நாய்களும் பூனைகளும்
வார்சாவில் போல்ஸ்கிய மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தியபோது சுவாரசியமான வெவ்வேறு அனுபவங்கள் கிடைத்ததுண்டு. சிலவற்றை முன்பே எழுதியதுண்டு. இப்போது 'நம் குடும்பம்' என்ற தலைப்பிலான பாடத்தைச் சொல்லிக்கொடுத்த அனுபவத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். இந்தப் பாடத்தை நடத்துவதற்கு முன்பே இந்தியவியல் துறையின் தலைவி முனைவர் தேனுதா ஒரு எச்சரிக்கைக் குறிப்பொன்றைச் சொல்லியிருந்தார். இந்தியக் குடும்ப அமைப்பை மனதில் வைத்துக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் பெயர்களைக் கேட்கக்கூடாது என்பது அந்த எச்சரிக்கை.