இடுகைகள்

இந்தியச் சூழலில் ஒடுக்கப்பட்டோர் அரங்கும் ஒடுக்கப்படுவோருக்கான அரங்கும்

படம்
‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘மக்கள்’ என்ற சொல் பல தளங்களில் வெவ்வேறு அர்த்தங்களைத் தரக்கூடியது என்பதை இனியும் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் என்பது பொதுச் சொல் என்று கருதி உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் கலை இலக்கியம் பொதுவானது எனப் பொருள் கொள்ளல் இப்பொழுது சாத்தியமில்லை. உலகம் பற்றிய - உலகத்தில் உள்ள உயிரிகள் மற்றும் பொருள்கள் பற்றிய அறிவுத் தோற்றவியல் சமீபத்தில் புதிய விளக்கம் ஒன்றைத் தந்துள்ளது.

வட்டார வரலாற்றுக்கான ஆதாரங்கள்

அரசதிகாரத்தின் வரலாறாகவும் அதனைக் கைப்பற்றிட நடந்த போர்கள் மற்றும் சதிகளைப் பற்றிய தொகுப்பாகவும் இருந்த வரலாற்று நூல்கள் இன்று புனைகதைகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. அதன் காரணமாகவே அத்தகைய வரலாற்று நூல்களை வாசிப்பவர்களும் குறைந்து விட்டனர். புனைகதை வாசிப்பின் விதிகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் நின்று போன வரலாற்றை உயிர்ப்புடன் வளர்த்தெடுக்கும் முயற்சிகளும் இல்லாமல் இல்லை.அந்த முயற்சியின் ஒரு பகுதியாக வரலாற்றையும் வரலாற்றெழுதியலையும் மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்திய போக்கைச் சொல்ல வேண்டும். விளிம்பு என்ற பதத்திற்குள் இன்று எல்லா வகையான விளிம்புகளும் இடம் பிடிக்க முனைகின்றன என்பது தனியாக விரித்துப் பேச வேண்டிய ஒன்று.

மரத்தில் மறைந்த மாமத யானை மதத்தில் மறையும் மாமத யானை

நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துசெய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர் களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.

உணர்வுகளை எழுதும் தர்க்கம்:சேரனின் கவிதைகள்

மூன்று தெருக்கள்  என்று தலைப்பிட்ட இந்தக் கவிதை சேரனின் சமீபத்திய தொகுப்பில் உள்ள ஒரு கவிதை [பக்.45-46].இதை முதல் தடவையாக வாசித்த உடனேயே ‘ஒரு கவிதை எளிமையானதாக இருக்கிறது’ என்பதற்கு உதாரணமாகச் சொல்லத் தக்க கவிதை இது என எனக்குத் தோன்றியது. தொடர்ந்து கவிதைகளை வாசித்துப் பழக்கப்படுத்தி வரும் கவிதை வாசகன், முதல் வாசிப்பில் ஒரு கவிதையின் நோக்கம் என்ன? கவிதைக்குள் கவிஞன் உண்டாக்கிக் கடத்த விரும்பிய உணர்வின் தளம் எத்தகையது இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் அந்தக் கவிதையை எளிய கவிதை என அடையாளப் படுத்திக் கொள்கிறான். அப்படியான அடையாளத்திற்குள் அடைபடாமல் தப்பிக்கும் கவிதை, திரும்பவும் வாசிக்கும்படி தூண்டும். திரும்பத் திரும்ப வாசிக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தாமல் போய்விடும் நிலையில் வாசகனிடம் தோன்றுவது அலுப்பு. தொடர்ந்த முயற்சிக்குப் பின்னும் வாசகனின் மனப்பரப்புக்குப் பிடிபடாமல் அலுப்பை உண்டாக்கி, ஒதுக்கிய கவிதையை வாசகனும் ஒதுக்கி வைத்து விட்டு ஒதுங்கிப் போய்விடுகிறான். கவிதை வாசிப்பில் நடக்கும் இந்த இயக்கம் பொதுவானது.சேரனின் மூன்று தெருக்கள் என்ற தலைப்பிட்ட அந்தக் கவ