இடுகைகள்

காமம் : உடைமையாக்குதலின் அலைக்கழிப்பு

படம்
குடும்பம், சமூக அமைப்பின் மிகச்சிறிய நுண் அலகு. எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் விரும்புகின்றன. மதம், இனம், மொழி, பண்பாடு என்பதான காரணிகளால் வேறுபாடுகள் கொண்ட எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையைத் தொலைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் அவை ஏற்படுத்திக் கொண்ட நடைமுறையின் பெயர் திருமணம். திருமணத்தின் வழியாக நிகழும் ஆண் பெண் உறவின் முதன்மை நோக்கம் மனித உற்பத்தி ; வாரிசுகளை உருவாக்குதல். வாரிசுகளின் செயல்பாடுகள் பண்பாட்டின் அடையாளங்கள்.

காட்சி இன்பத்தின் பொருளாதாரம் : ராஜமௌலியின் பாகுபலி

படம்
முதலில் அதற்குப் பெயர் டாக்கி (Talkie) ; மாறிய பெயர் சினிமா (Cinema). பேச்சை முதன்மையாகக் கொண்ட கலை, காட்சியை முதன்மையாகக் கொண்ட கலைவடிவமாக மாறியதன் விளைவு இந்தப் பெயர் மாற்றம்.   காட்சிக்கலையாகச் சினிமா மாறிவிட்டதாக நம்பினாலும் பேச்சை அது கைவிட்டுவிடவில்லை. இன்றளவும் பேச்சின்வழியாகவே சினிமா தனது காட்சியடுக்குகளைப் பெருந்திரளுக்குப் புரியவைக்கிறது; நம்பவைக்கிறது. அதிலும் இந்திய சினிமா பேச்சின் இன்னொரு வடிவமான பாடலையும் விட்டுவிடாமல் தக்கவைத்துக்கொண்டே மாறிக்கொண்டிருக்கிறது.

ஆக்கம் - தழுவலாக்கம்

·          ஆக்கம் - தழுவலாக்கம் என்றால் என்ன சார். ·          நாடகத்தில் தழுவலாக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயம் என்னென்ன? ஆக்கம் என்பது புதிதாக உருவாக்குவது. புதிதாக உருவாக்குவதற்கு அதன் உட்கிடைப்பொருட்கள் தேவை.   அதைக் கண்டுபிடித்து இணைத்து உருவாக்க வேண்டும். உருவாக்கிய ஆக்கம் பயன்பட வேண்டும்.

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்

படம்
எதுவரை இணைய இதழில் (http://eathuvarai.net/?p=4796) வந்துள்ள வைகறைக் கனவு கதையை எழுதிய தமிழினி ஜெயக்குமாரன் என்ற பெயரை இணையத்தில் தான் பார்த்திருக்கிறேன். தமிழின் அச்சிதழ்களிலோ, தொகுப்புகளிலோ அவர் எழுதிய கதைகள் எதையும் வாசித்ததில்லை. கதையை வாசித்து முடித்தபின் கதை எனக்குள் எழுப்பிய வினாக்கள் பலவிதமானவை.

நம்பிக்கைகள் சிதையத் தொடங்கும் கணங்கள்

படம்

வாழ்தலின்விருப்பந்தேங்கிய சாவின் நெருக்கம்: ராகவனின் இரண்டு கதைகள்

படம்
நடந்ததை எழுதுவது நடப்பியல் வாதமா? இயற்பண்பியல்வாதமா? என்ற விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. தமிழில் நடப்பியல்வாதத்திற்குப் பலரை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இயற்பண்பியல்வாதத்திற்கு ஒன்றிரண்டு பேரைத் தான் சொல்லமுடியும். நகரம் சார்ந்த எழுத்தில் அசோகமித்திரனின் கதைகளைச் சொல்லலாமென்றால், கிராமம்சார்ந்து பூமணியின் தொடக்ககாலச் சிறுகதைகளை எடுத்துக்காட்டலாம். அவர்களிருவரும் விவரிக்கும் விவரிப்புமுறையில் பிசகின்றி ஒவ்வொன்றையும் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

ஏற்கத்தக்க தொனியல்ல

படம்
இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் உணரும் கருத்தாகவும் நிகழ்வாகவும் இருக்கும் சொல் சாதி. பேசத்தக்க பொருளாக இருக்கும் சாதியின் குரூரவடிவமான ’தீண்டாமை’ பேச வேண்டிய பொருள் மட்டுமல்ல; பேசித் தீர்க்கவேண்டிய ஒன்றும்கூட. அனைத்துத் தளத்திலும் விசாரணைகளையும் விவாதங்களையும் கோரும் இச்சொற்களைப் பேசாமல் அறிவுத் துறையினர் தப்பித்துவிட முடியாது. தீர்த்துக் கட்டுவதற்காகப் பேசப்படவேண்டிய தீண்டாமையையும் சாதியையும் பற்றிப்பேசும் சிறுநூலொன்றை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.