கூட்டம்.. கூட்டமான கூட்டம்
.jpg)
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை புதியதல்ல. காங்கிரஸ் ஆட்சியின்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுத் தொடங்கப்பட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகையதொரு கணக்கெடுப்பில் ஒவ்வொரு சிறுகுழுவும் பெருங்குழுவும் அதனதன் இருப்புக்கேற்பச் சலுகைகள் பெறும் என்ற எண்ணமும் நடைமுறை யதார்த்தமும் இருந்தாலும் மக்களாட்சி முறையின் கோட்பாட்டு அடிப்படையில் நம்பிக்கை இருக்கும் ஒருவர் இந்தக் கணக்கெடுப்பை மனதார ஒத்துக்கொள்ள இயலாது என்றே நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப்பேச்சு தொடங்கிய காலகட்டத்திலேயே அதனைக் குறுத்துக் கட்டுரை ஒன்றை அம்ருதா இதழில் எழுதினேன். இப்போது திரும்பவும் தருகிறேன்.