பொருட்படுத்தப்படாத படங்களுக்குள் கவனிக்கப்பட்ட பாடல்கள் : வெகுமக்கள் ரசனையின் ஒரு பரிமாணம்
2 006 ஆம் ஆண்டிற்கான வசூல் வெற்றி – சூபர் ஹிட் படம் – எது? என்ற போட்டியில் இறங்கும் படம் இன்னும் வரவில்லை. இந்த ஆண்டு முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டின் சூப்பா் ஹிட் பாடல் எது? என்பது முடிவாகிவிட்டது. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்…… என்று தொடங்கும் சித்திரம் பேசுதடி படத்தின் பாடலோடு போட்டியிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த வருடத்திற்குள் இன்னொன்று வரும் என்று தோன்றவில்லை. எப்.எம். தொடங்கிப் பாடல்களை ஒளிபரப்பும் இசை அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப் பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.