இடுகைகள்

உலகப்பரப்பில் நுழையும் தமிழ்க்கதை

படம்
ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். தாராளவாத அரசுகளாகக் காட்டிக்கொள்வதற்காகவும், தனிமனித உரிமைகளை வலியுறுத்தும் நாடுகளில் தாங்கள் முன்னோடிகளாக இருக்கிறோம் எனக் காட்டும் நோக்கத்தோடும் தங்கள் நாட்டுச் சட்டங்களையும் நடைமுறைகளையும் அந்நாடுகள் அவ்வப்போது மாற்றுகின்றன. அந்த மாற்றங்கள் பின்னர் பன்னாட்டுச் சட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கும்.

தமிழ்ச் சினிமா : ஓர் இயக்குநர், ஒரு நடிப்பு முறை, ஓர் ஆசிரியரின் இரண்டு நூல்கள்-

படம்
சினிமாவை எப்போதும் பொழுதுபோக்காகவே நாம் நம்புகிறோம்; நினைக்கிறோம். அதனைக் கற்றுக் கொள்ளத் தேவையான அடிப்படை நூல்கள் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்ட நூல்களும் தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லை. ஒரு ஆளுமையின் ஆக்கமுறைமைகளைக் கல்வி அடிப்படையிலான அறியும் நூல்கள் இல்லை. தமிழ்/இந்திய அசைவுகளிலிருந்து நடிப்பு முறைமைகளை - நடிப்புக்கலைக்கூறுகளைக் கற்கும் பயிற்சி நூல்கள் நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகள் அதனை நோக்கிய சில சுட்டிக்காட்டல்கள் மட்டுமே நடப்பியல் சினிமாக்காரர் மகேந்திரன்: தமிழ்ச்சினிமாவின் இயக்குநர்களில் நடப்பியல் சினிமாவுக்கான முன்மாதிரியாகப் பலரும் பீம்சிங்கைச் சொல்வதுண்டு. சிவாஜி கணேசன் நடித்த பா- வரிசைப்படங்கள் நடப்பியல் கூறுகளோடு இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. நான் தொடர்ந்து சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு வந்த இயக்குநர்களில் மகேந்திரனைக் கவனமாக நடப்பியல் சினிமாவைத் தேர்வு செய்து வெளிப்பட்டவர் எனக் கணித்திருந்தேன். ஒருமுறை அவரை அருகிருந்து பார்க்கவும் பேசவும் வாய்ப்புக்கிடைத்தபோது, அந்தக் கணிப்பு உறுதியானது. அவர் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர். நான் அப்போது படித்துக் கொண

நம்பகத்தன்மைகளினூடாக: சாமி – கோவில்பட்டி வீரலெட்சுமி பற்றிய உரையாடல்

படம்
திருநெல்வேலி என்றால் “அல்வா” என்பது நீண்டகால அடையாளம். ஆனால் “சாமி” திரைப்படம் அந்த அடையாளத்தைக் “கலவரம்” என்பதாக மாற்றிவிடத் தீா்மானித்து நிகழ்வுகளை முன்மொழிந்தது. இதனைத் திருநெல்வேலியின் மனிதா்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

ஒரு கதையும் ஒரு கவிதைத் தொகுப்பும்

படம்
உலகத்துச் சிறுகதை கதைக்குள் நிகழும் உரையாடல்கள் அந்தக்கதையைக் கொங்குவட்டாரக்கதையாக முன்வைக்கிறது. ஆனால் அதன் உரிப்பொருள் - முதுமையில் தனித்திருக்க நேர்வது- என்ற உரிப்பொருள் சார்ந்து நில எல்லைகளைத் தாண்டி உலகக் கதையாக நகர்த்தப்பட்டுள்ளது. அப்படி நகர்த்துவதற்குத் தனது சொல்முறையைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார் ஷான் கருப்பசாமி.

நாயக்கர் காலம் .இயல். 7 மகளிர் நிலை -சமூக மதிப்புகள்- பண்பாட்டுக்கூறுகள்

படம்
நாயக்கர் கால இலக்கியங்களில் மகளிர் பற்றிய குறிப்புக்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. குறிப்பாக அரசியல் போன்ற அமைப்புக்களில் ஆடவர் சார்ந்த கூற்றுக்களே அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கான கடமைகள், கட்டுப்பாடுகள், பெண்கள் பற்றிய மதிப்புக்கள் முதலியவைகளே பெரிதும் கிடைக்கின்றன. பெண்கள் பற்றிக் கிடைக்கும் குறிப்புக்களும் பெண்களுக்குச் சமுதாயத்திலுள்ள பங்குகள் பற்றியோ, குடும்ப அமைப்பில் பெண்களுக்கு உரிய இடம் பற்றியோ அதிகம் பேசவில்லை. மாறாகப் பரத்தையர் பற்றி அதிகம் பேசுகின்றன. அடுத்து வயலில் உழைக்கும் பள்ளர் குலத்தைப் பெண்கள் பற்றிய - உழைப்புத் தொடர்பான - செய்திகளைத் தருகின்றன. செல்வக்குடிப் பெண்களைப் பற்றியோ, நடுத்தர நிலை யிலிருந்த குடும்பங்களின் பெண்களைப் பற்றியோ மிக குறைவாகவே பேசுகின்றன. அக்காலத்தில் இலக்கியங்களை முதன்மையாகவும், பிற சான்றுகளை அவற்றிற்குத் துணைமையாகவும் கொண்டு, அக்காலத்திய மகளிர் நிலை பற்றி இங்குக் காணலாம்.

பிறந்த நாள் கொண்டாட்டம்.

படம்
பிப்ரவரி, 17 -இந்தத் தேதியை எனது பிறந்தநாளாக அரசாங்கப்பதிவேடு ஒன்றில் எழுதியவர் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டு எழுதிய உத்தரப்புரம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியர். வலதுகை தலையைத் தாண்டி இடதுகாதைத் தொடவேண்டும் என்ற வழக்கம்போல் சொன்னார் அவர். எளிதாகத் தொட்டது எனது வலதுகரம். ஏனென்றால் அப்போது ஐந்து வயதைத் தாண்டிப் பல மாதங்கள் ஓடியிருந்தன. ஐந்து வயது முடிந்தபோது தொடங்கிப் பள்ளிக்கூடம் போகச்சொல்லிக் கையில் கம்போடு விரட்டினார் எனது மூத்த அண்ணன். பல நாட்கள் கம்பும் கையுமாகப் பள்ளிக்கூடம் வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார். அவர் போன பின்பு நான் வெளியே வந்து பள்ளிக்குப் பின்னால் இருந்த தாழங்குளத்தில் நீச்சல் அடித்துவிட்டு ஆலமரத்தின் கிளைகளிலிருந்து தொங்கும் விழுதுகளில் உட்கார்ந்து ஆடியும் நேரம் கழித்துத் திரிந்தேன்.

நாயக்கர் காலம். இயல் . 5 தமிழுணர்வு

படம்
தமிழக வரலாற்றைக் கவனித்தால் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று என்ற வடிவங்களில் தமிழ்மொழி சமூகத்தன்மை பெற்று, சில காலங்களில் உயர்ந்த குரலிலும், சிலபோது தாழ்ந்த குரலிலும் ஒலித்து வந்துள்ளது என்பதை உணர முடிகின்றது. தமிழகத்தில் கி.பி. 1529 இல் தொடங்கி 1732இல் முடிவுற்ற காலப்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த நாயக்கர்களின் காலத்தில் எழுதப்பட்ட தமிழுணர்வின் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்வதன் மூலம், இத்தகைய குரல்களின் நோக்கத்தினையும் விளைவுகளையும் கண்டறிய முடியும். இந்நோக்கத்திற்கு அக்கால இலக்கியங்கள் தவிர்ந்த பிறவரலாற்று மூலங்களும் உதவக் கூடும் என்றாலும் பண்பாட்டுத்துறைகளில் ஏற்படும் நிகழ்வுகளை இலக்கியம் தற்போக்கில் படம் பிடிக்கக் கூடிய கருவியாக இருந்து வந்துள்ளது என்பது உண்மை. கி.பி. 1529 முதல் கி.பி. 1732 வரையிலான காலப் பகுதியே ஆய்வுக்குரியது என்றாலும், மொழியுணர்வு போன்ற பண்பாட்டு அசைவுகள் - ஒரு காலக்கட்டத்து நிகழ்வுகளாக மட்டும் இருந்து விடாமல், அதற்குப் பிந்திய காலத்து இலக்கியங்களிலும் வெளிப்படக்கூடும் என்பதால் அதற்குச் சற்றுப்பிந்திய காலப் பகுதியைச் சேர்ந்