இடுகைகள்

தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்- முன்னும் பின்னும்

படம்
தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு பல்வேறு திசை வழிகளில் சென்று கொண்டிருக்கிறது.நாட்டார் வழக்காற்றியலைப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் உள்ளிட்ட வாய்மொழி மரபு (Oral Tradition) எனவும், சடங்கு சார்ந்த, பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கூத்து, ஆட்டமரபுகள் அடங்கிய கலைகள் (Folk Arts) எனவும், சமய நம்பிக்கையோடு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், அவை சார்ந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஊர்ப்பெயர், மக்கட்பெயர் உள்ளிட்ட பண்பாட்டுக் கோலங்கள் (Customs and Manners) எனவும் பகுத்துக் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன. முறைப்படுத்து வதற்காகவும், ஆய்வு முறைகளுக்காகவும், இப்படிப் பிரிக்கப்பட்டாலும் நாட்டார் வழக்காற்றியல் அனைத்திற்கும் பொதுவான கூறு ஒன்று உண்டு. நிலம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட மக்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து பிரிக்க முடியாதவை இவ்வழக்காறுகள் என்பதுவே அப்பொதுக்கூறு.

நாட்டுப்புற இயலைச் சுற்றி

படம்
தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, வலிமையான பாரதம் எனத் தனக்குப் பிடித்தமான கருத்தியலின் நோக்கிலிருந்து ஆய்வுகளின் பின்னணி நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஜெயமோகனோடு ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கும் இந்தக் கட்டுரை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தீம்தரிகிட இதழில் வந்த கட்டுரையைச் சூழலின் தேவை கருதிப் பதிவேற்றம் செய்கிறேன்.

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்

படம்
மானுடவியல் அறிஞர் விக்டர்டர்னர் ‘சடங்கிலிருந்து அரங்குக்கு’ (From Ritual To Theatre) என்றொரு புகழ் மிக்க சொற் றொடரைப் பயன்படுத்தியுள்ளார். சடங்கு களிலிருந்து தான் நாடகக்கலை உருவாகியது என மேற்கத்தியச் சிந்தனை களும் அதன் வழியான ஆய்வுகளும் சொல்லியுள்ளன. உலகத்திலுள்ள நாடகப் பள்ளி களும் நாடக ஆர்வலர்களும் ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த ஒத்துக் கொள்ளலின் பேரில் அரங்கச் செயல்பாடுகளுக்கு-குறிப்பாக நடிப்புக்கான பயிற்சிகளுக்கு- மரபான சடங்குநிகழ்வுகளோடு உறவும் முரணும் உண்டு என நம்பி பயிற்சிகளில் சடங்கின் கூறுகளை உள்வாங்கிக் கொள்ளவும் செய்கின்றனர்.

தொலைக்காட்சியைப் படித்தல்: பங்கேற்பும் விலகலும்

படம்
நிகழ்த்துக்கலைகள் கண்வழிப்பட்டவை; செவி வழிப்பட்டவை. நிகழ்த்துக்கலைகளுள் ஒன்றான நாடகக் கலை, பாத்திரங்களின் வார்த்தை மொழியின் உதவியால் பிற நிகழ்த்துக் கலைகளிலிருந்து தன்னை வேறு படுத்திக் கொள்கிறது. மேடை நிகழ்வில் உற்பத்தியாகும் வார்த்தைமொழி (Verbal language) காட்சி ரூபம் (Visual) ஒலிரூபம் (Sound) என மூன்று நிலைகளில் தன்னை வந்தடையும் குறிகளின் மூலம் பார்வையாளர்கள் மேடை நிகழ்வோடு பரிவர்த்தனை கொள்கிறார்கள். சரியான பரிவர்த்தனை நடக்கும் நிலையில் பார்வையாளன் திருப்தியாக உணர்கிறான். சரியான பரிவர்த்தனைக்கு நாடகக்கலை எப்போதும் நடிகனையே நம்பியுள்ளது. காமிராவின் வழி பார்க்கப்பட்டு, அடுக்கப்பட்ட பிம்பங்களாக உருமாறி, தொழில்நுட்பத்தின் உதவியால் திரையில் உயிர்பெறும் திரைப்பட ஊடகம் கூடப் பார்வையாளர்களோடு பரிவர்த்தனை ஏற்படுத்த, நடிக பிம்பங்களையே அதிகம் நம்புகிறது.

பாடத்திட்டம்: பாஸ்டன் பாலாவின் கேள்வி: எனது பதிலும் விளக்கங்களும்

படம்
எனது முகநூல் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியாகத் தினத்தந்தியின் செய்தி ஒன்று இருந்தது. அதை எனது சுவரில் ஒட்டிய பாஸ்டன் பாலா என்பவர், ” இது குறித்து தங்கள் எண்ணம்   என்ன ? ”  என்று கேட்டிருந்தார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=740129&disdate=6%2F26%2F2012   பாஸ்டன் பாலா ! உங்கள் கேள்விக்கு முதலில் எனது கருத்தைச் சொல்லி விடுகிறேன்:   ” நவீனத்துவ அடிப்படைகளற்ற நம்பிக்கைகள் சார்ந்து எழுப்பப்படும் கண்டனங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்பது என்னுடைய பொதுவான கருத்து. ’ பக்தர்களின் ” நம்பிக்கைக்கும் , ” பாட்டாளி மக்களின் ” ” தார்மீகக் கோபத்திற்கும் ,   ஆதிக்கக் குழுமங்களின் ” கண்ணசைப்புக்கும் ஏற்பப் பாடத்திட்டத்தை அமைப்பது என முடிவு செய்து விட்டால் பாடத்திட்டம் உருவாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

தீர்ப்பளிக்கப்படாத வழக்கு

[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ] THE JUDGEMENT RESERVED  THE PLAY READING BY  A.RAMASAMY  காட்சி ;1 நாடகம் தொடங்கும்போது முன் மேடையில் ஒரு நபர் சுழல் நாற்காலியில் அமர்ந்துள்ளான். தலையில் கௌபாய் தொப்பி. கையில் ஒன்றரை அடி நீள உருட்டுக்கோல். இருபுறமும் உலோகப் பூண் . அவன் நாடகத்தின் இயக்குநராகக் கருதுபவன்.பெர்முடாஸ் , பேன்ஸி பனியன் என வித்தியாசமான ஆடைகள் அணிந்துள்ளான். அவனுக்கு முன் உயரம் குறைந்த மேசை உள்ளது . அதில் நாடகப்பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவன் பார்வையாளர் களுக்கு முதுகு காட்டி அமர்ந்துள்ளான். பின் மேடை இருட்டாக உள்ளது. பகலில் நடப்பது என்றால் திரையிட்டு மூடி இருக்கலாம். திரைக்குப் பின் ஒரு நீதிமன்றத்தின் மிகக் குறைந்த வடிவம் இருக்க வேண்டும். சுழல் நாற்காலியையும் கையில் உள்ள கோலையும் சுழற்றியபடி திரும்பிய