பெரும்பான்மைவாதம் சில குறிப்புகள்
மொழிகளின் வளர்ச்சி:இந்தி -தமிழ் மொழியைத் தகவல் தொடர்புக்கான கருவி என்று மட்டும் பார்க்கும் பார்வைக்கு மாறாகச் சமுதாயத்தின் அறிவுப்பெட்டகமாகவும் மொழியைப் பார்க்கவேண்டும் என்பது மொழியைப் பற்றிய மார்க்சியப்புரிதல். ஜே.வி.ஸ்டாலினும் மாசேதுங்கும் மொழியைக்குறித்து விரிவான விளக்கங்களைத் தந்துள்ளனர். ஒரு மொழிக்குப் பொதுமொழி ( standard language ) அடையாளமும் கிளைமொழிகளின் அடையாளங்களும் உண்டு. கிளைமொழி என்பதை வட்டார மொழியெனவும், சமுதாயமொழி எனவும் சொல்வதுண்டு. பொதுமொழி, அம்மொழியைப் பேசும் பலகுழுக்களோடும் தொடர்பு கொள்வதற்கான கருவியாக இருக்கும். ஆனால் கிளைமொழி அடையாளங்கள் தான் பலவற்றைத் தன்னுள்ளே வைத்திருக்கும் பெட்டகமாக இருக்கின்றன. அது பெரும்பாலும் பேச்சு மொழி. அதனைப் பேசும் பல்வேறு குழுக்களின் தனித்துவமான தொழில் சார் அறிவு, பண்பாட்டு நடவடிக்கைகள், கலை, இலக்கிய வெளிப்பாடுகள் போன்றவற்றிற்கான காரணிகளாகக் கிளைமொழிகளே இருக்கின்றன. இந்தியாவில் இந்தி , தமிழ் ஆகிய இரண்டு மொழிகளின் வளர்ச்சியும் இருவேறு பாதைகளைக் கொண்டவை. இந்தி, சம்ஸ்க்ருத மூலத்திலிருந்து உருவான ஒரு கிளைமொழி. தமிழும் திரமிள/திராவிட...