இடுகைகள்

பார்வையாளர்களாகிய நாமும் நமது பாவனை எதிர்ப்புகளும்

படம்
தகவல்கள்……. மேலும் மேலும் தகவல்கள்….. அா்த்தங்கள் ……. காணாமல் போகும் அா்த்தங்கள்……. நமது காலம் ஊடகங்களின் காலம்; நிலமானிய சமூகம், முதலாளிய சமூகம் எனப் பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக் கட்டமைப்பை வரையறை செய்பவா்கள் கூட இன்றைய சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information Society) என்றே வரையறை செய்கின்றனா். நகரம் மற்றும் பெருநகரவாசிகள் ஊடக வலைப்பின்னலுக்குள் வந்து சோ்ந்தாகிவிட்டனா். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்பட்டு வருகின்றனா். ஊடகங்கள் தரும் அனுகூலங்கள் அனைத்தையும் மனித உயிர்கள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த வலைப்பின்னல் விரிக்கப்பட்டுள்ளதா….? ஆட்சியதிகார நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்காக நடந்ததா…..? மனிதச் செயல்பாடுகள் அனைத்தையும் நுகா்வியச் செயல்பாட்டின் பகுதிகளாக மாற்றிவிடத் தயாராகி விட்ட உலக ஓழுங்கின் இலக்குகள் ஈடேற வசதி செய்யப்படுகிறதா….? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் ஒற்றைப் பதில் கிடைப்பதற்கு மாறாகப் பலவிதப் பதில்களே கிடைக்கும்.

தமிழியல் ஆய்வு:தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள ஆய்வுகளில் - குறிப்பாகச் சமூக அறிவியல் மற்றும் மொழிப்புல ஆய்வுகளின் வளர்ச்சியில் தமிழ்த் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி, சமூகவியல் துறைகள் சாதிக்காத சாதனைகள் கொண்ட வளர்ச்சி. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகள், காலனிய காலத்துச் சட்டகங்களை விட்டு விலகாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழியல் துறைகள் அவற்றிற்கு மாறாகப் பலதளங்களில் விரிவடைந்திருக்கின்றன.

குற்றமே தண்டனை : நம்பிக்கை தரும் சினிமா

படம்
  வெகுமக்கள் ரசனைக்கான ஒரு சினிமாவில் இருக்கவேண்டியன · பலவிதத்தொனியில் பேச வாய்ப்பளிக்கும் உச்சநிலை (Climax) · பாடல்களும் ஆட்டங்களும் (Songs and dances) · சண்டைக்காட்சிகள் (Fights) · நகைச்சுவைக் கோர்வைகள் (Comedy Sequences) · அறிமுகமான நடிக முகங்கள் (Popular Artists)

சமயங்கள் -நிகழ்வுகள் -பின்னணிகள்

படம்
உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன. பொதுப்புத்தி உருவாக்கத்தில் சமய நம்பிக்கைகள் செயல்படும் அடிப்படைகளை வைத்து எழுதப்பெற்ற இச்சிறுகட்டுரைகளை வாசித்துப்பாருங்கள்

இரங்கல் பாக்களில் ஒரு மாயநடப்பியல் கதை-வெய்யிலின் அக்காளின் எலும்புகள் தொகுப்பை முன்வைத்து

படம்
அக்காவைக்  காக்கா தூக்கிச் சென்றுவிட்டது அவ்வளவுதான் *****  கையிலிருக்கும் மண்ணாலான செப்பு கண்ணாடிக்குடுவை பீங்கான் பொம்மை எலக்ட்ரானிக் சாதனம் எனக் கையாள்வதில் கவனமாக இருக்கும் பொருளைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது. போனால் போகட்டும் என்று நினைத்தால் குழந்தையின் கையில் கொடுக்கலாம். கொடுத்த அடுத்த கணம் அந்தப் பொருளைப் போட்டு உடைத்துவிடக்கூடும். அதனால் கொடுக்கக் கூடாது.

பண்டிகைகள் - விளையாட்டுகள் - பொழுதுபோக்குகள்

ஐபிஎல் என்னும் மெலோ-டிராமா காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால் தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும் என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு நகர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்களில் கணித்துச் சொன்