சல்லிக்கட்டு: சில குறிப்புகள்

ஒழிக ! வாழ்க!! குரல்களின் ஒலியளவு ஒவ்வொருமொழியிலும் சொற்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பெயர்(Noun) வினை(Verb). இவ்விரண்டையும் கூடுதல் அர்த்தப்படுத்தப்படுவனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும். தமிழில் மட்டுமே இடை, உரி என்பன தனிப்பட்ட வகையாக இருக்கின்றன. இவற்றைப் பெரும்பாலான மொழிகள் முன்னொட்டுகளாகவும் சில மொழி மொழிகள் பின்னொட்டுகளாகச் சொல்கின்றன. வாழ்க!, ஒழிக! இவை வினைமுற்றுகள். வேண்டும்! வேண்டாம் ! இவையும் வினைமுற்றுகளே முன்னிரண்டும் வியங்கோள் வினைமுற்றுகள் பின்னிரண்டும் ஏவல் வினைமுற்றுகள்