அசோகமித்திரனின் சிறுகதைத் தொனிகள்
.jpg)
சமூக யதார்த்தத்தை எழுதுவதில் இரண்டு போக்குகள் உள்ளன. முதல் போக்கு குறிப்பான இலக்கு எதனையும் வைத்துக் கொள்ளாமல் சமூகத்தின் இருப்பையும் அதன் விசித்திரங்களையும் அதற்கான சமூகக் காரணங்களையும் தனிநபர் செயல்பாடுகளையும் எழுதிக் காட்டும் முறை. இதன் தொடக்கப் புள்ளியாகப் புதுமைப்பித்தன் எழுத்துக்களைச் சொல்லலாம். அவர் தொடங்கிய இந்தப் போக்கின் நீட்சியாகச் சுந்தரராமசாமி, சா.கந்தசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன் போன்றவர்களின் சிறுகதைகளும் நாவல்களும் இருக்கின்றன எனக்கூறலாம்.