சில தோல்விகள்;சில வருத்தங்கள்
சட்டசபைத் தேர்தல் 2016 -ன் முடிவுக்குப்பின் சிலரது தோல்விக்காகப் பலரது வருத்தங்களை முகநூலெங்கும் வாசிக்கமுடிகிறது. அதிகமானவர்களின் வருத்தம் வி.சி.க.வின் தலைவர் தொல். திருமாவளவனின் தோல்வி பற்றியதாக இருக்கிறது. அடுத்தது சுப. உதயகுமார். மூன்றாவதாக முனைவர் வே.வசந்திதேவி.இதில் முனைவர் வசந்திதேவியின் தோல்வியும் சுப.உதயகுமாரின் தோல்வியும் எதிர்பார்த்த தோல்விதான். ஆனால் தொல். திருமாவளவனின் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை.