இடுகைகள்

எழுத்தாளர்களின் இரட்டைக்குதிரைப் பயணம்: பாலாவின் அவன் இவனுக்குப் பின்

படம்
அவன் இவன்–பாலாவின் இயக்கத்தில் வந்துள்ள இந்தப் படம் அவரது முந்திய படங்கள் சந்தித்த விமரிசனங்களைப் போல அதிகமும் நேர்மறை விமரிசனங்களைச் சந்திக்காமல், பல தரப்பினரிடமிருந்தும் எதிர்மறை விமரிசனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் வழியாக அந்தப் படம் வெற்றிப்படமாகவும் ஆகலாம்; விரைவில் தியேட்டர்களை விட்டு வெளியேறவும் செய்யலாம்.

கலாநிதி. கா. சிவத்தம்பி என்னும் பேராசான்

படம்
கல்விப் புலம் வழியாகத் தமிழ் இலக்கியம் படிக்க வரும் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத பெயராகத் தன்னை நிறுவிய ஆளுமை கலாநிதி கா.சிவத்தம்பி. அவரது இடதுசாரி அரசியல் சார்பு பிடிக்காத ஒரு தமிழ் மாணவனும் இலக்கியவாதியும் கூட அவரது நூல்களை வாசிக்கத்தொடங்கினால் மறுதலிக்க முடியாத புலமையை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். அவரது தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் நூலின் வழியாகவே அவரை நான் அறிந்தேன்.

சுந்தரராமசாமியின் கவிதைகளுக்குள் உள்ளிருப்போரும் கேட்போரும்

படம்
‘ மேற்கத்திய கவிதைகளில் மேற்கத்திய விமர்சகர்கள் கண்டு பிடித்த சிறப்புகளைத்தமிழ்க் கவிதையின் மீது யந்திரரீதியாகப் பிணைப்பது தமிழ்த் திறனாய்வு ஆகிவிடாது’ “ நம் இலக்கியச் செல்வங்கள் நமக்குத் தரும் அனுபவங்களின் சாரங்களிலிருந்து நம் இலக்கியக் கோட்பாடுகள் உருவாகி வரவேண்டும்” (ப.22,25/ ந.பி. கலை: மரபும் மனிதநேயமும்.) இந்தக் குறிப்புகள் என்னுள் நிலைகொள்வதற்கு முன்பாகவே வேறு ஒரு கேள்வி அலையடித்துக்கொண்டே இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தக் கேள்வியை நான் எழுதும் இலக்கிய இதழ்கள் கட்டுரை எதிலும் எழுப்பவில்லை. கல்வியியல் புலம் சார்ந்த பேராசிரியர்கள் வாசிக்கக் கூடிய நூலொன்றிற்காக எழுதிய கட்டுரையில் எழுப்பியிருக்கிறேன்.

பாதல் சர்க்கார் : மாற்று அரங்கின் இந்திய அடையாளம்

படம்
2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக் காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைக் கொண்டு வந்த இரண்டு பெண்களைப் பற்றி சூடாகப் பேசிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் வீசிய ஜெ.ஜெயலலிதா என்னும் அசுரக் காற்று ஐந்தாண்டுக்கொரு முறை வந்து போகும் பெருங்காற்று என்பதைத் தமிழ் ஊடகங்கள் அறிந்திருந்ததால் பெரிய ஆரவாரம் எதையும் செய்து விடவில்லை. ஆனால் தேசிய அலைவரிசைத் தொலைக்காட்சிகள் மேற்கு வங்கத்தில் வீசிய மம்தா பானர்ஜி என்னும் புதிய சூறாவளியின் வேக ம் பற்றியும் ஜெ . ஜெயலலிதா என்னும் பெண் சக்தி பற்றியும் பேசிய பேச்சுகள் ஊடகங்க ள் பெருமறதிக்குள் சட்டெனக் குதித்து விடுவதை உணர்த்தின .