இடுகைகள்

அந்நியமாகும் ஆசைகள்:சி.என்.அண்ணாதுரையின் செவ்வாழை

‘அவ அந்நியக்காரி; அதனாலே தான் மாமனையோ அத்தைக்காரியையோ கவனிக்க மாட்டேங்குறா. சொந்தபந்தத்திலயிருந்து ஒருத்தி வந்திருந்தா இப்படி ஆயிருக்குமா? ’ - இந்தப் பேச்சில் வரும் அந்நியம் என்ற சொல் அயல் நாடு , அயல் மாநிலம், வேறு மாவட்டம் என இடம் சார்ந்த அந்நியத்தைக் குறிக்கும் சொல் அல்ல. வேற்று மதம், வேறு சாதி அல்லது துணைசாதிகளில் மாறுபாடு என்பதான பண்பாட்டு அந்நியங்களையோ கூடக் குறிக்கவில்லை.

வினையும் எதிர்வினையும் : சோ.தர்மனின் சிதைவுகள்

நான்கு வழிச்சாலைகளின் திறப்புக்குப் பின் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் பேருந்துப் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைந்து விட்டது என்பதில் அந்த நண்பருக்கு ஏகப்பட்ட சந்தோசம். தனது வேலை காரணமாக வாரத்திற்கு மூன்று முறை மதுரைக்குப் போய்வருபவர் அவர். இடைநில்லாப் பேருந்துகள் மூன்றரை மணிநேரத்தில் போய்ச் சேர்ந்து விடுகின்றன என்று ஒரு நாளைக்கு மூன்று முறை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

சிரித்துக் கொள்ள சில மணித்துளிகள்: அசோகமித்திரனின் சங்கமம்

குடியிருந்த வீடுகளின் கதை- பல ஊர்களுக்கும் மாறுதல் பெற்று வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க ஊழியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி. வாடகை வீடு தேடுவதும், வீட்டு உரிமையாளரின் கட்டு திட்டங்களைக் கேட்டு மனதைக் கெட்டியாக்கிக் கொண்டு முன்பணம் கொடுத்துச் சாவி வாங்கிக் குடியேறுவதும், நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பிரிக்க முடியாத சோக சித்திரங்கள் என்பதை விலாவரியாக அவர்கள் சொல்வார்கள். அத்தகைய சோக சித்திரங்களுக்குள் வாய்விட்டுச் சிரிக்கும் நாட்கள் இருந்ததா ? எனக் கேட்டால் , நிச்சயம் இல்லை என்றே பல பேர் சொல்லக் கூடும். 

நான் வாழுகின்ற நகரம்

(உணரப்படாதவரை எதுவுமே சிக்கல் இல்லை ) திருநெல்வேலிக்கு நான் முதன் முதலில் போனது 1982 -இல் என்பது எனது நினைவு.மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பியூசிஎல்) தொடுத்திருந்த ஒரு வழக்கு நிதிக்காக ஞாநி எழுதிய பலூன் நாடகம் போட , மதுரை நிஜநாடக இயக்க நடிகனாக அங்கு போயிருந்தேன். திருநெல்வேலிக்குப் போகிறோம் என்று நினைத்தவுடன் அப்பொழுது பேச்சிலும் நினைப்பிலும் வந்த வார்த்தைகள் நான்கு. திருநெல்வேலி அல்வா, தாமிரபரணி ஆறு, பாளையங்கோட்டை ஜெயில், நெல்லையப்பர் கோவில்.