இடுகைகள்

ஆமாம் நண்பர்களே! அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அனுபவங்கள் எப்போதும் கடந்தகாலத்தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன. கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குக்  கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அந்த நிகழ்வை அதிசயம் என்று தானே சொல்ல வேண்டும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….

இப்போது நான் நிற்பது பயணச்சீட்டு வாங்குவதற்காக அல்ல; வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக. ஆறு நாட்களுக்கு முன்பு நான் பதிவு செய்த போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது பெயர் நேற்றுத் தான் உறுதியானது. ஆனால் இன்றோ ரத்து செய்யும்படி ஆகி விட்டது. அப்படி ஆனதற்குக் காரணம் நான் அல்ல; இந்திய தேர்தல் ஆணையம் செய்த அறிவிப்பு தான் காரணம். இந்தத் தேர்தல் இன்னும் என்னென்ன திருப்பங்களைக் கொண்ட வரப்போகிறதோ தெரியவில்லை.

விருதுகளின் பெறுமதிகள்

படம்
தைமாதம் தமிழ்நாட்டின் அறுவடைக்காலம். அதனைத் தொடர்வது கொடையின் காலம். கொடை நடைபெறுகிறபோது கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. உடல் உழைப்பில் ஈடுபடும் தமிழக விவசாயிகளுக்குத் தை மாதம் கொண்டாட்டத்தைக் கொண்டு வரும் மாதமாக இருந்த நிலை இப்போது இல்லை. அதற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்ற புத்திஜீவிகளுக்கு தை மாதம் அறுவடைக்காலமாக மாறிவிட்டது.

சமகாலத்தமிழ்ச் சினிமாப் பண்பாடு - ஓர் அலசல்

படம்
ரஜினிகாந்த் நடித்து 1994 இல் வெளிவந்த பாட்ஷா வெற்றிப் படமா ? தோல்விப் படமா ? என்று யாரும் கேள்வி எழுப்பி விடைதேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு நகரங்களிலும் வெளியிடப் பட்ட பெரும்பாலான திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களையும் , பெருநகர அரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடிய படம்.