இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழினியின் கவிதைகள்:பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்த்துதல்

படம்
தமிழினி ஜெயக்குமரனின் போர்க்காலம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் எண்ணிக்கை 14 மட்டுமே. இதற்குமேல் கவிதைகள் எழுத அவள் இல்லை. மொத்தமுள்ள 48 பக்கங்களில் இந்த 14 கவிதைகளும் அச்சாகியுள்ள பக்கங்கள் 26. மீதமுள்ள பக்கங்களில் சில உரைகள் உள்ளன.4 வது கவிதை இது : கைவீசி நடக்கிறது காலம். அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய் மனித வாழ்க்கை- ஒட்டுவதும் உதிர்வதுமாய். காலத்தை முந்திப் பாய்கின்றன கனவுக்குதிரைகள். காலடி பிசகாமல் நீள்கிறது காலப்பயணம். வேறெதையும் கண்ணுற்று நிற்பதுமில்லை கணக்கெடுத்துச் சுமப்பதுமில்லை. காலம் நடக்கிறது.

பிரபஞ்சனின் ஆகாசப்பூ: வடிவம் தொலைத்த கதை

படம்
ஆனந்தவிகடனில் (7/12/2016) அச்சாகியிருக்கும் ஆகாசப்பூ வழக்கமான பிரபஞ்சனின் கதைபோல இல்லை. பிரபஞ்சனின் கதைகளில் வரும் மாந்தர்களின் குணங்களைச் சொல்வதற்கு தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்துவார்; அதிலும் பெண்களின் அறிவு, திறமை போன்றவற்றைச் சொல்லவிரும்பும்போதை வார்த்தைகள் செலவழிவதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை.

எல்லாம் தெரிந்த அம்மா

படம்
இப்போது மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கும் இலக்கியம் மற்றும் இடைநிலை இதழ்களைத் திரும்பவும் எடுத்துப் படிக்கவேண்டுமெனத் தூண்டுவன அந்த இதழ்களில் இடம்பெறும் கதைகள் மட்டுமே . முதல் புரட்டலில் ஈர்த்துவிடும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துவிட்டுத் தான் கதைகளுக்கு வருவேன் . அந்தக் கதைகளின் தொடக்கமோ , நகர்வோ , நிதானமாகப் படிக்கவேண்டியவை என்ற உணர்வைத்தூண்டிவிடும் நிலையில் கட்டாயம் படித்தே விடுவேன் . 

மரபு அரங்கியல்: காலனியத்திலிருந்து உலகமயம் வரை

படம்
முன்மொழிபு: மரபு என்ற கலைச்சொல்லைத் தமிழ் மரபு என்ற எல்லைக்குள் நின்று பேசுதல் இக்கட்டுரையின் சொல்லாடல் எல்லை. தமிழ் மரபு, தமிழினது மரபு, தமிழது மரபு, தமிழினுடைய மரபு என்பதாக விரியும். தமிழ் என்பது மொழி; தமிழ் என்பது நிலம்; தமிழ் என்பது ஆட்களின் கூட்டம். தமிழ்மொழி- அதன் எழுத்து(வரிவடிவ)மரபு, பேச்சுமரபு, இவ்விரண்டையும் கொண்டு உருவாக்கப்பட்ட பனுவல்களின் மரபு; பனுவல்களின் துணையோடும் துணையின்றியும் நிகழ்த்தப்பெற்ற கலைகளின் மரபு. ஒலி அளவிலிருந்து இசை உருவாக்கம்; பேச்சோடும் உடலசைவுகொண்டு நிகழ்த்தும் மொழியை உருவாக்கிய ஆட்ட மரபு. ஆட்டமரபைச் செம்மைப்படுத்தியுருவாக்கிய ஆடல் மரபு. அதன் தொடர்ச்சியான கூத்துமரபு எனவும் விரியும் தன்மையன. தமிழ் என்பது நிலம்; அந்நிலத்தின் வகைப்பாடு; அந்நிலத்தைக் கருவாகக் கொண்டு உருவான மனிதர்கள், தெய்வம், உணவு, விலங்குகள், பறவை, இசைக்கருவிகள், நிலத்தைப் பக்குவப்படுத்தப்பயன்பட்ட கருவிகள், கருத்தாவாக இருந்து நிலத்தைப் பயன்படுத்திச் செய்த தொழில்கள், அவற்றின் காரணமாகக் கிடைத்த பொருட்கள், அவற்றைப் பயன்படுத்தியவிதம் - உணவு, உடை, இருப்பிடம், விலங்குகளைப் பேணிய மரபு, தமிழ் எ...