சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்
வாசிப்பதற்கு முன் ஒரு குறிப்பு இந்தக் கட்டுரை 2006 இல் உயிர்மை மாத் இதழுக்கு எழுதப்பட்டது. வெகுமக்கள் ஊடகங்கள், பொதுமனநிலை உருவாக்கும் விதமாகக் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன என்ற சிந்தனைப் போக்கின் பின்னணியில் ஐரொப்பியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் நடந்தன. ரேய்மண்ட் வில்லியம்ஸ் போன்றோர் முக்கியமான முடிவுகளைச் சொன்னார்கள். அதனைப் பின்பற்றி அமைந்தது இந்தக் கட்டுரை. பல்கலைக்கழக ஆய்வு முறையியலை அப்படியே உள்வாங்காமல் இடைநிலை இதழியலின் தேவைக்கேற்ப எழுதப்பட்டது. பின்னர் ஆழி பதிப்பகம் வெளியிட்ட பெருந்தொகுப்பு ஒன்றில் இடம்பெற்றது. அதனைத் தொகுத்தவர் பத்திரிகையாளர் சி. அண்ணாமலை. இப்போதும் இக்கட்டுரை விவாதிக்கும் எதுவும் மாறிவிடவில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கின்றன. இப்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகளின் பெயர்களை அந்த இடத்தில் மாற்றிப் போட்டு நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். இனிக் கட்டுரைக்குப் போகலாம்...