இடுகைகள்

நாயக்கர் காலம் இயல் 4. சமயநிலை

படம்
மனிதகுல வரலாற்றில் சமயங்களின் இடம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலும், பல சமயங்களின் பிறப்பிடமாகவும், பல சமயத்தவர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கண்டிருந்ததாகவும் உள்ள இந்தியாவின் வரலாறு பற்றிய ஆய்வில் சமயங்களின் பங்கு, தவிர்க்க முடியாதது . “சமயம் மனிதரை நெறிப்படுத்துவது; முறைப்படுத்துவது; சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை; சமயவாழ்க்கையினால் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புக்களாக மாறும்; இதயம் விரியும்; ஈர அன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும்; ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும்; இதுவே சமயத்தின் பயன் “ என ஆன்மீகவாதிகள் சமயத்திற்கு விளக்கம் தருகின்றனர்.1 ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமயமும் பரந்த அளவு மக்களைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன் காரணமாகத் தனது போதனைகளே உயர்வானது; உண்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியது என நிறுவவும் முயன்றுள்ளன. இருக்கின்ற சமயங்களின் போதனைகள் திருப்தி அளிக்காத நிலையில் புதிய சமயம் கிளைவிடுவதும், பழைய சமயத்தின் அதிகாரப் பரப்பைக் கையகப் படுத்தித் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதுமான செயல்களும் நிகழ்ந்த

நாயக்கர் காலம். இயல்.3. அரசும் நிர்வாகமும்

படம்
ஆளுதல், மேலாண்மைபுரிதல், உரிமைகளைப் பெற்றிருத்தல், சேவை புரிதல் முதலிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது அரசு (State) ஆகும். ஏதேனும் ஒருவகையில் ஒருநபர் அல்லது ஒரு குழுவினர் பிறரை விட அல்லது பிற குழுக்களை விட வல்லமையும், வன்மையும் பெற்றிருப்பதை இவ்வரசு குறிக்கிறது. அதிகாரங்கள், உரிமைகள் முறைப் படுத்தப்படும் போது அரசு ஒரு நிறுவனமாக அமைகின்றது. எனவே அரசும் ஓர் அமைப்பு முறைமையைக் கொண்டதே ஆகும்.

தங்கர் பச்சானின் சொல்முறையும் கருமேகங்கள் கலைகின்றன என்ற அண்மை சினிமாவும்

படம்
தங்கரின் எல்லா சினிமாக்களையும் பார்த்திருக்கிறேன். அம்மாவின் கைபேசியையும் களவாடிய பொழுதுகளையும் ஏன் பார்க்க நினைத்தோம் என்று நினைத்ததுண்டு. இவ்விரண்டு படங்களிலும் அவரது சொல்முறையை விட்டு விலகியதே காரணம் எனச் சமாதானம் செய்துகொண்டதுண்டு. அவருக்குக் கைவராத சொல்முறையொன்றை முயற்சி செய்த அவ்விரு படங்களும் அவருக்கு எந்தவிதத்திலும் பெயர் வாங்கித்தரவும் இல்லை. வசுல் அளவிலும் அவரைக் காப்பாற்றவுமில்லை.

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

படம்
ஒரு தேசத்தின் மொத்தப் பரப்பின் சமுதாயநிலையை அறிய முயலும் அறிஞர்களும் சரி, அதன் பகுதியான ஒரு பகுதியை அறியும் நோக்கம் கொண்ட அறிஞர்களும் சமுதாயத்தின் பேரலகுகளான அரசமைப்பு, அதன் உட்கூறுகளான நிர்வாக அமைப்புக்கூறுகள், சமயம், சாதி, நாகரிகம் என்பன போன்ற அமைப்புமுறைகளை அறியவே முதன்மையாக விரும்புகின்றனர். ஆனால் சமுதாயக் கட்டமைப்புக்குக் காரணமாகவும், அதனை வழி நடத்துவதற்குரிய உந்துசக்தியாகவும், அதன் சாராம்சமாகவும் இருக்கின்ற பொருளாதாரச் செயல்பாடுகளையும் உறவுகளையும் அறிவது முதன்மை தேவையாகும். ஏனெனில் மனிதகுலம் தான் வாழ்வதற்கும், வளர்வதற்கும் உணவு, உடை, உறையுள் எனும் மூன்றையும் அடிப்படைத் தேவைகளாகக் கொண்டு முயன்று வருகிறது

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

படம்
தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது. பல்வேறு இலக்கிய வகை களையும் பலவகையான படைப்பாக்க முறைகளையும் தமிழ் இலக்கியம் கண்டுள்ளது, ஒரு மொழியின் இலக்கிய வரலாறு என்பதே ஒவ்வொரு காலத்திலும், இலக்கியங்கள் மாறி வளர்ந்து வருகின்ற தன்மையைப் பொறுத்தது தான். தமிழக வரலாற்றில் பிற்காலச் சோழர் காலத்தில் காணப் பட்ட காப்பியங்களின் எழுச்சி, அதன் பிற்காலத்தில் வீழ்ச்சி பெறுவதைக் காணலாம். அதன் பின்னர் சோழப் பேரரசு போன்ற பெரும் வல்லமை படைத்த அரசு அமைந்திராத நிலையில் இலக்கிய வரலாற்றிலும் மாற்றம் காணப்படுகிறது. சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய காலம் நாயக்கர்களின் காலம் என்பது பலரும் ஒப்புக்கொள்கின்ற செய்தி.. சிற்றிலக்கியங்கள் எத்தன்மையன? அவற்றின் பாடுபொருட்கள் எவை? பாடுபொருட்களுக்கும் வடிவத்திற்கும் இருந்த உறவு எத்தகையது? என்று இலக்கிய ஆராய்ச்சியில் கவனம்¢ செலுத்துவது தனி ஆராய்ச்சி. இங்கு அத்தகைய இலக்கியங்கள் வழியாக, அந்தக் காலத்து அரசியல் பொருளாதார, சமூக வாழ்க்கை ஆராயப்படுகிறது.

பிக்பாஸ் - சில குறிப்புகள்

படம்
பிக்பாஸ்-7:தவறவிட்ட முதலிடம் வெகுமக்கள் ஊடகங்களைக் கவனித்து வெகுமக்கள் பண்பாடும் அரசியல் தீர்மானங்களும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து விவாதித்து வருபவன் என்ற வகையில் இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கான கிரிக்கெட் விளையாட்டையும், தமிழர்களின் ஆகக் கூடிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் முதன்மை நேர நிகழ்ச்சிகளை- குறிப்பாகப் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்துவிடுவதைத் தவிர்ப்பதில்லை. நேரலையாகப் பார்க்கத் தவறினால் மறு ஒளிபரப்பிலாவது பார்த்துவிடுவேன். இப்போது அவற்றுக்கான செயலிகள் வந்தபின் நேரலையாகத் தான் பார்க்க வேண்டும் என்பதில்லை.இந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்கள்) போட்டியின் இறுதிப்போட்டியை நேரலையாகப் பார்க்கவில்லை. அதேபோல் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரலை நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை, இப்போது பார்த்து முடித்துவிட்டேன்.

வண்ணக்கலவைத் தொட்டியில் அலையும் குதூகலம்

படம்
இலக்கிய வாசிப்பு ஒவ்வொரு வடிவத்திற்கும் வேறானது. நாவலை வாசிப்பதுபோலவே நாடகத்தை வாசித்துவிட முடியாது. நாவலையும் நாடகத்தையும் விரும்பி வாசிக்கும் ஒருவருக்கு சிறுகதைகளும் கவிதைகளும் விருப்பமில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. சிறுகதைகளுக்குள் நுழைந்து மனம் ஒப்பும் ஒன்றைக் கைப்பற்றிக் கதையை ரசித்து விடும் ஒருவர் கவிதையின் வாசலைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கவும் கூடும்.