கதவைத் திறந்து வையுங்கள் ; காற்றுக்காக மட்டுமல்ல.
அதைப் பயணம் எனச் சொல்வதை விடப் பங்கேற்பு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்லூரிக்குத் தரப்பட்ட தன்னாட்சி நிலையை மேலும் தொடரலாமா? இல்லையென்றால் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் பழையபடி கொண்டு வந்து விடலாமா? எனப் பரிந்துரைக்கும் பல்கலைக்கழகக் குழு ஒன்றின் உறுப்பினராகச் சென்றிருந்தேன். நான் அந்தக் கல்லூரிக்குப் புதியவன். பிற பல்கலைக்கழக வல்லுநர் என்ற வகையில் அக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.