கல்விப்புலப்பார்வைகொண்ட க்ரியா ராமகிருஷ்ணன்
ஒரு மொழியாசிரியனுக்கு தாய்மொழியாக இருப்பவர்களுக்கு மொழியைக் கற்பிக்கும்போது அதிகம் தேவைப்படாத அகராதிகள், இரண்டாம், மூன்றாம் மொழியாக ஒரு மொழியைக் கற்பிக்கும்போது தேவைப்படுகிறது என்பது அனுபவம் சார்ந்த உண்மை. தமிழ்மொழி சார்ந்த அந்த அனுபவத்திற்குப் பெருந்துணையாக இப்போதும் இருப்பது க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள தற்காலத்தமிழ் அகராதியும் மரபுத்தொடர் அகராதியும் என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதனைச் சாத்தியமாக்கியவர் ராமகிருஷ்ணன்.