தொடரும் பாவனைப் போர்கள்
தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுவிழாவை முன்வைத்து ------------------------------------------------------------------------------------------------------- தனித்தமிழ் இயக்கத்திற்கு வயது 100 ஆகிறது. 1916 இல் தோற்றம்கண்ட அவ்வியக்கத்திற்கு அந்த நேரத்தில் ஒரு தேவை இருந்தது. ஒருவிதத்தில் தமிழ்மொழி சந்தித்த நெருக்கடியினால் உருவான பெருநிகழ்வு. செய்யுள் வடிவில் இருந்த தமிழ்க்கல்வி மற்றும் வெளிப்பாட்டு நிலைகள் உரைநடைக்கு மாறியபோது உருவான நெருக்கடிகளின் விளைவாக உருவானது தனித்தமிழ் இயக்கம். மணிப்ரவாளத்தின் ஆதிக்கம் தமிழ்நடையைச் சீர்குலைக்கிறது எனக் கருதிய தமிழ்ப் புலவர்களும் தமிழர்களும் இணைந்து உருவாக்கிய தனித்தமிழ் இயக்கம் வரலாற்றின் தேவை. தமிழ் மொழியில் சொல்லுருவாக்கத்தின் அடிப்படைகளைச் சொன்ன முதன்மைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் மொழிமுதல் எழுத்துகள், மொழியிறுதி எழுத்துகள், மெய்மயக்கம் போன்றவற்றைச் சொல்லியிருக்கிறது. அதாவது ஒருசொல்லின் முதலில் நிற்கக்கூடிய தமிழ் எழுத்துகள் எவை; சொல்லின் இறுதியில் நிற்கக்கூடிய எழுத்துகள் எவை; இடையில் நிற்கும்போது உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் எவ்வாறு அடுத்தட