இடுகைகள்

பயணங்கள் அற்ற கோடை விடுமுறை..

இந்தக் கோடை விடுமுறையில் விருப்பமான பயணம் என ஒன்றையும் மேற்கொள்ளவில்லை. சொந்தக் காரணங்களால் இப்படி நேர்ந்து விட்டது. கோடை விடுமுறை முடியப்போகும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தால் எனது நீண்ட பயணங்கள் எல்லாம் கோடை விடுமுறையில் நிகழ்ந்தனவாகவே இருக்கின்றன என்பது புரிகிறது

வரலாறு எழுதுவது பற்றிச் சில குறிப்புகள்

இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது.

ஒதுக்கி வைத்தல்- பங்கேற்றல்- கொண்டாடுதல்

படம்
எனது முகவரிக்கு மாதந்தோறும் வந்து சேரும் ஏழெட்டு இடைநிலைப் பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகளை முதல் புரட்டுதலில் வாசிப்பது வழக்கம். இலக்கியவாதிகளுக்கான அஞ்சலிக் குறிப்புகள், பெற்ற விருதுகள் பற்றிய குறிப்புகள், அந்தந்த பத்திரிகைகளின் உள்வட்டாரத்திற்குரிய இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள், பற்றிய பதிவுகள், இலக்கியக் கிசுகிசுக்கள், வம்பளப்புகள் போன்றன அந்த முதல் புரட்டுதலில் கவனம் பெற்று விடும். இந்த மாதம் –பிப்ரவரி- மிகுந்த கவனத்தோடு ஒரு பெயரையும் குறிப்பையும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, புத்தகம் பேசுது, உயிர் எழுத்து, தீராநதி, புதிய கோடாங்கி என என் வீட்டுக்கு வந்து சேரும் எல்லாப் பத்திரிகைகளிலும் தேடினேன். ஒரு பத்திரிகையிலும் அந்தக் குறிப்பு இல்லை.

நகரவாசியான கதை

திருநெல்வேலி , கட்டபொம்மன் நகர், ஏழாவது தெரு, செந்தில் நகர், மனை எண் 10. இந்த முகவரிக்கு நான் குடிவந்தது 2002, பிப்ரவரி மாதம் ஆம் தேதி. தனிக் குடித்தனம் தொடங்கிய பின் குடியேறும் எட்டாவது வீடு. இதற்கு முன் குடியிருந்த ஏழு வீடுகளும் வாடகை வீடுகள். இது சொந்த வீடு.

துயரத்தின் பாடல்கள்

சட்டையின் பாடல்

ஒரு பாடல்

எட்டுத் திக்கும் மதயானை

படம்
போருக்குப் பல கட்டங்கள். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளோடு போராடும் போரை நான் சொல்லவில்லை. கண்ணுக்குத் தெரியாத பண்பாட்டு வெளிகளில் நடக்கும் போர்களின் கட்டங்களையே இங்கு குறிப்பிடுகிறேன். இன்றைய தேதியில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை எதிரி யாராக இருக்க முடியும்? தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம் பற்றியும் அறியாமல் தான் தோன்றித்தனமாக கருத்து சொல்லும் பெண்களாக இருக்கமுடியும். கருத்துச் சொல்பவர்கள் மட்டுமல்ல; நடந்துகொள்பவர்களும்கூட.  அப்படி நடந்துகொண்டவர் ஸ்ரேயா என்னும் நடிகை.