காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி

 


காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்துள்ளது குமரகுரு கல்வி நிறுவனங்களில் கலை அறிவியல் கல்லூரி.    

மூன்றாண்டுப் படிப்பு, மூன்று அடுக்குகளைக் கொண்டது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புப் பாடத் திட்டம் இடையடுக்கு.

ஒவ்வொரு பாடத்திலும் அடிப்படைகளைக் கற்றுத்தரும் பாடங்கள் முதல் அடுக்கில் இடம் பெற்றுள்ளன.

பின்னடுக்கில் வேலை வாய்ப்புகளை வழங்கும் படிப்புகளைக் கல்லூரி வளாகத்திலும், வளாகத்திற்கு வெளியே தொழில் நிறுவனங்களோடு செய்துகொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கற்பிக்கும் திட்டங்கள் உள்ளன.

 


இந்த ஆண்டு தொடங்கும் “தமிழ் இலக்கியம்-  படைப்பாக்கம்” என்ற பட்டப்படிப்பு புதியது. தமிழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இல்லாத ஒன்று. 

முன்னடுக்கில் மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் எழுத்தின் ஆழத்திற்குச் செல்லவும் தேவையான விதத்தில் சமூகவியல், மானிடவியல், வரலாறு, உளவியல், மொழியியல் போன்ற பாடங்களில் அறிமுகக்கல்வி (Fundamentals) வழங்கப்படும். இவ்வறிமுகக் கல்வியை மேலும் தொடர்பவர்கள் அரசு நட த்தும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் வாய்ப்புகளில் பயணிக்கலாம். அப்பயணம் இந்திய அரசின் குடிமைப்பணித்தேர்வு வரையிலான அறிமுகத்தையும் வழிகாட்டுதலையும் கொண்டதாக இருக்கும்.

 

இடையடுக்கான பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ் இளங்கலைப் பாடத் திட்டத்தோடு ஒவ்வொரு பருவத்திலும் படைப்பாக்க நோக்கம் கொண்ட தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகப் பாடங்களும் இணைப்புப் பாடங்களும் வரம்புகள் (Edge) அல்லது எல்லைகளாக இருக்கும். இத்தாள்களைக் கல்லூரியின் ஆசிரியர்களோடு கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புனைவுத்தளங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ள எழுத்தாளர்களை அழைத்துத் தொடர் பயிலரங்குகள் வழியாகப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

புனைவிலக்கியம் அல்லாது அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குக் கட்டுரைகள், நிகழ்ச்சிதயாரிப்புகள், வர்ணனைகள், செய்திக்கட்டுரைகள் எழுதும் பயிற்சிகளுக்காகவும் உரிய தொழில் நிறுவனங்களோடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன.

பதிப்புத்துறையிலும் இதழாக்கத்துறையிலும் வலைப் பின்னல் வெளியிலும் செயல்படப் போதிய பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

 


மூன்றாவது , பின்னடுக்கு வரம்புகளைத் தாண்டி (Edge +) என அழைக்கப்படும். இதில் தமிழோடு தொடர்புடைய திறன் வளர்ப்புப் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன    

1.   நடிப்புக்கலையின் அடிப்படைகள் - Basics of Acting 

2.   நடனக்கோர்வைப் பயிற்சிகள் -choreography 

3.   மேடை நடிப்பும் காமிரா நடிப்பும் – Stage Acting and Camera Acting 

4.   மரபுக்கலைப் பயிற்சி - Practices in Traditional theatres 

5.   மேடை நிர்வாகமும் நிகழ்வு மேலாண்மையும் – Stage managements and Event managements 

5.   வண்ணம் தீட்டலும் கலைப்பொருள் உருவாக்கலும் -Colours and Crafts 

7.   அச்சிதழ்களுக்குச் செய்திக்கட்டுரை எழுதுதல் – Writing to Print media 

8.   தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுதுதல் – Writing to Television 

9.   குறும்படங்கள் உருவாக்குதல் பட்டறை – Short film workshop 

10.      விளம்பரப் படங்கள் தயாரிப்பு – Ad film making 

11.       நெடுந்தொடர் எழுத்தாக்கப்பயிற்சி – Serial Writings 

12.      சினிமாவுக்கு வசனம் எழுதுதல் பயிற்சி -dialogue writing 

13.       இதழ் உருவாக்கம், புத்தகமாக்கம் -Journal and Book editing 

14.        இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு – Tamil in web world 

15.         வலைப்பூ உருவாக்கப் பயிற்சி – Blogger making 

16. நிழற்படமெடுத்தலும் காமிரா இயக்கமும் –Experience to Still and movie camera  

17.      பேச்சுக்கலை, விவாதக்கலை (Art of delivery) 

18.      களப்பணிகள் - (Field work methodology)

19.       தொல்லியல் வாசிப்புகள் (Reading Archaeology materials)

20.       ஆளுமைத் திறன் வளர்ச்சி (Personality development) 

    பயிற்சி வகுப்புகள் கல்லூரி வளாகத்தில் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களில் இணைந்தும் அளிக்கப்படும்.   

·    கூட்டுப்பயிற்சிக்காகப் புகழ்பெற்ற நிறுவனங்களோடும் ஆளுமைகளோடும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.   

·          அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களும் அமைப்புகளும் பங்கேற்க உள்ளன  

·   கலை, இலக்கியத்துறை வல்லுநர்கள் ஆலோசனைக்குழுவில் இருக்கிறார்கள் 

 

தமிழ் மொழி, இலக்கியக் கல்வியை நவீனப்படுத்தும் நோக்கில் இறங்கியுள்ளோம்.

வேலை வாய்ப்பு நோக்கிய தமிழ்ப் படிப்பில் உங்கள் பிள்ளைகளைத் திருப்பி விடுங்கள். 


நேரடியாகவே வேலைகளில் இணையலாம். சொந்த முயற்சியாகத் தொழில்கள் தொடங்கலாம்.


கலைத்துறைதான் உங்கள் விருப்பமா? உங்கள் தெரிவு…  

 

குமரகுரு கல்லூரியின் தமிழ் இலக்கியம் படைப்பாக்கப் படிப்பாக இருக்கட்டும் 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்