இடுகைகள்

ஆஸ்டின் : பேரவைக்கூடமும் அலோமா போர்க்காட்சி நினைவுகளும்

படம்
அமெரிக்காவிற்கு வந்து இரண்டாவது வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிறில் பார்க்க விரும்பிய முக்கிய இடம் சான் அண்டோனியா. அங்கிருக்கும் அருங்காட்சியகங்களும் நதியில் மிதக்கும் படகுப்பயணமும் தவிர்க்கக்கூடாதவை என்ற பட்டியலில் இருந்தன. அத்தோடு சான் அண்டோனியா போகும் வழியில் தான் டெக்சாஸ் மாநிலத்தின் நிர்வாகத்தலைநகரமான ஆஸ்டினும் இருக்கிறது.

குட்நைட் - திட்டமிட்ட படப்பிடிப்பின் வெளிப்பாடு

படம்
முழுமையான ஆற்றுகைப் பனுவலைக் கொண்டு நாடக ஒத்திகைக்குப் போவதுபோல முழுமையான படப்பிடிப்பு பனுவலை - புரடக்சன் ஸ்கிரிப்ட்டோடு படப்பிடிப்பைத் தொடங்கினால் சினிமாவின் செலவு கோடிகளில் இருக்க வாய்ப்பில்லை. தனது திரைக்கதையின் மீது நம்பிக்கை கொண்ட இயக்குநர் அப்படித்தான் செயல்படுவார். அப்படிச் செயல்பட்டு உருவாக்கப்பட்ட சினிமாவாக குட்நைட் வந்திருக்கிறது.

சான் அண்டோனியோ: நதியோடும் நகரம் …..

படம்
டெக்சாஸ் மாநிலத்தில் பார்க்கவேண்டிய நகரங்கள் வரிசையில் இரண்டாவதாக இருந்தது சான் அண்டோனியோ. உலக வரலாற்றில் பாதுகாக்கப்படவேண்டியன என்று கருதும் நினைவுச்சின்னங்களைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு பாதுகாக்கும் பொறுப்பை வலியுறுத்துகின்றது யுனெஸ்கோ மரபுக்காப்பகம். சிறப்பு நிதி கிடைக்க ஏற்பாடுகிறது. சான் அண்டோனியோ நகரத்து அலோமா ஆவணக்காப்பகம் அப்படிப் பட்டியலிடப்பட்ட ஒன்று. அத்தோடு நகரின் குறுக்கே ஓடும் ஆண்டோனியா நதியும் சிறப்பான சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

வெட்டியெடுக்கப்பட்ட சதைத்துண்டு: லதா உதயனின் அக்கினிக்குஞ்சுகள்

படம்
நாவல் இலக்கியம் புறநிலை சார்ந்தும் அகநிலை சார்ந்தும் பெரும் கொந்தளிப்புகளை எழுதிக்காட்டுவதற்கான இலக்கிய வகைமை. பெரும் கொந்தளிப்புகள் உருவாக்கக் காரணிகளாக இருக்கும் அரசியல் பொருளாதாரச் சமூக முரண்பாடுகளை அதன் காலப்பொருத்தத்தோடும், சூழல் பொருத்தத்தோடும் எழுதிக்காட்டும் புனைவுகள், வரலாற்று ஆவணமாகும் வாய்ப்புகளுண்டு.

பொழில்வாச்சி நா.கணேசன் என்னும் பல்திற ஆளுமை

படம்
ஊர்ப்பெயரை முன்னொட்டாக கொள்வது தமிழ்ப் பெயரிடல் மரபு. அதனை அறிந்துள்ள நா. கணேசன் தனது பெயரை இப்படி வைத்துக்கொண்டுள்ளார். பொழில்வாச்சி என்பது பொள்ளாச்சி என அழைக்கப்படும் நகரத்தின் தொன்மைப் பெயர். நா.கணேசன் இப்போது இருப்பது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்து ஹூஸ்டன் நகரில். பணியாற்றியது அமெரிக்காவின் ‘நாசா’ வான்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியாக. ராக்கெட் தொழில் நுட்பப் பணியில் உயர்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இப்போது அமெரிக்காவின் விமானப்படைப்பிரிவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்களைத் தரும் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.

நுண் முரண்களின் விவாதக்களமாகும் நீயா? நானா?

படம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா? அதன் தொடக்க ஆண்டுகளில் இரவு 9 மணிக்குத் தொடங்கி 11 வரை நீண்ட நிகழ்வாக இருந்தது. அடுத்த நாள் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்றாலும் பார்த்துவிட்டுப் படுத்தோம். அந்நிகழ்வு தமிழ்ச் சமூகத்தின் உளவியலையும் சமூகவியலையும் கேள்விக்குட்படுத்தும் தலைப்புகளில் - பொருண்மைகளில் விவாதங்களை நடத்தியது. அந்தக் காலகட்டத்தில் ஊடகங்களைக் குறித்து எனது பார்வைகளை எனது வலைப்பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்படியொரு விமரிசனக்கட்டுரையாக எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு: ‘ கலைக்கப்படும் மௌனங்கள்’

நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம்

படம்
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தது. இந்தோ -சீனா போரில் இந்தியாவிற்கு ஆதரவு காட்டியவர் அப்போதை அதிபர் ஜான் பிட்ஜிரால்டு கென்னடி. அவர் டல்லாஸ் நகரத்தில் கொல்லப்பட்டார் என வானொலியில் செய்தியாகக் கேட்டிருக்கிறேன்; பள்ளிப்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே வந்திறங்கியபோது டல்லாஸ் (DALLAS) என உச்சரிப்பது தவறு;‘டேலஸ்’ என்றே உச்சரிக்க வேண்டும் என உணர்த்தப்பட்ட து. ஆனாலும் நான் டல்லாஸ் என்றே எழுதுகிறேன்.