இடுகைகள்

உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம்

படம்
பத்திரிகைகளின் தேவைக்கு எழுத மறுக்கும் மனநிலை கொண்ட எழுத்துக்காரர்கள் தங்கள் எழுத்தையே தொடர்ந்து தாண்ட நினைக்கும் விருப்பம் கொண்டவர்கள். தொடர்ச்சியாக ஒரு தீவிர எழுத்தாளரின் பனுவல்களை – கவிதை, புனைகதை, நாடகம் என எதுவாயினும் - வாசிக்கும்போது, ஒன்றுக்கொன்று பொதுத்தன்மைகள் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் குறிப்பான வேறுபாடொன்றை வாசகர்களுக்குத் தராமல் போகாது. அப்படித்தருவதில் தான் தீவிர இலக்கியம் தன்னைப் பொதுவாசிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.  

ஆய்வுகள்:செய்ய வேண்டியனவும் வேண்டாதனவும்

படம்
இது ஒருவிதத்தில் கடலில் மூழ்கி முத்துக்களைத் தேடி எடுத்து மாலையாகத் தொடுப்பது போன்ற ஒன்று. ஆனால் இங்கே தேடப்படுவதும் திரட்டப்படுவதும் அறிவு என்னும் முத்துக்களும் மணிகளும் என்பதுதான் வித்தியாசம்.

பயணங்களும் பயணிகளும்

படம்
இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர் கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

ஊர் சுற்ற ஒரு பதவி: நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்

படம்
நமது கல்விமுறையில் வகுப்பறைக்கல்விக்கு வெளியே மாணாக்கர்கள் கூடுதலாகச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம். அதற்காகச் சிலவற்றை விருப்பநிலைகளாகப் பரிந்துரை செய்துள்ளனர். சமூகப்பொறுப்பு, நாட்டுப்பற்று, கிராமியநலன், பெண்கள் நலன், பொதுச் சேவையில் நாட்டம், உடல் நலம் பேணுதல், தனித்திறன்களை உருவாக்குதல் போன்றன இவ்விருப்பநிலைக் கல்வித் திட்டங்களில் கவனப்படுத்தப்படுகின்றன.

புத்தகக் கண்காட்சி என்னும் பெருநிகழ்வு

படம்
சென்னை போன்ற பெருநகரத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியைப் பண்பாட்டு நடவடிக்கையின் பகுதி என வரையறை செய்வதை விட சுற்றுலாப் பொருளியலோடு தொடர்புடைய பெரு நிகழ்வு என வரையறை செய்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

நல்லனவும் அல்லனவும் ஓரிடத்தென்பதிவ் வுலகு

படம்
அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இந்து தமிழ் திசையில் தான் எழுதிய அஞ்சலிக்கட்டுரையின் நகலைக் கவி. சுகுமாரன் இணைத்திருந்தார். வாழ்ந்த வாழ்க்கையையும் வாழ்க்கைக்கான நிலவெளியில் சந்தித்த மனிதர்களையும் அவரவர் இருப்பின் வழியாகவே கவனித்து இலக்கியப்பனுவல்களாக மாற்றிய ஆ.மாதவன், புனைகதைப்பரப்பில் குறிப்பிட த்தக்க ஆளுமையாக உருவான பின்னணியையும் அவரது மன அமைப்பை மாற்றிய சமூக, அரசியல் இயக்கங்களின் தாக்கங்களையும் குறிப்பிட்டுக் கவனப்படுத்திய அக்கட்டுரையின் பயணம் நேர்கோடாக இல்லாமல் புனைவின் பயணம்போல முன்னும் பின்னுமாகவும், அங்குமிங்குமாகவும் நகர்ந்து வாசிப்புக் கவனத்தை ஈர்க்கவல்லதாக இருந்தது.