மும்முனைத் தாக்குதல் சச்சின், சந்திரமுகி, மும்பை எக்ஸ்பரஸ்

மொழி, இனம், சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம், பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அதன் நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும் தமிழா்களின் தனி அடையாளங்கள் பற்றிப் பேசுகிறவா்கள் பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் மூன்று படங்கள் வெளிவந்தன. ’சச்சின்’, ’சந்திரமுகி’, ’மும்கை எக்ஸ்பிரஸ்’. இந்த மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.