இடுகைகள்

புகையிரத (ரயில்) பயணத்தில்

படம்
இலங்கை போன்ற குட்டி நாட்டில் நீண்ட தூரப் பயணங்களை இருப்பூர்தி வழியாகத் திட்டமிடலாம். தூரப் பயணங்களுக்குப் பேருந்துகளே போதுமானது; ஏற்றது. 2016 இல் சென்ற முதல் இலங்கைப் பயணத்தில் ரயிலைப் பார்க்கவே இல்லை. போர்க்காலம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழர் பகுதிக்குள் செல்லும் பாதைகள் இன்னும் செப்பனிடப்படவில்லை என்றும், ஓடும் ரயில்களும் பழைய ரயில்கள் என்றும் சொன்னதால் அந்தத்தடவை ரயில் பயணம் பற்றி யோசிக்கவே இல்லை.

நகர்வலம் : அடுக்குமாடிகளும் ராஜபாட்டைகளும்

படம்
உலகமயப் பொருளாதாரத்தையும் அதுசார்ந்த வர்த்தகத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில் எல்லா நாட்டின் தலைநகரங்களும் மாற்றத்தைப் பெருமளவு சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் அலுவல் ரீதியான தலைநகர் ஒன்றாகவும் வணிகத் தலைநகர் இன்னொன்றாகவும் பண்பாட்டுத்தலைநகர் மற்றொன்றாகவும் இருக்கும். பன்னெடுங்கால வரலாறு கொண்ட நாடுகளில் ஒவ்வொரு நகரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கவே செய்யும்.

புதிய படிப்புகளை நோக்கி ஒரு நிறுவனம்

படம்
கொழும்புவில் இரண்டாவது நாள் இலங்கைக்கு வந்த முதல் பயணத்திற்கும் இரண்டாவது பயணத்திற்கும் பெரிய அளவு வேறுபாடு உண்டு. முதல் பயணம் முழுவதும் கல்விப்புல ஏற்பாட்டுப் பயணம். ஆனால் இரண்டாவது பயணத்தில் எல்லா ஏற்பாடுகளும் சொந்த ஏற்பாடு போல. அதனைச் செய்து தந்தவர்கள் நண்பர்களே. கொழும்புக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டவர் ஷாமிலா முஸ்டீன்.

நுழைவும் அலைவும் : சில கவனக் குறிப்புகள்

படம்
  கொழும்புவில் முதல் நாள் இலங்கை இந்தியாவின் நெருங்கிய    நட்பு நாடு. அதனால் இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டுவிட்டது.  இலங்கைக்கான விமானத்தில் ஏறும் விமான நிலையத்தில் இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதிபெற்றுக் கொள்ளலாம் ( On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாக மாறிவிட்டது என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு, கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய , இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாக வும் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை

எனக்குள்ளிருந்த இலங்கைத் தீவு

படம்
லங்காபுரியைக் கடல்சூழ்ந்த தீவாகவே எனது முதல் வாசிப்பு சொன்னது. ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்லப்பட்ட சீதா தேவியைத் தேடிச்செல்லும் அனுமன் தனது தாவுதிறனால் கடல் தாண்டிப் போய் இறங்கிய மலையும், அரண்மனையும் பற்றிய வர்ணனையை எனது தாத்தாவுக்கு வாசித்த போது எனக்குள் இலங்கைப் பரப்பு ஓர் அரக்கனின் ஆட்சி நடக்கும் பூமியாக அறிமுகமானது. சீதாதேவையைத் தூக்கிச் சென்ற ராவணனின் இலங்காபுரியாக எனக்குள் நுழைந்த பிரதேசப்பரப்பு ராஜ கோபாலாச்சாரியாரின் சக்கரவர்த்தித் திருமகன் வழியாக அறிமுகமான பிரதேசம். 

நின்று பார்த்த மாலையும் கடந்து வந்த காலையும்

படம்
  எத்தனை கோயில்கள்.. எத்தனை கடவுள்கள்   இன்றைய மாலை /13-12-21 இந்தியப் பரப்பெங்கும் பல்வேறு கோயில்களில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் ஓரிடத்திற்குக் கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள் அந்த வெளியில். ஏழெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ந்த சுற்றுச் சுவர்களுக்குள் 108 கோயில்களும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

புதுமுகங்கள்; புதிய பாதைகள் - புல்புல் இஸபெல்லா, ஈழவாணி

படம்
  திறக்கும் வெளிகளுக்குள் நுழைவது மட்டுமல்ல; புதியபுதிய வெளிகளையே திறக்கிறார்கள் பெண்கள். பெண்களின் நுழைவுகள் ஆச்சரியப்பட வேண்டியனவல்ல. அடையாளப்படுத்தப்பட வேண்டியன