்வதும் கலைகளுக்கு நோக்கமில்லை எனச் சொல்வதும் ஒன்றுதான். கலைச்செயலில் ஈடுபடுபவர்கள் நுண்ணுணர்வும் அறிவும் கொண்ட மனிதர்கள் என்பதால் அவர்கள் ஈடுபடும் செயல்பாடுகளில் நுண்ணுணர்வை உருவாக்கும் நோக்கமும் தன்னையும் சூழலையும் விளக்கும் நோக்கங்களும் இயல்பாகவே உள்பொதிந்து நிற்கும் என்பதும் ஏற்கத்தக்க ஒன்று
முதன்மையான நோக்கம் மனிதத் தேடல். வாழும் இந்த உலகத்தை விளங்கிக் கொள்ளும் நோக்கம் கொண்ட மனிதர்கள் அதனைத் தங்களுக்கானதாக மாற்ற முனைகின்றார்கள். அவர்களின் அன்றாடத்தேவைக்கான அனைத்தையும் இந்த உலகத்தில் உருவாக்கிப் பயன்படுத்த நினைக்கும் விருப்பத்தின் வெளிப்பாடு அது. மனிதர்களே உலகம் என நினைப்பவர்கள் மனிதர்களின் இருப்பையும் செயல்களையும் காரணங்களையும் பின்னணிகளையும் விளங்கிக் கொள்வதே போதுமானது என நினைக்கிறார்கள். உலகம் மனிதர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல என நினைப்பவர்கள் ஓரறிவு உயிர் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை இந்த உலகத்தில் இருப்பதின்- இயங்குவதின் காரணிகளை விளங்கிக் கொள்வதே அறிவு என நம்பித் தேடுகிறார்கள்.
தனக்கு அறிமுகமான இந்த உலகம் மட்டுமே விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதையும் தாண்டி நிலம் நீர் காற்று நெருப்பு வானம் என ஐம்பரப்புகளும் விளங்கிக்கொள்ள வேண்டியனவாக இருக்கின்றன என்ற விரிதலின் விளைவாக அறிவுத்தோற்றம் எல்லையை விரிக்கிறது. அப்போது உலக அறிவு, பிரபஞ்சம் பற்றிய அறிவாக விரிகின்றது.
உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவற்றை இயக்கும் புலப்படா சக்தியையும் விளங்கிக் கொள்ளும் வினை தொடரும்போதே விளக்கும் விதங்களும் விரிவடைகின்றன. உலகம் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் ஐம்புலன்கள் வழியாகக் கண்டனவற்றையும் கேட்டனவற்றையும் உண்டனவற்றையும் உயிர்த்தனவற்றையும் உற்றனவற்றையும் விளக்கத் தொடங்குவது மனித வினைகளாக மாறுகின்றன. விளக்குவதற்குத் தேவையான கருவியைக் கண்டுபிடித்ததே மனிதக்கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு. அந்தக் கருவியே மொழி. மொழியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய கூட்டங்களே அறிவார்ந்த கூட்டங்களாகவும், வளர்ச்சியடையும் சமூகங்களாகவும் மாறியிருக்கின்றன. வளமான மொழியின் அடையாளம் சொற்கள். ஒரு மொழியில் எவ்வளவு பெயர்ச்சொற்கள் உள்ளன; உருவாக்கப்பட்டுள்ளன என்பதைக் கொண்டே மொழியின் பழைமையும் அம்மொழியில் எழுதப்பெற்ற இலக்கியங்களின் செம்மையும் செவ்வியல் பண்புகளும் அறியப்படுகின்றன. இந்த இடத்தில் ‘உரிப்பொருள்’ என்ற கலைச்சொல் பயன்பாட்டைக் குறித்தொரு விளக்கத்தைச் சொல்லவேண்டும். அதனை அடிக்குறிப்பாகத் தந்துள்ளேன்.*
மொழியைக் கருவியாகப் பயன்படுத்தாத மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதின் மூலம் கடந்து செல்கிறார்கள். வாழ்ந்து காட்டுபவர்களின் இயல்புகளைச் சொற்களில் கட்டமைத்துக் காட்டுவது எழுத்துகளாக ஆகின்றன. கட்டமைப்பதின் வழியாக உருவாகும் வடிவம், வெளிப்பாட்டு நோக்கம், நோக்கத்தைக் கடத்த உருவாக்கப்படும் மெய்ப்பாடுகள் அல்லது உணர்வுகள் எல்லாம் சேர்ந்து எழுத்துகளின் வகைகளாக அறியப்படுகின்றன. உணர்ச்சிகளை அல்லது மெய்ப்பாடுகளைக் கடத்துவதை முதன்மையாகக் கருதும் வடிவம் கவிதையென அறியப்படுகின்றது. முரண்பட்ட மனித உறவுகளையும், மனத்தின் குமுறல்களையும் வெளிப்படுத்துவன நாடகங்களாக அறியப்படுகின்றன. நிகழ்வுகளுக்குள் நுழைந்து வெளியேறும் மனித இருப்பைச் சொல்வன கதைகளென வடிவம் கொள்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடத்துவன சொற்களும் சொற்களின் தொகுதிகளும்.மொழியைப் பற்றிய பேச்சும் மொழியை விளக்கும் பேச்சுமே உலக அறிவின் திறப்புகளாக இருந்திருக்கின்றன. அரசியலையும் அழகியலையும் விளக்கிய அரிஸ்டாடிலின் பேச்சு, மொழியைப் பற்றிய பேச்சுகளாகவே ஆரம்பித்துள்ளது. தமிழின் முதன்மைப் பனுவலான தொல்காப்பியத்தின் பேச்சும் மொழியைப் பற்றிய பேச்சுகளே. மொழியென்னும் ஆயுதத்தின் வெளிப்பாட்டுக் கூறுகள் சொற்கள். சொற்களை இணைத்துப் பயன்படுத்தும்போதே மொழி கருவியாகின்றது. மோகனரங்கனின் கவிதைகளைப் பற்றிய சொல்லாடல்களுக்கு -விமரிசனக் குறிப்புகளுக்கு இவ்வளவு விரிவான அடிப்படைகள் தேவையற்றவை எனத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு கவியும் எழுத்தாளரும் மொழியையே கருவியாகப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலையில் இந்த அடிப்படைகளை விவரிப்பது தேவையாகின்றது.
கவிதையாக்கங்கள்:
கவிதையின் முதன்மையான வெளிப்பாடாக உணர்வெழுச்சிகளைத் திரட்டி வார்த்தைகளாகத் தருவது என்று சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்று மரபுக்கவிதைகளின் ஆட்சி அதிகம் இருந்தபோது சொல்லப்பட்ட வரையறை. மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கும் அதிலிருந்து நவீனக்கவிதையாகவும் நகர்ந்ததில் ஏற்பட்ட மாற்றங்களில் முதன்மையானது உணர்வெழுச்சித் திரட்சியைக் கைவிடத் தொடங்கியதைச் சொல்லவேண்டும். அதற்குப் பதிலாகச் சொற்களின் வழியாகக் காட்சிப்படுத்துதலை நோக்கி நகர்ந்தன கவிதைகள். மோகனரங்கனின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும்போது அவரது கவிதையாக்கத்தில் சில போக்குகளை அவதானிக்க முடிகின்றது. அவை:
1. சித்திரப்படுத்துதல்-சித்திரித்துக் காட்டி அதன் வழியாகக் காட்சி இன்பத்தை உருவாக்குவதும் நிகழ்த்துவதும்

சித்திரித்துக்காட்டுதல்
உதிப்பதோரழகு
அஸ்தமிப்பது அதைவிடவும் அழகு
மலையடிவாரம் விட்டு வந்தவனுக்கு
கடல் சூழ் சிறுதீவில
சூரியனைக் காணவும்
சொல்லொழிந்த வெளி
திறந்தது
கண்.
இக்கவிதைக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு சாட்சி மறைந்ததொரு காட்சி. சூரிய உதயத்தையும் மறைவையும் காட்சிப்படுத்தும் கவிதைக்குள் உணர்வெழுச்சி எதுவும் இல்லை. ஆனால் திறந்தது கண் என்ற கடைசி வரியில் உணர்வெழுச்சிக்குப் பதிலாக உணர்தலை நிகழ்த்தியுள்ளது. உணர்ச்சிகளைத் திரட்டித் தரும் மரபுக்கவிதை புதுக்கவிதையாகவும் நவீன கவிதையாகவும் மாறும்போது உணர்வு நிகழ்த்துதலாக மாறுதல் நடக்கின்றது. மோகன ரங்கன் பல கவிதைகளில் இந்த நிகழ்த்துதலைச் செய்வதற்காகச் சித்திரமாக்கலைச் செய்துள்ளார். இடம்பெயர்ந்த கடல் தொகுப்பில் ஆரம்பத்தில் உள்ள ஜன்னல், வழுவமைதி, வடிவ கணிதம், மழைசார்ந்த ஞாபகம், இடம்பெயர்ந்த கடல், வாசனை போன்ற கவிதைகளின் சிறப்பே அவை உருவாக்கும் காட்சிகளே.இன்னொரு கவிதையை எடுத்துக்காட்டிப் பேசலாம். அக்கவிதைக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு வீடு திரும்பும் முன்:
யாருமற்ற ஸ்டேஷனில்சிமெண்ட் பெஞ்சில் சாய்ந்திருக்கும்என்னைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறதுஇருப்புப்பாதைமேய்ச்சலின்றும் திரும்பும்பசுக்களின்றும் கழுத்து மணியோசைலெவல் கிராசிங் தாண்டி மறையக்காத்திருக்கிறேன்காலம் தாழ்த்தி வரும்கடைசிப் பாசஞ்சரில்தூக்கம் தொலைத்தகரமொன்றுஜன்னல் வழிஎன்னைக் குறித்துஅசைந்து போகுமென.
தொடக்கத்தில் உள்ள கவிதைகளோடு நினைவுப்பாதை, முடிவுக்கு வந்த முந்திய வரிகள், நித்திய மலர், யாமம், ஹம்பி, வீடுபேறு போன்ற கவிதைகளின் காட்சிச்சித்திரங்களில் நிகழ்த்தப்படும் அறிதல்கள் மனிதர்களிடம் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிகழ்வுகளாகும்.
சிந்திக்க ஒரு கருத்தைச் சுட்டுதல்.
காட்சிப்படுத்துதலைக் குறைவாகவும் சிந்திக்கத்தூண்டுவதைக் கூடுதலாகவும் செய்யும் கவிதையாக்கங்களாக உள்ள கவிதைகள் சிந்திக்க வைத்து மாற்றங்களை நிகழ்த்தும் நோக்கம் கொண்டவை அல்ல. வாசிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் அவ்வளவுதான் கவிஞரின் நோக்கம். அதுவே போதுமானது என்பது அவரது கவிதைப்பார்வையாகவே இருக்கின்றது. திரை எனத் தலைப்பிட்டுள்ள இந்தக் கவிதையை வாசித்துப் பேசலாம்:
அகாலத்தில்உன் தூக்கத்தைக்கடந்துபோகும்ஆம்புலன்ஸ் வண்டியின்சைரன் ஒலி கேட்கபடுக்கையினின்றும்விழித்து எழுந்துகொள்கின்றாய்இரவு அமைதியில்நினைவு தப்பிய நோயாளியுடன்விரைந்து கொண்டிருக்கும்அவ்வண்டியின்மறுமுனையில்குணப்படுத்துமொரு கைகளுடன் கூடியமருத்துவர் ஒருவர்கனிந்த புன்னகையோடுகாத்திருக்க வேண்டும்எனும் நெகிழ்வான உனதுவிருப்பக் கற்பனையுடன்ஒரு மிடறு குளிர்ந்த நீருக்குப்பிறகுபோர்வைக்குள் மீளவும்தளர்த்திக் கொள்கிறாய்நெடிது உறைந்த மருத்துவமனையின்நிசப்தமானகுளிரூட்டப்பட்ட அறையில்அந்நோயாளியின் தலைமாட்டில்அசையும்வெண்ணிறத் திரைச்சீலையின்பின்னிருந்துஉற்றுப்பார்க்கும்உருவமற்ற ஒன்றுஉன் கனவில்வடிவம் கொண்டுவரக்கூடும்சாத்தியம் பற்றிஏதும் அறியாமலேயேநீஉறக்கத்தில்ஆழ்ந்துபோகிறாய்
நேரடிக்காட்சியாக இல்லாமல் ஒலி வழியாகவே உருவகப்படும் காட்சியொன்றின் தொடர்ச்சியில் ஈடுபாடு காட்டும் மனம், அத்துடன் தன்னை நிறுத்திக் கொண்டு அந்நிகழ்வில் நல்லது நடந்துவிடும் என்ற நம்பிக்கை கொள்வதில் நிறைவு கொள்கின்றது. சிந்திப்பதே போதும் என்று நினைக்காது செயல்பட நினைக்கும் மனிதர்களைக் கவிதைக்குள் கொண்டு வர நினைத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்காத நிலையை எழுதிக் காட்டியிருக்கும். இத்தகைய மனநிலையைக் கொண்ட மனிதர்களைப் பயம், கணப்பிறழ்வு, கிரௌஞ்ச வதம், தவளையின் சங்கீதம், மந்திரம், புதிர்வழிப்பயணம், அரிநிழல் போன்ற கவிதைகளில் வாசிக்கலாம். இந்தத் தன்மையைக் குறியீடு ஒன்றின் வழி எழுதிக் காட்டும் நீண்ட கவிதை – நல்லதொரு கவிதை ஒன்று இத்தொகுப்பில் உள்ளது. பூனைகளின் நகரம் என்று தலைப்பிட்ட கவிதையை முதலில் வாசித்துக்கொள்ளலாம்.
அந்நகரில்அதற்கு முன்பும் கூடபூனைகள் வசித்து வந்தனஎன்றாலும்அதுபூனைகளின் நகரமாகஒருவராலும்புரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை
அறுபதுக்கும்நாற்பதுக்கும் நடுவில்எவ்வளவும்கொள்ளலாம்என்பதுபோல் தோன்றியபெரும்பூனைபெயர்ந்தங்கே வந்தக்காலஅம்மாநகரத்தின்ஒதுங்கிய சிறுசந்தொன்றின்மொட்டைமாடிஇரவில் பூனைகள்குழுமுமிடமாயிற்றுபகலில்மற்றப்பூனைகளைப் போலவேவெளிறிய சாம்பல் விழிகளோடுதூக்கம் வழியும் முகத்துடன்தத்தமதுவேலைத்திட்டங்களை நிறைவேற்றஅலையும் அப்பூனைகள்இரவில்உறங்கும் மொத்த நகரையும்தம்முடிவுறாத உரையாடல்களுக்குரியஇரகசியப் பின்னணியாகஉருமாற்றி விடுகின்றன
சைவப்பூனைகளே எனினும்
சமயங்களில்
மருந்துபோல
மது பாவிக்கும் பழகியிருந்தன
அவை.உள்ளிறங்கும் மிடறுஒவ்வொன்றும்மூளையின் திசுக்களைமேலும் மிருதுவாக்கிடசுறுசுறுப்பாகிடும்அப்பூனைகள்பளபளக்கும்பச்சைக் கண்களுடன்சொல்லொன்றின்நினைவைத் தொடர்ந்துசொல்லவொண்ணாதூரங்களுக்குசுற்றியலைந்துதிரும்பும்
வளைவிட்டுக் கிளம்பும்
எலிகளைத் துரத்திக் கொன்றபின்
உதடுகளை நாவால்நீவித் துடைத்துக் கொண்டுவீடு திரும்பிஎஜமானிகளின்வெதுவெதுப்பான மடிகளையடைந்துஉடலைக் குறுக்கியபடிஉறங்கும்சக பூனைகளின்சுகவாழ்வதமக்கும் லபிக்காமல் போனதுக்கம் குரல்களில் கசியமினுங்கும் நட்சத்திரங்களுக்குக் கீழ்கண்டு மறந்தசொப்பனங்கள் குறித்துஉரையாடியபடி விழித்திருக்கும்
பூனைகள்விடிந்து வெகுநேரம் வரையிலும்உறங்கும்
விருந்தாளியாக வந்தவெளியூர்ப் பூனையொன்றுவிதந்து எழுதவும்பாடல் பெற்ற ஸ்தலமாகிவிட்டதுஅவ்வறை.
புரவலர் பூனையொன்றின் தயவில்அன்றாட சலிப்பிற்குத் தப்பிஅருகாமை மலைக்கேறிய பூனைகள்கசியும் விளக்கொளியில்கலைந்து கிடக்கும் தம் நகரைவேறு யாருடையதோ போலவிலகி நின்று பார்த்தன.அழிக்கவொண்ணாஆதிநினைவென தொடரும்அந்நகருடனான பிணைப்புஅறுத்துக் கொண்டு
தேவை கருதிதிசைக் கொன்றாய் அந்தப் பூனைகள்பிரிந்து போனபிறகுதென்னங்கீற்றுகள் அசையும்மொட்டை மாடியைஎப்போதும் போலஎட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும் நிலவுஎப்போதாவது நின்று கேட்பதுண்டுமூடிய கதவுக்குப் பின்னிருந்து எழும்முணுமுணுப்புகளை.
பூனைகள் மனிதர்களின் குறியீடுகளாக நின்று வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக மனிதர்கள் வாழ நேரும் அமைப்புகள், அவற்றின் இயங்கு வெளிகள், இயங்குவதற்கான நடத்தை முறைகள், ஒழுங்குகள், விதிகள், அவற்றை ஏற்று நடக்க நினைத்தல், மீற விரும்புதல், மீற முடியாமல் அடங்கிப் போதல் என விரியும் இந்தக் கவிதைபோல வெவ்வேறு தளத்தில் எழுதப்பெற்ற கவிதைகள் தொகுப்பில் உள்ளன. தொகுப்பின் கடைசிக் கவிதையாக உறங்காப்பத்து என்ற தலைப்பில் உள்ள 10 கவிதைகளும் அத்தகையனவே. தொடரும் கதை, ஐந்து நட்சத்திரங்கள், மகன் வரைந்த கோடு போன்ற கவிதைகள் விரிவான காட்சிகளுக்குப் பதிலாகக் கேள்விகள், யோசனைகள், ஐயங்கள், உறுதியின்மை போன்றனவற்றை எழுப்பித் தந்து வாசிப்பவர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. அண்மையில் அகழ் இதழில் வந்துள்ள மூன்று கவிதைகளில் நினைவு ஊர்வலம் கவிதைக்குள்ளும் அத்தகைய அடுக்குகளும் இயலாமையும் வெளிப்படுவதை வாசிக்க முடிகின்றது
என் பயண வழியில்எங்கோ இடையில் வந்து சேர்ந்தவள்தான்எட்டெடுத்து விரைந்து வந்துஇணையாக சேர்ந்து நடந்தாள்.‘இப்போதுதான் என்னைநீ பார்க்கிறாய்ஆனால்எப்போதிலிருந்தோ உன்னைநான் அறிவேன்’என்றவள்என் வியப்பைசற்றும் சட்டைசெய்யாமல்வயதாகிவிட்டதால்நம்புவதற்கு சிரமமாகத் தோன்றும்தேவதைக் கதை ஒன்றைதிகட்டாமல் சொன்னாள்.பருகப் பருகக் குறையாதுபெருகிடும் நீர்க்குடுவைஒன்றைப் பற்றியநினைவின் சித்திரமதைஈரம் மிளிரும் விழிகளோடுஅவள் விவரிக்கையில்நம்பும் குழந்தையானேன் நான்.என்னிருப்பில்அப்படியொரு இதத்தைஅணுக்கமான இசைவைஅதுவரையிலும் நான் உணர்ந்தவனில்லைஎத்தனை காலம்எவ்வளவு தொலைவுஎதுவும் தெரியாதுஎன்றாலும்இத்துணையிருக்கும் மட்டும்இனியில்லைவழிநடைக் கவலைஎன்றெண்ணிஆற்றியிருந்தபோதுகண்பார்க்கமுன்னால் நடந்தாள்இரண்டடி கூடுதலாகஎடுத்துவைத்தால்எட்டிப்பிடித்துவிடலாம்என்றிருந்துவிட்டேன்ஆனால்அடுத்த திருப்பத்தில்அரவமேதுமின்றிஅவள் மறைந்துபோனாள்முதலிலும் இல்லைமுடிவிலும் இல்லைஇடையில் மாத்திரம்இவ்வளவிற்கு நெருங்கிஎதற்கு வந்தாள்?ஏன் சென்றாள்?எவ்வளவிற்குஇதற்கு நான் பொறுப்பு?எறும்புகள் கூடிஇழுத்துச்செல்லும்இறந்த பூச்சிகளின் சடலமாய்இக் கேள்விகளின் புதிரைஇறுதிவரையும்இறக்கிவைக்கமுடியாமலேஇனி சுமந்தலையவேண்டும்!
வாழ்வியலை முன்வைத்தல்
மோகனரங்கனின் கவிதையாக்கத்தில் மூன்றாவது தன்மையாக மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகளின் ஆக்கத்தன்மையைச் சுட்டத்தோன்றுகின்றது. வாழ்வியல் சமூகமாக வாழ்தலின் சிக்கல்களையோ முரண்பாடுகளையோ எழுத நினைக்கவில்லை. தனி மனிதர்களாக ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் வாழ்வியல் கணங்களை எழுதிக் காட்டியிருக்கின்றார். காதலாகவும் காமமாகவும் உணரப்படும் ஆண் – பெண் உறவு நிலைகளைப் பேசும் கவிதைகள் பலவற்றை அவர் வாசிக்கத்தருகின்றார். காதலையோ, காமத்தையோ தவிர்த்துவிட விரும்பும் தன்னிலைகளாக இல்லாமல் நெருங்கி ஏற்கும் தன்னிலைகளையும், அச்சத்தின் பாற்பட்டு விலகித்தவிக்கும் தன்னிலைகளையும் எழுதிக்காட்டும் கவிதைகள் குறிப்பான கணங்களின் வெளிப்பாடாக எழுதப்பெற்றுள்ளன. முதலில் ஒரு காதல் கவிதை; தலைப்பு: வடிவ கணிதம்
தூங்காமல் போகிறமதியப்பொழுது நீளமானதுவும்கூடநீயோதொலைக்காட்சிப் பெட்டியில்பொருள் வயின் பிரிவுபட்டபஞ்சாபி வீரனொருவனின்மனைவி பற்றிய துயரங்களில்ஆழ்ந்திருந்தாய்அது சமயம்மேடம் டூஸார்ட்டின்மெழுகு பொம்மையைநினைவுறுத்துவதாக இருந்தது முகம்நடுவில்டீபாயின் மீது கிடந்தபத்திரிகையிலிருந்து தாவிகால் வரைக்குமானஉன் மாக்ஸியின்சித்திரப்பூக்களில் தயங்கிஉட்காருமென் பார்வைமின் விசிறியின் சுழற்சிஅறுந்தவொரு கணத்தில்எதேச்சையாய்ஏறிட்ட நான்கு கண்களின் போதுநானுணர்ந்தேன்தொலைக்காட்சிப் பெட்டியின் சதுரத்திற்கும்பூக்களின் வட்டத்திற்குமானதொடுகோடு ஒன்றினை.
சதுரமும் வட்டமும் சந்தித்தலுக்கான கோட்டில் உருவாகி மலரும் காதல் உணர்வைக் காட்சிப்படுத்தும் இந்தக் கவிதையை ஒத்ததாக தொகுப்பின் தலைப்புக்கவிதையான இடம் பெயர்ந்த கடலின் விவரிப்பும் உள்ளது. ஆனால் அக்கவிதை காதலிலிருந்து காமத்தை உணரும் தருணத்திற்குள் காட்சிப்படுத்துதல் வழியாகவே நகர்த்தியுள்ளது.
அன்றிரவுசொல்ல முடியாத இரகசியம்போலஎல்லாவற்றையும் ஒளித்திருந்ததுஇருள்.அறிந்திருந்த நட்சத்திரங்களோவெளிறி ஒளிர்ந்தனகட்புலனாகாப் பாஷை அவற்றினுடையது.விடிவிளக்கின் மெலிதான ஊதா வெளிச்சத்தில்கனவில் வந்ததாய்காணத்தெரிந்தது அறைமைப்பூச்சு கலைந்த விழிகள்திரை அவிழ்க்கதுவங்கியதுஆதிநாடகம்தேங்கியிருந்த மௌனத்தைஒரு மூலையில் அசைவித்ததுஉனது முதல் செல்போன்என்னில் தொடங்கிஎதிர்ப்பட்ட எல்லா உயிர்களிலும்ஓடி மறைந்ததொரு சிலிர்ப்புதொடர்ந்த இடையறாத பிரவாகத்தில்சகலமும் மூழ்கநானுணர்ந்தேன் என்னைபெருநீர்ப்பரப்பினொரு பகுதியாய்.
இந்த நகர்வுகளை வாசிக்கத்தரும் கவிதைகளாக பரிசல் பாடல், நினைவு முகம், தரிசனம், பாடல் பெறும் ஸ்தனங்கள், பெருந்திணை, அறிதுயில் காமம், இடைத்தூரம், நித்திய மலர், முன்னை இட்ட தீ, பதங்கமாதல்,எனப் பல கவிதைகளில் காதலையும் காமத்தையும் நெருக்கமாக உணரும் தருணங்களைத் தந்துள்ளார். இவற்றை எழுதும்போது விலகலான மனநிலையைக் கொண்டுவராமல் எல்லாவற்றையும் அதனதன் போக்கில் ஏற்று நகரும் மனநிலையை உருவாக்கும் விதத்திலேயே அந்தக் கவிதைகள் நவீனத்துவ மனநிலையை உருவாக்கும் கவிதைகளாக மாறி நிற்கின்றன.காதல், காமம் தாண்டி அவரது கவிதைக்குள் விவாதப்படும் வாழ்வியலாகக் கடவுளை நோக்கிய ஈடுபாடு அல்லது விலகல் பற்றிய பார்வைகளும் இருக்கின்றன. சித்தர்களின் மனப்பாங்கையும் வள்ளலாரின் மனப்பாங்கையும் விருப்பமானதாகச் சுட்டும் கவிதைகளைத் தொகுப்பில் வாசிக்க முடிகின்றது. வானப்பிரஸ்தம், பிரார்த்தனை போன்ற கவிதைகளில் இத்தகைய போக்கோடு அறிவியல் மறுப்பற்ற மனப்பாங்கைத் தரும் வாசித்துப் பொருள் கொள்ள முடிகின்றது,
மோகனரங்கனின் கவிதைகளுக்குக் குறிப்பான காலப்பின்னணியையோ, இடப்பின்னணியையோ சுட்டிக்காட்ட முடியவில்லை. இக்கவிதைகளை இன்னொரு மொழியில் பெயர்க்கும்போது அம்மொழிக்குரிய கவிதைகளாகவே தோன்றும். குறிப்பான இடப்பின்னணிகள் கொண்ட கவிதைகள் அப்படித்தோன்றாது. அதே நேரம் கவிதைக்குள் இருக்கும் மனிதத்தன்னிலைகளும் அவர்களின் சாயல்களும் தமிழ்/இந்திய மனநிலைகள் கொண்ட தன்னிலைகளாகவே இருக்கின்றனர். இதனைச் சொல்வதற்காக ஒரு கவிதையை வாசித்துக்காட்ட விரும்புகிறேன். நகர வாழ்க்கையின் மீது விருப்பமில்லாத இந்திய மனநிலையைக் காட்டும் அந்தக் கவிதைக்குக் கிளைத்த காடு எனத்தலைப்பிட்டுள்ளார்.
விளையாட்டாய்ஓரிலையை எழுதினேன்பசுமை நிறத்ததுவியப்புற்றுபூவரைந்தேன்வாசம் மணத்ததுகனியெழுதஇனிமை தித்தித்ததுகிளைகள் வேர்களெனமுழுமரமும் எழுதினேன்நிழலும் குளிர்வும்வாய்த்ததுபெயரறியாப் பறவைகள் வந்துஇசைத்திருந்தனமரம் பெருகி வனம் நிறையநலியும் நகர் தொலைத்துநனி பெரும் மனிதர்சடை வளர்த்துஇடையில் உரி தரித்தலையும் ஏகாங்கியானேன்
என்பது அந்தக் கவிதை. மோகன ரங்கனின் கவிதைத்தலைப்புகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அவை ஏற்கெனவே அறியப்பட்ட தலைப்புகளாக இருக்கின்றன. ஆனால் அத்தலைப்புகளுக்கான அறிந்த பொருளை மறுதலித்து நிற்கின்றன. கவி உருவாக்கும் மாற்றுப்பொருண்மையைக் கவிதைக்குள் விவாதப் பொருளாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாகச் செலாவணி என்று தலைப்பிட்டுக் கள்ள நாணயத்தைக் குறியீடாக்கி இருப்புக்கும் இன்மைக்குமான விவாதத்திற்குள் நகர்ந்துள்ளது. நற்செய்தி என்ற பைபிளின் சொல்லாட்சியைத் தலைப்பாக்கியுள்ள கவிதையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவர் உருவாக்கிக் கொண்ட தனித்த கூண்டுக்குள் வாழ்கின்றார்கள்; ஆனால் வெளியே உலகம் முழுவதையும் ஒவ்வொரு வீட்டையும் செயற்கைக்கொள்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது எனப் பேசுகின்றதைப் பொருண்மையாக்கியுள்ளது. மனிதர்கள் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதையும் விரிவையும் கவனிக்காமல் அவரவர் எல்லையே உலகம் என நினைத்து வாழப் பழக்கப்பட்டு விட்டார்கள் எனச்சுட்டுவதோடு அவை நற்செய்தி தானா? என்ற கேள்வியை எழுப்புவதுபோலக் கவிதை நீண்டுள்ளது. அந்தக் கவிதை நமது காலத்தின் மீது கவனப்படுத்தும் முக்கியமானதொரு கவிதையாக வந்துள்ளது:
நாம்கைகுலுக்கிக்கொண்டோம்ரேகைகள் அழிந்துவிடாமல்உள்ளங்கைச் சூடுஉணர்வுகளைக் கடத்திவிடாமல்கவனமாகக்கையுறை அணிந்துகொண்டோம்தம் தகவல் வலைக்குள்உலகைச் சுருட்டியபடிமாநகரங்களின் மேல்சுற்றிக்கொண்டிருக்கின்றனசெயற்கைக்கோள்கள்கழ்த்திசை வானில் உதிக்கிறதா?திர்கிறதா?ஒருவரும் கவனிப்பதில்லைநட்சத்திரங்களை.முடிவாக இப்படிச் சுட்டலாம்.என்தோட்டத்தில்உட்கார்ந்திருந்தபெயரறியாப்பறவையைஉனக்காககாகிதத்தில் பிடித்து வைக்கமுயன்றேன்சொல்ல வந்ததற்கும்சொல்லில் வந்ததற்கும்நடுவில்பறந்து போயிருந்ததுபறவை
இத்தன்மையை விவாதிக்க இன்னும் பல தலைப்புகள் தொகுப்பில் உள்ளன. அந்தி, பெருந்திணை, விகாசம், தரிசனம், வழுவமைதி, கடை திறப்பு, அறிதுயில் காமம், ஏமப்புணை, எதிரேடகம், தோற்றப்பிழை போன்றன என இங்கு சுட்டுகின்றேன்.
முடிவாக இப்படிச் சொல்லலாம்: மோகனரங்கனின் கவிதையாக்கம் என்பது சித்திரப்படுத்துதலைத் தொடர்ச்சியாகச் செய்கின்றது. அதன் வழிச் சூழலையும் தன்னிலையையும் காட்சிப்படுத்தி வாசகர்களைக் கவிதைக்குள் இழுத்தல் என்பதாகச் செயல்படுகின்றது. உள்ளிழுக்கப்பட்ட வாசகர்களுக்கு அவரது நம்பிக்கை சார்ந்தும் புரிதல் சார்ந்தும் பல்வேறு கருத்துநிலைச் சுட்டிக்காட்டிச் சிந்திக்கத் தூண்டுகின்றார். சிந்திக்கத் தூண்டும் காட்சிகள் வழியாக வாழ்வியலின் இயல்பைச் சுட்டுவது, முரணை விளக்குவது, அபத்தத்தைப் பேசுவது, அறிதலற்ற நிலையைக் காட்டிவிட்டு ஒதுங்குவது, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நோக்கி நகர்த்துவது எனக் கவிதையாக்கத்தைக் கருத்துநிலையோடு இணைத்துக் காட்டுவது எனக் கையாள்கின்றார். அவையெல்லாம் கடந்து காலத்தனவாக இல்லாமல் நிகழ்காலத்து மனிதர்களின் இருப்போடும் சாயலோடும் இருக்கின்றன.
=========================================
*உருவம் (Form), உள்ளடக்கம் (Content) என்ற சொற்கள் திரும்பத்திரும்ப இலக்கியத் திறனாய்வில் பயன்படுத்தப்படும் சொற்கள். இவ்விரு கலைச்சொற்களுக்கு மாற்றாகத் தமிழில் வடிவம் (Structure), கரு (Theme)என்ற கலைச்சொற்களும் பயன்பாட்டில் உள்ளன. உருவம் என்பதை வடிவம் என்ற சொல்லால் பதிலீடு செய்வதுபோல, உள்ளடக்கம் என்பதைக் கரு என்ற சொல்லால் பதிலீடு செய்கின்றார்கள். ஆனால் உள்ளடக்கம் என்பதைப் பதிலீடு செய்ய ‘உரிப்பொருள்’ என்ற சொல்லே சரியானது; பொருத்தமானது. கரு என்பது வடமொழி இலக்கிய மரபில் வரும் கருவோடு நெருங்கிய உறவுடையது. கர்ப்பத்தில் தங்கியிருக்கும் கரு வளர்ந்து மனிதக்குழந்தையாக மாறுவதுபோல எழுத்தாளரின் மனதிற்குள் இருக்கும் எண்ணம் வளர்ந்து இலக்கியமாக – கவிதையாக, நாடகமாக, கதையாக மாறுகின்றது என்பது அந்த மரபு. ஆனால் தமிழ் மரபில் கரு, கருப்பொருள் என்பனப் பாடலின் வெளிசார்ந்த பின்னணிகளைக் குறிக்கும் சொல். எனவே கரு என்பது உள்ளடக்கத்தோடு தொடர்பில்லாதது எனக் கருதிப் பயன்படுத்துவதில்லை
- கட்டுரை சி.கே.குப்புசாமி நினைவு விருதளிப்பு நிகழ்வில் வெளியிடப்பெற்ற தொகுப்புக்காக எழுதப்பெற்ற கட்டுரை

கருத்துகள்