இடுகைகள்

தேடும் பறவைகள்: மீரானின் இரைகள்

  இந்த வசதிகள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களுக்குக் கிடைக்காதவை. வளைவுகளற்ற நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் வழுக்கிக் கொண்டு போகும் ஆம்னி பஸ்கள், விரைவுப் பேருந்துகள் உட்பட்ட போக்கு வரத்து வசதிகள், விதவிதமாய்க் கல்வியைக் கற்றுத் தரும் கல்விச் சாலைகள், தனித்தனி உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் பாலி கிளினிக்குகள், டிக்கெட் கிடைக்கவில்லையென்று தியேட்டருக்குப் போன பின்பு திரும்பி வரத் தேவையில்லாத அளவுக்கு ஒரே இடத்தில் பல தரப்பட்ட சினிமாக்களைச் சேர்த்து வைத்திருக்கும் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், சாப்பிடும் போதே பிள்ளைகள் விளையாடத் தனி அறைகள், குடும்பமாகச் சாப்பிடும் போது மற்றவர்களுக்குக் கேட்காதவாறு தடுக்கும் இசைக் கோலங்களை உமிழும் ரம்மியமான சூழல் கொண்ட உணவு விடுதிகள், அந்நிய நாடுகளில் மட்டுமே கிடைத்த வண்ண ஆடைகளைக் கட்டித் தொங்க விட்டு அசத்தும் துணிக்கடல்கள், காலனிக் காட்சிக் கூடங்கள், வீட்டுபயோகப் பொருட்காட்சி அரங்குகள் என வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது உலகமயப் பொருளாதாரம்.

கலையும் ஒப்பனைகள்

[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ] காட்சி:1 [அவன் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறான்.உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில் இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம் குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது]. 'நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்.. காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ; ஒத்துக்க முடியாது நான் ஒத்துக்க முடியாது. எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம் எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம் எனது சமயம் ; எனது மக்கள்... அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது. உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை எல்லாவற்றையும் மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை' [வசனப் பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப்பதற்கேற்ப அந்த உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசடவென

மேடு நோக்கிப் பாயும் ஆறு: கிராஜநாராயணின் தாவைப்பார்த்து

எனக்கு நேர்கிற அனுபவம் மட்டும் அல்ல; என்னைப் போல நகரவாசியாக மாறிய பிறகு அவ்வப்போது சொந்தக் கிராமத்திற்குப் போய்வரக் கூடிய ஒவ்வொருவருக்கும் நேர்கிற அனுபவம் தான் இது. இந்த முறை ஊருக்குப் போன போது எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டிற்கு ஒரு டி.வி.பெட்டி- கிடைத்ததில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி அது.

தொடரும் துன்பக்கேணி : வண்ணநிலவனின் துன்பக்கேணி

படம்
திரும்பவும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்; பனை மரங்களையும் தென்னை மரங்களையும் தங்கள் காடுகளிலும் தோட்டங்களிலும் வளர்த்திருக்கும் விவசாயி களுக்குப் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத் திலிருந்தும் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் அடிப்படை யில் போதை ஊட்டும் மதுபானங்கள் அல்ல; அவை உடல் நலத்திற்கு உதவக் கூடிய மருந்துகள் என்ற வாதம் கள் ஆதரவாளர்களிடமிருந்து வருகின்றது.