இடுகைகள்

அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு

படம்
ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம். செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி ஔவை.

கமலென்னும் கட்டியங்காரன்

படம்
  முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துந ிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.

உதைவாங்கிக் கிளம்பிய வண்டி:

படம்
தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்குத் தரப்பட வேண்டிய கல்வி குறித்த பெருநிகழ்வு (ஜூலை 20-22) நடந்து முடிந்திருக்கிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற கல்வியாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்பாளர்களும் பலவிதமாக இருந்தார்கள். பலவிதமாகப் பேசினார்கள். பலவிதமான முன்மொழிவுகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் தமிழ்ப் பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட அமர்வுகளில் இரண்டு நாட்களிலும் அமர்ந்திருந்தேன்; கேட்டுக்கொண்டிருந்தேன்; பலருடன் உரையாடினேன். அந்த அமர்வுகள் அண்ணா நினைவுநூற்றாண்டு நூலக அரங்குகளில் நடந்தன.

என்னவாக ஆகப்போகிறாய் பெண்ணே

‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’  இந்தக் கேள்வி மனிதர்கள் ஒவ்வொருவரும் சந்திக்க நேர்ந்த கேள்விதான். பள்ளிப் பருவம் தொடங்கி, பல தடவை இந்தக் கேள்வியைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் மாணாக்கர்களுக்குக் கிடைக்கின்றன. வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் மட்டும் அல்லாது, அவர்களது பள்ளிக்கும், கல்லூரிக்கும் வரும் விருந்தினர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரும் இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு மாணாக்க ரிடத்திலும் எழுப்பத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருகையும் பேச்சும் நேரடியாக இந்த வினாவை எழுப்பாமல் போயிருக்கலாம். அவர்களின் வருகையின் சாரம் உணர்த்தும் உண்மை அது தான்.

மயிலாடிய கானகங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இப்படி வெயில் அடிக்கவில்லை. ஆகஸ்டு கடைசி வாரத்திலேயே வெயில் குறைந்து ஆடிக் காற்று பரபரவென வீசியது. இந்த ஆண்டு ஆடிக் காற்றின் வேகம் ஒரு சில நாட்கள் தான் இருந்தது. திரும்பவும் வெயில் பங்குனி உத்திரத்தின் போது அடிப்பது போல அடித்தது.

கி.ரா.வின் புதிய வரவு: பெருங்கதை

படம்
முன்பெல்லாம் நண்பர்களின் எழுத்துகள் கையெழுத்தில் வாசிக்கக்கிடைக்கும் . நீலவண்ண எழுத்துகள் , கறுப்பு வண்ண எழுத்துகள் அதிகம் என்றாலும் பச்சை , சிவப்பு , ஊதா வண்ணங்களிலெல்லாம் எழுதும் பேனாக்கள் வந்தபோது அவற்றில் எழுதிப் பார்க்கும் எழுத்தாளர்கள் உண்டு . எழுத்தாளர்களின் கையெழுத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் பிரதிகள் இப்போது குறைந்துவிட்டன . அப்படிக்கிடைத்தாலும் டைப் செய்யப்பட்டு கணினி வழியாகவே வந்துசேர்கின்றன . அப்படிப் படித்த எழுத்துகளையும் பிறகு அச்சில் வாசிக்கும் ஆசை விலகுவதில்லை .

இலக்கிய ஆய்வுகளும் பிறதுறை அறிவும்: சில குறிப்புகள்

தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன. புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர்குழுக்கள்பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. கல்வித்துறை சாராத விமரிசனங்களும் ‘ரசனை அனுபவத்திலிருந்து நுகர்வு திணிப்பு’பற்றிப் பேசுவனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கல்விப்புல ஆய்வுகளும், சாராத ஆய்வுகளும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இம்மாற்றங்கள் வெறும் எண்ணளவு மாற்றங்கள் (Quantitative changes) மட்டும் அல்ல; பண்பு மாற்றங்களும் (Qualitative changes) கூட. தமிழில் நடந்துள்ள இந்த மாற்றம் இந்திய மொழிகள் பலவற்றிற்கும் பொருந்தக்கூடியது.