இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறு கதைகள் ஆறு விதங்கள்

படம்
‘தமிழக சிறப்பிதழ்’ சிறுகதைகள் – நடு இணைய சிற்றிதழ் கடந்த இதழைத் (21- ஆவணி, 2019) ‘தமிழக சிறப்பிதழாக’ வெளியிட்டது. புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து வரும் இணைய சிற்றிதழில் தங்கள் பனுவல்கள் இடம்பெற வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதன்மையான படைப்பாளிகள் விரும்புவார்கள் என்ற நோக்கில் நடுவின் ஆசிரியர் பலருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இயலாதவர்களும் விரும்பாதவர்களும் பங்கேற்கவில்லை. இயன்றவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல், மொழிபெயர்ப்பு என அந்த இதழில் வாசிக்கக் கிடைத்தனவற்றை முழுமையாக இங்கு பேசப்போவதில்லை.

தனித்திருக்க விரும்பும் மனம்: சுஜா செல்லப்பனின் ஒளிவிலகல்

படம்
குடும்ப அமைப்பின் பெருமைகளையும் சிறப்புகளையும் ஆராதிப்பவர்கள், அதற்குள் ஒவ்வொருவரும் இன்னொருவரைச் சார்ந்து வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதாகப் பேசாமல் ஒவ்வொருவருக்கும் அது பாதுகாப்பைத் தருகிறது என்பதாகவே பேசுகின்றனர். அதிலும் பலவீனமானவர்களாக இருக்கும் பெண்களுக்கு ஆண்களின் பாதுகாப்பும் அரவணைப்பும் குடும்பத்திற்குள் தான் கிடைக்கும் என வலியுறுத்துகின்றனர். அதன் காரணமாகப் பெண்கள் தங்களின் தனித்த அடையாளங்களைப் பேணுவதையும் அதற்கான முயற்சிகளையும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.

பூமணியின் வெக்கை: வெற்றி மாறனின் அசுரன்.

படம்
புதுச்சேரி நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்காக நவீனக் கவிதைகள் மற்றும் புனைகதைகளிலிருந்து நாடகப்பிரதிகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். புதுச்சேரிக்குப் போவதற்கு முன்பே எழுதிப்பார்த்தது சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள். போன பின்பு புதுமைப்பித்தன், பிரபஞ்சன், திலீப்குமார், கோணங்கி ஆகியோரின் சிறுகதைகளிலிருந்து ஆக்கிய நாடகப் பிரதிகள் சிலவற்றை மாணவர்கள் மேடையேற்றம்  செய்தார்கள். நானும் செய்தேன்.

தப்பும் குறிகள்

  மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்

எனது கற்பித்தல் முறையை என் மாணவர்கள் அறிவார்கள். எந்தவொரு வகுப்பிலும் நான் தயாரித்துப் போகும் குறிப்புகளை முன்வைப்பதில் தொடங்குவதே இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு, அதை நோக்கி வகுப்பைத் திருப்பும் வகையில் அன்றைய ஒரு நேரடி நிகழ்வை - அல்லது செய்தித்தாள் குறிப்பை முன்வைத்து, ஒரு படத்தை அல்லது பொருளைக் காட்டி -கேள்விகள் கேட்டு, அவர்களைப் பேசவைத்து அந்தப் பேச்சின் வழியாகவே பாடப்பகுதிக்குள் வருவேன். சிவகாசி ஜெயலெட்சுமியின் பரபரப்புச் செய்திகள், நேர்காணல்கள், படங்கள் வழியாக பெண்ணியக் கவிதைகளைப் பாடம் சொன்ன ஞாபகங்கள் - நினைவுகள் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இதில் அவர்களுக்கும் பலன் உண்டு; எனக்கும் பலன் உண்டு.