இடுகைகள்

நம்பிக்கையிழப்பின் வெளிப்பாடு; அழகிய பெரியவனின் மிஞ்சின கதை

படம்
நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்; நமது சூழல் மாறிக்கொண்டிருக்கிறது; நம்மை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது எனத் தனிமனிதன் நினைக்கும்போது பிறப்பது நம்பிக்கை. இதற்கு நேரெதிராகத் தோன்றுவது நம்பிக்கையின்மை அல்லது அவநம்பிக்கை. அதன் காரணிகளாக இருப்பவை நிராகரிப்புகள்; ஒதுக்கிவைத்தல். நீண்ட நெடுங்காலமாக விலக்குவதையும் விலகுவதையும் கருத்தியலாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து வந்துள்ள கெட்டிதட்டிய இறுக்கமான சமூக அமைப்பு இந்திய சமூக அமைப்பு. அதற்கு இன்னொரு பெயர் சாதியம். பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வகைமைகளை உருவாக்கி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் சாதியத்தின் மீது கடும் நெருக்கடியை உருவாக்கியது இந்திய அரசியல் சட்டம். வெளித்தள்ளும் (Exclusive) சமூகக் கோட்பாட்டிற்கு மாறாக உள்வாங்கும் (Inclusive) சமூகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தளங்களிலும் இந்த நாட்டின் அனைத்துப்பிரிவினரும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நினைப்பின் வெளிப்பாடே இட ஒதுக்கீடு. அதன் தொடர்ச்சியான தீண்டாமை ஒழிப்பு; அடிமை வேலை அழிப்பு என்பனவெல்லாம். ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு உதவுவதற்கான பணியாளர்களை உருவாக்கும்பொருட்டு இங

பாரதீய ஜனதாவின் நமதே நமது :பின் காலனியத்தின் நான்காவது இயல்

படம்
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும். வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத்தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

தினங்களைக் கொண்டாடுதல்

படம்
எல்லா தினங்களையும் கொண்டாடித் தீர்ப்பதென்று முடிவெடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஜூலை 6, உலக முத்த தினம். முகநூலில்  வாசித்த முத்தக்கவிதைகளைத் தொகுத்தால் சத்தமிடும் முத்தம் என்றொரு தொகுதி நிச்சயம் கிடைக்கும். முத்தமிட்டுக்கொள்ள வாய்ப்பற்றவர்கள் சத்தமாய்ச் சொல்லிக் கவிதையெழுதி யிருக்கிறார்கள். சொல்லாமல் முத்தமிட்ட ஜோடிகள் சில கோடிகள் இருக்கலாம்.

காக்கா முட்டையும் தமிழ்த்திரளும்.

படம்
வெகுஜன சினிமா விரும்பிகளைத் தன்னிலை மறக்கச் செய்து,  தரமான சினிமாவின் பக்கம் நெருங்கிவரச் செய்துள்ளது காக்கா முட்டை. கலை, வணிகம், விருதுகள். விமரிசகர்களின் பாராட்டு என எல்லாவகையிலும் தமிழ்ச் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற படம் இதுவரை இதுபோல் இல்லை என எழுதப்படப்போகிறது. இயக்கமும் கலைநோக்கமும் தனித்துவமாக வெளிப்பட்டதை ஏற்றுக் கொண்ட தமிழகப் பார்வையாளர்களின் ஏற்புநிலை ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.