இடுகைகள்

ஜூன், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

களவு போகும் கொண்டாட்டங்கள்

பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன- இந்த மரபுத்தொடரை கிரிக்கெட் பற்றி இந்தியப் பத்திரிகைகளில் எழுதும் செய்தியாளர்களும், கட்டுரையாளர் களும் தொடர்ந்து பயன் படுத்த முடியாது. அர்த்தமிழந்த வாக்கியங்களை, அபத்த வாக்கியங்கள் என்று தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்துபவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த வாக்கியத்திற்கான அர்த்தத்தை நூறு சதவீதம் காலியாக்கி விட்டன சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல்.இருபதுக்கு/20 போட்டிகள்.

அங்கீகாரத்தின் அளவுகோல்

படம்
கிணற்றிலிருந்து வாளியில் நீரிறைத்து பாத்திரத்தில் ஊற்றும் சலசலப்பு ஓசையுடன் தொடங்கி , அரிதாரத்தெ பூசிக்கொள்ள ஆசை.. நான்.. அடவு கட்டி ஆட்டம் போட ஆசை .. என்ற வரிகளாக விரியும் அந்தத் திரைப்படப் பாடலை நான் திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு. இசையமைப்பாளர் இளையராஜா மன விருப்பத்துடன் இசை அமைத்த படங்களுள் ஒன்றான அவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் செவி நுகர்கனிகளில் ஒன்று. இந்தப் பாடல் என்று இல்லை; அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்கத்தக்க பாடல்கள் என்பது எனது கணிப்பு. இசையின் கோலங்களைப் பல வண்ணங்களில் தீட்டிப் பார்த்த கலைஞனின் வெளிப்பாடு என்று கூடச் சொல்லலாம். ஏதாவது சிக்கலில் மனம் அலையும் போதெல்லாம் அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது எனது வாடிக்கை.

ஒற்றுமையில் வேற்றுமை

கல்வித்துறையில் மாற்றங்கள் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறது. கடந்த ஆட்சி வரை கல்வித்துறை என்பது ஒரே அமைச்சரின் கீழ் இயங்கிய நிலையை மாற்றி, பள்ளிக் கல்விக்கென ஓர் அமைச்சரையும், கல்லூரிக்கல்வி தொடங்கி நடக்கும் உயர்கல்வித் துறைகளுக்கு இன்னொரு அமைச்சரையும் பொறுப்பாக்கியதே கூடக் கல்வித்துறை இந்த ஆட்சியில் கவனிக்கப் படத் தக்க துறையாக ஆகப் போகிறது என்பதன் குறிப்புணர்த்தலாக இருக்கலாம்.

அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்

அமெரிக்கத் தேர்தல் இந்தியத் தேர்தல் போன்றதல்ல என்பது பலருக்கும் தெரியும். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு குடியரசு நாட்டில், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் அடிப்படையான கொள்கைகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி ஜான் மெக்கைன் என்னும் 71 வயது நபரைத் தனது வேட்பாளராக மூன்று மாதத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாது, ஜனநாயகக் கட்சி தான் வெற்றி பெறும் என ஊடகங்களும், கருத்துக் கணிப்புக்களும் சொல்ல , அதன் வேட்பாளராகப் போட்டியிடக் கடுமையான போட்டி நிலவியது. அந்தப் போட்டியும் கடந்த வாரம் முடிவுக்கு வந்து விட்டது.

தமிழ் சினிமாவும் அதன் பார்வையாளா்களும்

படம்
நிகழ்காலத் தமிழா்களின் அன்றாட வாழ்க்கையில் சினிமாவைப் போல் பிரிக்கமுடியாத இன்னொன்றைச் சொல்ல முடியுமெனத் தோன்றவில்லை. புதியனவாகவும் பழையனவாகவும் பகுதிகளாகவும் முழுமையாகவும் தினசரி வாழ்வில் சினிமா பார்க்கப்படுகிறது.

விஜய் டெண்டுல்கர்

படம்
. மராத்தியக் கலை இலக்கியத்தின் நவீன அடையாளமாகவும் முத்திரைப்பெயராகவும் இருந்து வந்த விஜய் டெண்டுல்கர் எண்பதாவது வயதில்(ஜனவரி, 6, 1928 -மே,19, 2008) இறந்து விட்டார் என்ற செய்தி மராத்தி மொழியைப் பேசும் கூட்டத்திற்கு மட்டுமே வருத்தமான செய்தி அல்ல. நவீன இந்திய நாடகத்தின் பரப்பைத் தனது வெளியாகக் கருதிய ஒவ்வொருவருக்கும் வருத்தமான செய்திதான்.

முதலில் இல்லை; முழுமையில் இருக்கிறது

உலக அளவில் அதிகம் பேர் பேசும் மொழி ஆங்கிலம் என்பதை நாம் அறிவோம். அந்த மொழியில் அதிகம் மதிக்கப்படும் இலக்கிய ஆசிரியன் யார் எனக் கேட்டால் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைக் குறிப்பிடுவார்கள்.

புனல் வாதம் அனல் வாதம்

ஆந்திர அரசு பெண்ணையாற்றில் 100 தடுப்பணைகளைக் கட்டும் பணிகளைத் தொடங்கி விட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பலரும் எழுப்பி வருகின்றனர். ஆந்திரத்து ஸ்ரீசைலம் மலையில் உற்பத்தியாகும் பொன்னையாறு வேலூர் மாவட்ட திருவலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. அதிலிருந்து வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்கிறது. எனவே மத்திய அரசில் தனக் கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

தேர்வு முடிவுகள் - சில கேள்விகளும் சில புரிதல்களும்

பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளின் முற்பகல் வேலை. போட்டி போட்டிக் கொண்டு உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொலைபேசியில் தேர்வு முடிவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தன. சந்தோசமான தருணங்களை வெளிப்படுத்தும் குரல்களின் ஊடே குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய வர்களின் குரல் பலமின்றி ஒதுங்கிப் போனதையும் கேட்க முடிந்தது.

மனச்சுவர்கள் உடைய வேண்டும்

தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி அக்டோபர் 21, 2010 தமிழ்ச் சிந்தனைத்தளம் -அரசியல் ,  பொருளாதாரம் ,  கலை இலக்கியம் ,  போராட்டம் - என அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அது வரை பிராமணர்கள்/ பிராமணர் அல்லாதார் எனப்பிளவுபடுத்திப் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் இன்று தலித்/ தலித் அல்லாதார் என எதிர்வு களை நிறுத்தி விவாதிக்கவும் விளக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனக்கோருகிறது இந்த நெருக்கடி. இந்த நெருக்கடியின் விதைகள் தூவப்பட்டு பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டிய தலித் எழுச்சியின் விதைகள் தான் இன்றுள்ள நெருக்கடிக்கான காரணங்கள். பிராமணரல்லாத இடைநிலைச் சாதி உயிரி ஒன்று இந்த நெருக்கடியை எப்படி எதிர் கொள்கிறது என்பதில் தான் அதன் தன்னிலையும் நிலைப்பாடும் அடங்கியிருக்கிறது எனக் கருதிட வேண்டும். ஞாபக அடுக்குகளிலிருந்து இரண்டு செய்திகள்: செய்தி ஒன்று. நான் , 1989- ல் பணி நிமித்தமாகப் புதுவைக்கு வந்து ஓராண்டுக்குப்பின் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக  கூட்ட...