மனையுறைச் சேவலும் பேடும்



 













பொழுது புலர்ந்தது.

சொல்லிவிட்டுச்

சேவல்

பேடுடன் தனக்கான

இரையைத் தேடி இறங்கிவிட்டது.

முருங்கை மரத்தின்

இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் காய்களிலிருந்தும்

விழுந்து பரவியிருக்கும்

தேன் துளிகளையொத்த

சிறுதானியங்களைத் தேடி

உண்கின்றன இரண்டும்.

இவ்விரண்டும் மனையுறைவாசிகள்.


தண்கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காதலோரே.
================= கருவூர் நம்மார்பகனார்/ அகநானூறு -277


 நான் மனையில் இருக்கிறேன்.

அவரோ காடுதாண்டிப் பெருமணல் கடந்து போயிருக்கிறார்.

காட்டில் வாழும் வேங்கைகூடத் துணையோடு இருக்கும்.

என்னை இன்பமாக வைத்துக்கொள்ள விரும்பிப் பெருமணல் பாதையைக் கடந்து அவர் எப்போது வருவார்.

இளவேனில் காலமும் வரப்போகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்