இடுகைகள்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்

படம்
நாயகப்பாத்திரம், அதனோடு முரண்படப்போகும் எதிர்நிலைப்பாத்திரம் என அறிமுகப்படுத்தி, சின்னச் சின்ன முரண்பாடுகளால் வளர்வது நல்திறக் கட்டமைப்பு நாடக வடிவம். அதனை உள்வாங்கி உருவாக்கப்படும் திரைக்கதை அமைப்பும் பார்வையாளர்களைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. 

பின் நவீனத்துவம் -சில குறிப்புகள்

படம்
பின் நவீனத்துவம் என்பதை இலக்கியத்தின் ஒருபகுதியாகவோ, இலக்கிய இயக்கமாகவோ நினைக்கும் மனநிலைதான் இங்கே நிலவுகிறது. அதனைச் சொல்லாடல்களாக உச்சரித்தவர்கள் பெரும்பாலும் புனைவு எழுத்தாளர்களாகவும் அதன் எல்லைக்குள் நின்று பேசுபவர்களாகவும் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நான் அப்படி நினைத்ததில்லை. 1997 மார்ச்சில் ‘பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும்’ என்ற கருத்தரங்கைத் திட்டமிட்டபோதே அதனை ஒரு காலகட்டத்தின் மனநிலை என்ற புரிதலோடுதான் அணுகினேன். கட்டுரை வாசிக்க அழைத்தவர்களும் அந்தப் புரிதலோடுதான் கட்டுரைகள் எழுதினார்கள்.  அப்போது தொடங்கி, நமது காலம் நவீனத்துவத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்ற புரிதலோடு இலக்கியத்திற்கு வெளியே நிகழும் நிகழ்வுகளைக் குறித்துப் பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைத் தொகுத்துத் தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.  

அஷ்வகோஷ்: தொடரும் நினைவுகள்

படம்
  காலையில் அஷ்வகோஷின் மரணச்செய்திக்குப் பின் அவர் குறித்த நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன. கடைசியாக அவரைச் சந்தித்தது அவருக்கு ’விளக்கு விருது’ வழங்கும் விழாவின்போது. பார்த்துக் கையைப்பிடித்து மகிழ்ச்சியைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். முழுவதும் இருக்கவில்லை.

அ.ராமசாமி/2024

படம்
  தன்விவரச் சுருக்கம் பேரா. அ ராமசாமி ·        51/3-1. முகம்மதுஷாபுரம், அசோக்நகர், திருமங்கலம், மதுரை, 625706 ·        அலைபேசி -919442328168 /             ramasamytamil@gmail.com கல்விப்புலப் பணிகள் : ·       புலமுதன்மையர்(இணை ), தமிழ்த்துறை, குமரகுரு பன்முக க்கலை அறிவியல் கல்லூரி, கோவை ·       பேராசிரியர் - ஓய்வு /2019,   தமிழியல் துறை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் . திருநெல்வேலி   ·       2010-2013 இருக்கைப் பேராசிரியர் , தமிழ் இருக்கை , வார்சா பல்கலைக்கழகம் , போலந்து ·       1997- 2005 இணைப்பேராசிரியர் , தமிழியல் துறை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ·       1989-1997 - விரிவுரையாளர் , நாடகப்பள்ளி , புதுவைப் பல்கலைக்கழகம் . ·       1987-1989 உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை , அமெரிக்கன் கல்லூரி , மதுரை கவனம் செலுத்தும் துறைகள் ; ·       திறனாய்வு , இக்கால இலக்கியங்கள் , ஊடகங்களும் பண்பாடும் நிர்வாகப்பணிகள் :   ·       துறைத்தலைவர் / நூலகர் பொறுப்பு/ நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு / பதிப்புத்துறை