இடுகைகள்

மணவிழா என்னும் நாடகம்

[ 2007 இல் எனது மகளின் திருமணத்தைச் சமஸ்கிருத வார்த்தைகளின்றி நடத்திட நினைத்தேன். அந்நிகழ்வை ஒரு நாடகப்பிரதியை எழுதுவதுபோல எழுதித்திருத்தினேன். நண்பர் முருகேச பாண்டியன் தான் கட்டியங்காரனைப் போலக் காட்சிகளை நடத்திக்காட்டினார். அந்தப் பிரதியை வேண்டிப் பின்னர் சிலர் அவ்வப்போது தொடர்பு கொண்டார்கள். அவர்கள் அந்தப் பிரதியைக் கொண்டு அவர்களின் நாடகத்தை எப்படி மேடையேற்றினார்களோ எனக்குத் தெரியாது. இன்று காலை ஒரு நண்பர் இந்தப் பிரதி வேண்டும் என்றார். எதிர்வரும் 15 ஆம் தேதி மேடையேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். அவரது நெறியாள்கையின்படி நடக்கும் அந்த நாடகத்தின் பிரதி மட்டும் என்னுடையது. நாடகங்கள் இன்பியலாகவும் துன்பியலாகவும் அமைவதைப் போல திருமணங்களும் அதனதன் போக்கில் முடியக்கூடும். அதற்குப் பொறுப்பு நெறியாளர் மட்டுமே. பிரதியை எழுதியவன் அல்ல] ==========================================================================

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

படம்
பெருமாள் முருகனின் மாதொரு பாகனை அப்போது  வாசித்திருக்க வில்லை. மாதொருபாகன் (2010) மட்டுமல்ல; 2011-2013 ஆண்டுகளில் வந்த பல நூல்களைப் படிக்கவில்லை. நான் போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகம் போனது ஒரு காரணம். இங்கே வந்த பிறகு இப்போது புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கும் நாவல்களையே படிக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த 2 ஆண்டுப் பாக்கி அப்படியே தான் இருக்கப்போகிறது. பெருமாள் முருகனின் மாதொரு பாகனை வாசிக்காமல் விட்டதற்குப் பெரிதாக வருத்தமில்லை. ஆனால் அவரின் நிழல்முற்றம் (1993) நாவலை வாசிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டதுண்டு.

நகரும் நதிக்கரையில் நடந்தபடி…

படம்
நதிக்கரையோரக் கிராம வாழ்வாயினும் நகர வாழ்வாயினும் நீரோடும் நீருக்குள் சுழலும் நினைவுகளோடும் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கக்கூடும். கவி கலாப்ரியாவின் மறைந்து திரியும் நீரோடை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நீரின் சிலிர்ப்பைத் தவிர்த்து நினைவின் சுளிப்பைத் தொடரும் பயணமாக மாறிவிட்டதை உணர்ந்தேன். பயணங்கள் எப்போதும் பாதத்தின் நகர்வில் சாத்தியமாகக் கூடியவை. அசையாப் பாதங்கள் அலையா மனதின் உறைவிடம்.