இடுகைகள்

வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை

படம்
புகுமுக வகுப்பு வரை கணித மாணவனாக நினைத்துக் கொண்டிருந்த என்னை இலக்கியம் பக்கம் திருப்பியது மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம்தான். டேனியல்போர் என்னும் ஆங்கிலேயரின் பெயரில் அமைந்த நூலகத்தின் மாடிப்பகுதியில் தான் செய்தித் தாள்களும் இதழ்களும் அடுக்கப்பட்டிருக்கும். நாள் தவறாமல் தினசரிகளை படிக்கும் அரசியல் உயிரியாக இருந்த என்னைக் கதைகள் படிக்கும் மாணவனாக மாற்றியது   அவற்றின் அருகில் அடுக்கப்பட்டிருக்கும் வாராந்திரிகளும் மாதாந்திரிகளும்.

வரலாற்றைக் கவிதையாக்கி வாசித்தல்

பசித்த பூனைகளின் மென்மையையும், வன்மத்தின் பசித்த ஓநாய்களையும் பற்றிப் பேச நினைத்த அந்தக் கவிதை ஓரிடத்தில், வரலாறு எப்போதும் மாமிசங்களால் மட்டுமே எழுதப்படுகிறது என்ற வரிகளை எழுதிவைத்திருக்கிறது.

தமிழினி: போராட்டக்களத்திலிருந்து எழுத்துக்களத்திற்கு நகர்ந்த பயணம்.

படம்
ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக் கேட்டதுண்டு. அவரது முகம் நிழற் படங்களாகப் பார்க்கக் கிடைத்தது இந்த ஜனவரி முதல் தான். முகத்தைக் காட்டியபோதுதான் தனது பெயர் தமிழினி ஜெயக்குமரன் என்றும் தானொரு ஈழப் போராளி என்றும் சொன்னார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகநூல்-வழியாகப் பல தடவை உரையாடியிருக்கிறோம். உரையாடல் ஆரம்பித்தால் ஒருமணிநேரத்துக்குமேல் போகாது.  

சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.

வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப் படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்து விட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான். அப்படி வராவிட்டால் தேடியவருக்குத் தோல்வி. வைத்தவருக்கு வெற்றி. அப்படி விளையாடும்போது எங்கள் ஊரில் “தில்லி தில்லி பொம்மக்கா” சொல்லிக்கொண்டே வைப்பார்கள்; எடுப்பார்கள். பெண்கள் இருவர் விளையாடும் இந்த விளையாட்டைச் சில நேரங்களில் பெண்களும் ஆண்களும் சேர்ந்தே விளையாடுவார்கள். மூடியிருக்கும் எதிர்பாலினரின் கையை நோண்டிவதற்கான வாய்ப்பாகப் பயன்படும் விளையாட்டு அது. திரியைக் கண்டுபிடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியோடு

ஊடக யுத்தம்: வென்றிலென் என்றபோதும் ?

வென்றி என்பது வெற்றி என்னும் சொல்லின் பழைய வடிவம் என்பதை ஊகிக்கமுடிகிறது. வென்றி என்பது பழைய சொல்லா? வெற்றி என்பது பழைய சொல்லா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இன்று வெற்றியையெடுக்க அல்லது வெற்றியைக் கைப்பற்றக் களமாட வேண்டும். தனிமனிதர்களும் கூட்டமும் போராட வேண்டும். களம் நிகழ்காலத்தில் போராட்டக் களம். போராட்டங்களில் மௌனமாக இருத்தல் தொடங்கி, ஒத்துழையாமை, உண்ணாநிலை குரல் எழுப்புதல், மறியல், சட்டம் ஒழுங்கைக் குலைத்தல் எனப் பலவடிவங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த வடிவம் போர்க்களம்.ரதகஜதுரகபதாதிகளோடு மோதிவீழ்ந்த போர்க்களம்.

கமல்ஹாசன்: இரண்டும் கலந்த கலவை

படம்
துன்ப உணர்வுகளும் இன்ப உணர்வுகளும் கலவையாக வெளிப்படும் நாடகத்தையோ அல்லது வேறுவகைப்பட்ட இலக்கிய வகையையோ அல்லது இன்ப துன்பங்களை ஒருசேரத் தரும் நிகழ்வையோ குறிக்கும் சொல்லாக துன்ப இன்ப நாடகம் என்றை சொல்லைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் டிராஜிக் காமெடி ( Tragic Comedy) என்று வழங்கும் இச்சொல் பிரெஞ்சு மொழியில் tragicomedie எனவும் இத்தாலிய மொழியில் tragicommedia என்றும் சொல்லப் படுகிறது. இவை அனைத்தும் லத்தீன் மொழிச் சொல்லான Tragicomoedia என்பதிலிருந்து வந்தவைதான். -  American Heritage Talking Dictionary.

நிரல் நிரைப்படுத்தலின் அழகு : க.சீ.சிவக்குமாரின் ரசாயனக் கலப்பை

வார இதழொன்றில் இடம்பெறும் சிறுகதையை வாசிக்கத் தூண்டுவதற்கு உடனடிக் காரணங்கள் சில உண்டு. தொடர்ச்சியான வாசகராக இருந்தால் எழுதியவரின் பெயரே வாசிக்கத் தூண்டிவிடும். சிலநேரங்களில் எழுதியவர் கதைக்குத் தரும் தலைப்பு வாசிக்கத் தூண்டும். கதைகளுக்கு ஓவியங்கள் அச்சிடும் இதழாக இருந்தால் அவையும் கதைகளை வாசிக்கத்தூண்டவே செய்யும். நான் மாணவனாக இருந்த காலத்தில் (1970-80கள்) ஓவியர் ஜெ...(யராஜ்) வரையும் தொப்புள் தெரியும் பெண்களின் ஓவியங்களுக்காகவே நானும் என் வயதொத்த இளைஞர்களும் கதைகள் வாசிப்போம்; பேசுவோம்.