இடுகைகள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

படம்
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கேலியும் கிண்டலுமாகப் பதிவு செய்யும் நபர்கள் தான் எனது முகநூல் வட்டத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படிக் கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தங்களை இடதுசாரிகள் அல்லது இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் எனக் கருதிக் கொள்பவர்கள். நானும் கூட என்னை இடதுசாரிக் கருத்தியலிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் நம்பிக்கை கொண்டவனாகவே இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மற்றவர்களுக்குத் தோன்றுவது போல போகிற போக்கில் புறங்கையால் ஒரு பதிவைப் போட்டுக் கேலியாக ஒதுங்கிப் போக மனம் தயாராக இல்லை.ஐரோப்பாவில் இருப்பதால் இப்படித் தோன்றுகிறது என என்னை அறிந்த நண்பர்கள் நினைக்கக் கூடும்.

ஜோடிப் பொருத்தம்

எளிய வரவேற்பறை. பேராசிரியர் சர்மாவும் திருமதி சர்மாவும் யாருடைய வரவுக்காகவோ காத்துள்ளனர். பேராசிரியர் செய்தித்தாள் வாசிப்பதிலும், திருமதி சர்மா பின்னல் வேலையிலும் கவனமாக உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்க, தேவதத்தன் அவர்களைக் கவனிக்காமல் கடந்து செல்கிறான். அவன் அவர்கள் முன் சென்று, கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறான்.

காதலும் வன்முறையும்: நிகழ்வுகளும் புனைவும்

படம்
” யதார்த்தம் செத்து விட்டது” எனவும் ”நடப்பியல் பாணி எழுத்தின் காலம் முடிந்து விட்டது” எனவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக உச்சரிக்கப் பட்டதைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த உச்சரிப்பின் ஓங்காரம் கேட்டுப் பல எழுத்தாளர்கள் மிரண்டு போய் எழுத்துப் பயணத்தில் எந்தத் திசையில் தொடர்வது எனத் திகைத்து நின்றார்கள். நேர்கோட்டுக் கதைசொல்லலில் தான் யதார்த்தம் உருவாக்கப்படுவதாக நம்பி அதைக் கைவிட்டு நேர்கோடற்ற எழுத்து பாணியை முயன்று பார்த்தனர். அம்முயற்சி கைகூடாத நிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டு ஓய்வில் போய்விட்டார்கள். இன்னும் சிலரோ, அ-புனைவு எழுத்தாளர்களாக மாறிப் போனார்கள்.

சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.

படம்
               மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை.. அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத் தோற்றம் உண்டாக்கப்பட வேண்டும். இந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை . அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது .அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம் (1.).கடல்பயணத்தின் விருப்பமுள்ள அவள் வயதான கிழவன் (2) ஒரு இளைஞனும் இருக்கிறான் (3.) இவர்களோடு சக பயணிகளாக நான்கு பேர் (4-7) (8) சாவும் (9) ச்மாதான சக வாழ்வும் கூடப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். நாடகம் தொடங்கும்போது கப்பல் புயலில் சிக்கியதான நிலை. மணல் தூவி, அதனை உரசுதல், தண்ணீரை அலம்புதல், தரையைப் பெருக்குதல், சொம்பினைத் தட்டி ஒலி எழுப்புதல் போன்றவற்றால் கடலின் நிலையை உருவாக்கலாம். இரண்டு நபர்கள் பனையோலைகளின் உதவியால் கடலில் புயல் வீசும் நிலையை உருவாக்கலாம். பனையோலைகளை வீசுதல், தரையில் அடித்தல், உரசுதல் ஆகியன அவர்களின் செயல்கள். அந்த சப்தங்கள் குறையும்போது ஆல்பட்ரோஸ் கடலின் பரப்பில் வருகி...

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு நேரடி அனுபவம்

படம்
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்களுக்கு அனுமதி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்து விட்டது. ஊடகங்களிலும் மேடைப் பேச்சிலும் எதிராக இருப்பது போலப் பாவனை பண்ணும் ஆளுங் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுங்கூட்டணியை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிகளும் வெளியில் மட்டுமல்ல; பாராளுமன்றத்திலும் எதிர்த்துப் பேசத்தான் போகிறார்கள்.

இந்த ஒரேயொரு கவிதைக்காக....

படம்
உலக மொழிகள் பலவற்றில் இருந்தும் மொழிபெயர்க்கப்பெற்று உலகக் கவிதைகள் என்றொரு தொகுப்பு வெளியிடப்படுகிறது என்றால் தமிழிலிருந்து யார்யாரையெல்லாம் பரிந்துரை செய்வீர்கள்? என்றொரு கேள்வியை ஒரு இந்தியவியல் அறிஞர் என்னிடம் கேட்டார். நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் வார்சா பல்கலைக்கழகத்தில் நடந்த போரும் அமைதியும் இந்திய இலக்கியங்களும் என்ற கருத்தரங்கின் போது சந்தித்த அவருக்கு இந்திய மொழி இலக்கியங்கள் மட்டுமல்லாமல் உலக இலக்கியப் பரப்பின் அகலமும் ஆழமும் தெரிந்திருந்தது என்பதை அவரது கருத்தரங்க உரையும், பிந்திய விவாதங்களும் எடுத்துக் காட்டின. காபி குடிப்பதற்கான இடைவேளையின் போது அந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்டார் என்பதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. “தமிழிலிருந்து நூறு பெயர்களையும் அவர்களது கவிதைத் தலைப்புகளையும் நாளையே எழுதித் தருகிறேன்” என்றேன். “நூறு அல்ல; பத்துப் பேரின் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம்” என்றால் யார் யாரைச் சொல்வீர்கள் என்றார்? உலகக் கவிதை இலக்கியத்திற்கு ஆயிரக் கணக்கான கவிதைகளைத் தரக் கூடிய தமிழிலிருந்து வெறும் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம் என்று சொன்னவுடன...

இடிந்தகரை X கூடங்குளம் : நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்

படம்
”ஆத்துக்குப் போனயா? அழகரைச் சேவிச்சயா?” – இந்தச் சொற்றொடரை மதுரை மாவட்டத்துக்காரர்கள் தன் வாழ்நாளில் பல தடவை உச்சரிக்க நான் கேட்டிருக்கிறேன். வாயால் சொல்லியிருக்கா விட்டாலும் யார் வாயாவது சொல்லத் தங்கள் செவி வழியாகவாவது பலரும் கேட்டிருப்பார்கள். செவிக்கும் வாய்க்கும் பழக்கப்பட்ட இந்தச் சொற்றொடர் தரும் அனுபவத்தை நேரில் பெற விருப்பம் காட்டுவது வட்டாரம் சார்ந்த வாழ்தலின் அடையாளம்.